வாயில வசம்ப வெச்சு தேய் என்ற பழமொழிக்கு அர்த்தம் தெரியுமா?
பொதுவாக கிராம புறங்களில் ஒருவரை விளையாட்டாக வாயில வசம்பு வெச்சு தேய்க்க என்று இயல்பாக திட்டுவார்கள். இந்த போன்ற கிண்டலான திட்டுகள் கிராமப்புறங்களில் நிறைய இருக்கிறது. சரி வசம்பை தூக்கி வாயில வைக்க என்ற பழமொழிக்கு அர்த்தம் தெரியுமா? அப்படி தெரியாது என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். வசம்பை தூக்கி வாயில வைக்க என்ற பழமொழிக்கு என்ன அர்த்தம் என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ள போகிறோம் சரி வாங்க பதிவிற்குள் போவோம்.
வசம்பை தூக்கி வாயில வைக்க என்ற பழமொழிக்கு அர்த்தம் தெரியுமா?
வசம்பு என்பது மருத்துவம் நிறைந்த பொருளாகும். குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகளவு பயன்படுத்தும் பொருள் என்றும் சொல்லலாம். சரி இந்த பழமொழிக்கு என்ன அர்த்தம் என்று பார்ப்போம். பேசிக்கொண்டிருக்கும் போது யாராவது அவதூறாக சில வார்த்தைகளை பேசினால், அப்பொழுது வசம்பை தூக்கி வாயில வைக்க என்று கூறுவார்கள். அவ்வாறு சொல்வதற்கு காரணம் என்னவெனர்ல வசம்பினால் உன் வார்த்தைகள் மாறுமா? என்ற எதிர்பார்ப்புக்கு மட்டுமே. இருப்பினும் இப்பொழுது இந்த வார்த்தை கேவலமான வார்த்தையாக மாறிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உண்மையில் வசம்பை வெச்சு தேய்த்தால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும். பிறந்த குழந்தை இருக்கும் வீட்டில் வசம்பு இல்லாமல் இருக்காது. இதற்கு பிள்ளை வளர்ப்பான் என்று மற்றுமொரு பெயர் உண்டு.
இந்த வசம்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பயன்படுத்தலாம்.
மேலும் வசம்பு கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் தொற்றுக்களை சீர் செய்வதற்கும் பயன்படுகிறது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |