Ramadan Sirappugal in Tamil
பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நம் பதிவின் வாயிலாக ரம்ஜான் பண்டிகையின் சிறப்புகள் பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரம்ஜான் மாதம் இருக்கிறது. இந்த ரம்ஜான் மாதத்தில் உலகெங்கிலும் இருக்கும் இஸ்லாமியர்கள் உணவு உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். பின் ரம்ஜான் அன்று நோன்புவை முடித்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவார்கள்.
அதுபோல ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் எதிர்பார்க்கிறார்களோ இல்லையோ, நாம் தான் அதிகமாக எதிர்பார்க்கிறோம். அதாவது, நமக்கு ஒரு முஸ்லீம் நண்பர் இருந்தாலும் அவரிடம் இருந்து ரம்ஜான் அன்று பிரியாணி வரும் என்றே எதிர்பார்த்து கொண்டிருப்போம். சரி வாங்க நண்பர்களே நாளைக்கு வேற ரம்ஜான். அதனால் இன்றே ரம்ஜான் பண்டிகையின் சிறப்புகளை தெரிந்து கொள்வோம்.
ரமலான் வரலாறு என்னவென்று உங்களுக்கு தெரியுமா..
ரம்ஜான் பண்டிகையின் சிறப்புகள்:
- அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதமாக ரம்ஜான் மாதம் இருக்கிறது.
- இந்த ரமலான் அல்லது ரம்ஜான் என்று அழைக்கப்படும் நோன்பு காலம் முஸ்லிம்களின் வசந்த காலம் என்றே போற்றப்படுகிறது.
- இந்த மாதத்தின் போது தான் இறைத் தூதரான முகமது நபி அவா்களின் மீது இறைவன் அல்லாஹ் அவா்களால் புனித குரான் இறக்கி வைக்கப்பட்டது என்று இஸ்லாமிய புராணங்கள் கூறுகின்றன.
- பொதுவாக இஸ்லாமியர்கள் சந்திரனின் இயக்கத்தின் அடிப்படையிலேயே மாதங்களைக் கணக்கிடுகிறார்கள்.
- அதுபோல ரமலான் மாதமானது இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும் இருக்கிறது.
- மேலும் நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இந்த ரமலான் மாதம் இருக்கிறது.
- அதுபோல இஸ்லாமியர்கள் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும்.
- இந்த ரம்ஜான் மாதத்தில் கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்டுகின்றன. அதாவது ரமலான் மாதத்தில் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றார் என்று கூறப்படுகிறது.
- இந்த ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் தானம், தர்மம் அதிக அளவில் செய்ய வேண்டும்.
- இல்லாதோருக்கு இருப்போர் அதிகமாக உதவ வேண்டும்.
- நோன்பிருக்கும் காலங்களில் நன்மைகள் அதிகமாக செய்து தீமைகளை விலக்க வேண்டும் என்று குர்ஆனில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ரமலான் மாதம் நன்மையை மட்டும் போதிக்கவில்லை. இஸ்லாமியர்களின் ஒற்றுமையையும் போதிக்கிறது.
மேலும் ரம்ஜான் பண்டிகை அன்று நோன்பு இருக்கக்கூடாது. நீங்கள் ரம்ஜான் நோன்பு காலத்தில் தவறவிட்ட விரதத்தை ரம்ஜான் பெருநாளுக்கு பின்னர் வரும் 6 நாட்களில் நோன்பு இருந்து கொள்ளலாம்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |