மேகம் வேறு சொல் | Megam Veru Sol in Tamil
நமது தாய்மொழியான தமிழ் மொழியில் உள்ள வேறு என்ற சொல்லுக்கு அதிக அர்த்தங்கள் மற்றும் மதிப்புகள் உள்ளது. ஏனென்றால் நாம் இப்பொழுது ஒரு பொருளை ஒரு சொல்லை பயன்படுத்தி தான் அழைத்து கொண்டு இருப்போம். ஆனால் அதனை பற்றி நாம் நன்கு ஆராய்ந்து பார்த்தோம் என்றால் அதற்கு பல அர்த்தங்கள் மற்றும் பொருட்களுடன் பல வார்த்தைகள் இருக்கும்.
அதனால் ஒரு சொல்லை பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரிய வேண்டும் என்றால் நாம் முதலில் அந்த சொல்லை பற்றி விரிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் நாம் அன்றாடம் பார்க்கும் அல்லது பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றான மேகம் என்ற வார்த்தைக்கான வேறு சொற்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க..
மேகம் என்றால் என்ன..?
மேகம் என்றால் வானில் தென்படும் நீர்நிறை மண்டலம் என்று பொருள். இந்த நீர்நிறை கூட்டத்திற்கு எப்படி மேகம் என்று பெயர் வைத்தனர் நம் முன்னோர்கள்.
அதாவது வானில் திரியும் மேகத்தைக் காணும்போது நமக்கு மனதில் என்ன தோன்றுகிறது. நாம் அதை எப்படி சொல்லுவோம், நுண்ணிய நீர் துளிகளின் கூட்டம் என்று சொல்லலாம் அல்லது வானில் மிதந்து செல்லும் வெள்ளை நிற கூட்டம் என்று சொல்லலாம்.
இவ்வாற்றை எல்லாம் வைத்து பார்த்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையில் தான் மேகம் என்ற சொல் உருவாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மே – என்றால் மேல் அல்லது மேலே என்று பொருள்.
கம் – என்றால் வெண்மை என்று பொருள் அல்லது நீர் என்று பொருள்.
மேலே திரியும் வெண்மை > மேலே வெண்மை > மேகம்
மேலே இருக்கும் நீர் > மேலே நீர் > மேகம்
மேகம் வேறு சொல்:
தமிழில் மேகத்தை சுமார் 75 சொற்கள் குறிக்கின்றன.
அவையாவன,
“அப்பிதம், அப்பிரம், அமுதம், அம்புதம், அம்போதரம், அவி, ஆயம், இளை, எழிலி, கங்கைதூவி, கதம்பம், கந்தரம், கமஞ்சூல், கம், கரு, கார், காளிகம், குயின், குயில், கொண்டல், கொண்மூ, சலதம், சீதம், செல், சோனம், தாராதரம், தையல், தோயதரம், நாகம், நீகம், நீரதம், பயோதம், பயோதரம், பரிசன்னியம், பருச்சனியம், பாட்டம், பாரணம், புதம், புயல், பெயல், பே, பேகம், பேசகம், மகாநாதம், மங்குல், மஞ்சு, மாகம், மாசி, மாசு, மாரி, மிகிரம், முகில், முதிரம், மெய்ப்பிரம், வனமுதம், வானம், வான், வாரிதம், வாரிநாதம், வாரிவாகம், வார், விசும்பு, விண், விண்டு, வெள்ளைநோய்”
கார்முகிலுக்குரிய வேறுபெயர்கள்:
- கார்முகில்
- கார்மேகம்
- கருமுகில்
- தளி
- கார்
- மால்
- திருமால்
உதவி வேறு சொல் |
நடனம் வேறு சொல் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |