மேலாண்மையின் பிரிவுகள் யாவை | How Many Types of Management in Tamil
நண்பர்களே வணக்கம் இன்று மேலாண்மை என்றால் என்ன என்பதை பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக இதனை பதினொன்னாம் வகுப்பு வணிகவியல் துறை தெரிந்தெடுத்து படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தெரிந்திருக்கும். இந்த பதிவு அனைவருக்கும் உதவியாக இருக்கும். ஏனெற்றால் இப்போது நாம் படிக்கும் துறையை விட வெவ்வேறு துறைகளை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். பொதுவாக நாம் பணிபுரியும் இடத்திலும் மேலாண்மை நடக்கும் அதற்கு நீங்களே மேலாளராக இருப்பீர்கள் இல்லையேற்றால் உங்களுக்கு மேல் உள்ளவர்கள் மேலாளராக இருப்பார்கள். படிக்கும் இடத்திலிருந்து பணிபுரியும் இடம் வரை மேலாண்மை தேவைப்படும். அதனை பற்றி இப்போது தெளிவாக காண்போம் வாங்க.
மேலாண்மை (management) என்பது ஒரு நிறுவனத்தின் தொடர்பான நடவடிக்கைகள் செயல்பாடுகள் போன்ற செயல்களை தொகுத்து வழி நடத்துவதை மேலாண்மை ஆகும்.
பொதுவாக நிறுவனத்தில் மட்டும் இந்த மேலாண்மை நடப்பதில்லை விட்டிலிருந்து வேலைக்கு செல்லும் இடம் வரை மேலாண்மை செயல்படும். ஒரு குடும்பத்தில் அம்மா காலை முதல் இரவு வரை குடும்பத்தை அழகாக வழி நடத்துவார் அதற்கு பெயர் மேலாண்மை எனப்படும்.
நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிவீர்கள் உங்களுக்கு மேல் அதிகாரி உங்களை வழி நடத்தி உங்களிடமிருந்து வேலை வாங்குவதற்கு பெயரும் மேலாண்மை ஆகும்.
மேலாண்மை முக்கியத்துவம்:
நிறுவனமாக இருந்தாலும் சரி பணிபுரியும் இடமாக இருந்தாலும் சரி உங்களின் மேலாண்மை நோக்கம் பணி 24 மணி நேரமும் நிற்காமல் எதோ ஒரு விதத்தில் உங்கள் கடமைகளை செய்துகொண்டு இருக்க வேண்டும்.
மேலாண்மையில் இரண்டு வகைகளாக பிரிக்கலாம் அது முதன்மை பணிகள், துணை பணிகள் என இரு வகையாகலாக பிரிக்கப்படுகிறது.
முதன்மை பணிகள்:
திட்டமிடல்
அமைப்பாற்றல்
பணியமர்த்தல்
இயக்குவித்தல்
செயல் ஊக்கம் அளித்தல்
கட்டுப்படுத்துதல்
ஒருங்கிணைத்தல் என முதன்மை பணியில் ஏழு வித பிரிவுகள் இருக்கின்றன அதனை முதன்மை பணியன் கோட்பாடுகள் ஆகும்.
மேலாண்மை திட்டமிடல் என்பது மேலாண்மை நோக்கமும் ஒரு இடத்திலிருந்து நல்ல நிலைமைக்கு முன்னெடுத்து செல்வதற்கு மேலாண்மை நோக்கம் ஆகும். அதனை திட்டமிட்டு எடுத்து செல்வதற்கு திட்டமிடல் அவசியம் ஆகும்.
மேலாண்மை அமைப்பாற்றல்:
ஒரு அமைப்பின் உறுப்பினர்களை ஒருங்கிணைத்து அவர்களிடையில் நல்ல அணுகுமுறையை ஏற்படுத்தி ஒழுங்குபடுத்துதலை அமைப்பாற்றல் எனப்படும். பணியாளர்களிடம் ஒற்றுமை இருந்தால் தான் அந்நிறுவனம் மேம்பட்டு முன்னிலை இருக்கும். அதற்கு வழிகாட்டுதல் மேலாண்மை அமைப்பாற்றல்.
மேலாண்மை பணியமர்த்தல்:
பொருத்தமான பணியாளர்களை பொருத்தமான பணிகளில் பணியமர்த்துவது. இதன் பணியாகும். அவர்களுக்கான ஊதிய உயர்வு பணிகள் அனைத்தையும் செய்வது பணியமர்த்தல் ஆகும்.
இயக்குவித்தல்:
தற்போதைய நிலையை விட மேல் நிலைக்கு தொடர்ச்சியான இயக்குவித்தல் ஆகும். மேலும் கீழ் நிலையில் பணிபுரியும் நபர்களுடன் தொடர்நிலையில் இருப்பது அதற்கான முயற்சிகளையும் செய்வது இயக்குவித்தலில் அடங்கியுள்ளது.
செயல் ஊக்கம் அளித்தல்:
ஊக்க ஊதிய உயர்வு பதிவி உயர்வு அளிக்கும் முடிவுகளை எடுப்பதற்கு பணியாளர்களின் செயல் திறனை ஊக்கம் அளிப்பதற்கு தேவைப்படுகிறது.
ஒருங்கிணைத்தல்:
நிறுவனத்தை மேம்படுத்த தனி தனி நபருக்கான நோக்கத்தை கட்டுப்படுத்தி அதனை நல்ல முறையில் செயல் படுத்தி முன்னேற்றம் அடைவதற்கு ஒருங்கிணைத்தல் அவசியம் ஆகிறது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>