வசந்த கால சம இரவு நாள் என்றால் என்ன?

வசந்த கால சம இரவு நாள் என்றால் என்ன?

பருவ காலம் என்பது பொதுவாக வானிலை மற்றும் பகல் நேரத்தின் மாற்றங்களால் குறிக்கப்பட்ட காலமாகும். ஒரு வருடத்திற்குள் நான்கு பருவங்கள் உள்ளன அவை  குளிர்காலம், வசந்த காலம், கோடை மற்றும் இலையுதிர் காலம். இத்தகைய பருவ காலங்கள் எப்படி உருவாகிறது என்று தங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியாது என்றால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சரி இந்த பதிவில் சம இரவு நாள் என்றால் என்ன? மற்றும் பருவ காலங்கள் எப்படி தோன்றுகிறது என்பதை பற்றி படித்தறியலாம் வாங்க..

பருவ காலம்:

சூரியனைச் சுற்றிவரும் பூமியின் ஆண்டுச் சுழற்சி மற்றும் சுழற்சியின் சமதளத்திற்கு தொடர்புடைய பூமி அச்சின் சாய்வு ஆகியவற்றினால் பருவகாலம் ஏற்படுகிறது. மிதமான தட்பவெப்பமுள்ள துருவப் பிரதேசங்களில் பூமியின் மேற்பரப்பை எட்டும் சூரிய ஒளியின் அடர்த்தியில் ஏற்படும் மாற்றம், விலங்குகள் செயலற்றிருத்தல் அல்லது இடம்பெயர்தலுக்கு காரணமாக அமைவது மற்றும் தாவரங்கள் வளர்ச்சியை நிறுத்திக்கொள்வது ஆகியவற்றால் பருவங்கள் இலகுவாக வேறுபடுத்திப் பார்க்கப்படுகின்றன.

மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வடக்கு அரைக்கோளம் சூரியனை எதிர்கொள்வதால் நேரடியான அதிக சூரிய ஒளியில் படுகிறது. இதே நிலைதான் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் தெற்கு அரைக்கோளத்தில் ஏற்படுகிறது.

இது சூரியமண்டல நிலைமாற்றத்தை அதிகரிக்கச் செய்யும் கோடை மாதங்களின்போது வானத்தில் சூரியன் உயரமான இடத்தில் இருப்பதற்கு காரணமாகும். அதாவது பூமி அச்சின் சரிவு ஆகும்.

இருப்பினும் பருவகால தாமதத்தால் ஜூன், ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் வடக்கு அரைக்கோளத்தில் வெப்பமான மாதங்களாகவும், டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் தெற்கு அரைக்கோளத்தில் வெப்பமான மாதங்களாகவும் இருக்கின்றன.

மிதமான வெப்பநிலை மற்றும் துணைத்துருவப் பிரதேசங்களிலான நான்கு காலண்டர் அடிப்படையிலான பருவகாலங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன அத்தகைய நான்கு காலங்கள் தான் இளவேனிற்காலம், கோடைகாலம், இலையுதிர்காலம், குளிர்காலம். சரி அடுத்ததாக வசந்த கால சம இரவு நாள் என்றால் என்ன? என்னத்தை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியலாமா?

வசந்த கால சம இரவு நாள் என்றால் என்ன?

சம இரவு நாள் (Equinox) என்பது சூரியன் நிலநடுக்கோட்டினை கடந்து செல்லும் நாளாகும். ஆண்டுக்கு இருமுறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினைக் கடப்பது நிகழும். இந்நாட்களில் இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும்.

equinoxes and solstices diagram

சம இரவு நாட்கள் என்று நிகழும் என்பது நிலநடுக்கோட்டிலிருந்து எத்தனை தொலைவு தள்ளி அளக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. ஆண்டுதோறும் சாதாரணமாக மார்ச் 20 அன்றும் செப்டம்பர் 22 அன்றும் இவை நிகழும். சில சமயங்களில் இந்த வசந்த கால சம இரவு நாள் மார்ச் மாதத்தில் 19 அல்லது 20 அல்லது 21 அன்று வரும். அதேபோல் வசந்த கால சம இரவு நாள் செப்டம்பர் மாதத்தில் 23-ம் தேதியில் வரும்.

நிலநடுக்கோட்டிற்கிணையான வட்டப்பாதையில் வலம் வரும் செயற்கைக் கோள்கள், இந்நாட்களில் புவிக்கு பின்புறம் வரும் நேரம் சூரியகிரகணத்தைச் சந்திப்பதால் அந்நேரத்தில் சேமிப்பு மின்கலங்களைப் பயன்படுத்தும்பயனர் தகவல்களை கொடுக்கதாம்.

2021 to 2025 ஆண்டுகளுக்கான வசந்த கால சம இரவு நாள்:

இந்த ஆண்டு 2021-இல் மார்ச் 20 ஆம் தேதியன்று வசந்த காலத்தின் தொடக்கமான சமப் பகலிரவு தினம் (Equinox) நிகழ்ந்தது. Equinox என்பது சமமான இரவு என்ற பொருளளிக்கும் லத்தீன் வார்த்தையில் இருந்து வந்த சொல். ஒரு வருடத்தின் இரு நாட்களில் மட்டுமே இரவும் பகலும் சமமான நேரம் கொண்டவையாக இருக்கும். ஒன்று, வசந்தச் சமப் பகலிரவு நாள் (Spring Equinox). மற்றொன்று, இலையுதிர் சமப் பகலிரவு நாள் (Autumn Equinox). இந்த இலையுதிர் சமப் பகலிரவு நாள் தான் இன்று 2021-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் நாளான இன்று பகலும் இரவும் சரி சமமாக இருக்கும்.

இளவேனிற் காலத்தைத்தான் வசந்த காலம் என்று நாம் அழைக்கின்றோம். சரி கீழ் உள்ள அட்டைவனையில் வசந்த கால சம இரவு நாட்கள் 2021 முதல் 2025 வர எப்போதேல்லாம் வருகிறது என்பதை பார்க்கலாம் வாங்க.

வசந்த கால சம இரவு நாள் 2021 – Equinox Day 2021
20.03.2021 (Equinox) சனிக்கிழமை 
23.09.2021 (Fall) வியாழக்கிழமை
2022
20.03.2022 (Equinox) ஞாயிற்றுக்கிழமை
22.09.2022 (Fall) வியாழக்கிழமை
2023
20.03.2023 (Equinox) திங்கட்கிழமை
23.09.2023 (Fall) சனிக்கிழமை
2024
19.03.2024 (Equinox) செவ்வாய்கிழமை
22.09.2024 (Fall) ஞாயிற்றுக்கிழமை 
2025
20.03.2025 (Equinox) வியாழக்கிழமை
22.09.2021 (Fall) திங்கட்கிழமை 

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil