வன்னி மரம் கிடைக்கும் இடம்
நண்பர்களே வணக்கம் இன்றைய பயனுள்ள தகவல்களில் வன்னி மரம் பற்றி தான் பார்க்கப்போகிறோம். அது என்ன மரத்தை பற்றி சொல்ல என்ன இருக்கிறது என்று யோசிப்பீர்கள் ஆனால் உள்ளது அது என்னவென்று பார்ப்போம் வாங்க..! இந்த மரம் பற்றிய சுவாரசியமான தகவல்களை பற்றி பார்க்கலாம். பொதுவாக மரம் என்றால் என்ன இருக்கும் அதனுடைய இலை காய்கள் மற்றும் அதனுடைய மரம் போன்றவற்றை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் இந்த வன்னி மரம் அப்படி இல்லை இதை பற்றிய தகவல் நிறைய உள்ளது வாங்க பார்க்கலாம்.!
வன்னி மரம் கிடைக்கும் இடம்:
வன்னி (Prosopis cineraria அல்லது Prosopis Spicigera) என்பது தான் இதனுடைய பெயர் ஆகும். இந்த மரம் அதிகளவு பாலைவனம் பகுதியில் தான் காணப்படும். ஆப்கானித்தான், ஈரான், இந்தியா, ஓமான், பாக்கித்தான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், யெமன் உட்பட மேற்காசியாவிலும் தெற்காசியாவிலும் காணப்படும், அவரையினங்களைச் சேர்ந்த ஒரு பூக்கும் மரமாகும்.
வன்னி மரம் வழிபாடு:
வன்னி மரம் இலைகள் முதல் அனைத்துமே வசியரமான ஒன்றாகும். வன்னி மரம் என்பது அதிகளவு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. சிலருக்கு வன்னி மரமா என்றவுடன் நியாபகத்திற்கு வருவது விருதாச்சலம் என்ற ஊர்தான்.
இந்த ஊரில் விருதகிரி என்ற கோவிலில் பழமையான வன்னி மரம் இருக்கிறது. அந்த வன்னி மர இலைகளை பறித்து தான் அந்த ஆலயத்தை கட்டினார்கள் என்று சொல்வார்கள்.
அது எப்படி என்று அனைவர்க்கும் யோசிப்பீர்கள் அங்கு ஒரு விபசித்தி முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் அங்கேயே வாழ்ந்து கோவிலை கட்டிவிட்டு ஜீவ சமாதி ஆகிவிட்டார். அந்த கோவிலை கட்டுவதற்கு நிறைய வேலையாட்கள் வந்தார்களாம் அப்போது அனைவருக்கும் இந்த முனிவர் அந்த வன்னி மரத்தின் இலையை பறித்து கொடுப்பாராம்.
நன்கு உழைத்தவர்களுக்கு அந்த இலை பொன்னாக மாறுமாம் வியர்வை சிந்தாமல் இருந்தால் அவர்களுக்கு அது இலையாகவே இருக்குமாம். இதற்கு ஆதாரமாக வரலாற்று சான்றிதழும் உள்ளதாம் அதேபோல் கல்வெட்டு சான்றிதழும் உள்ளதாம்.
விருத்தாசலம் விருதகிரி கோவிலுக்கு குழந்தையில்லாதவர்கள் சென்று அங்குள்ள வன்னி மரத்தையும் முனியவரையும் வழிபட்டு வந்தால் நல்லதே நடக்கும்.
அதுபோல் மனநலம் குன்றியவர்கள் அந்த கோவிலுக்கு சென்று வந்தால் அவர்கள் நல்ல முறையில் மாறிவிடுவார்கள் என்றும் சொல்கிறார்கள்.
வன்னி மரம் பயன்கள்:
இந்த மரப்பட்டையில் கஷாயம் செய்து குடித்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதேபோல் வன்னி மரத்தின் இலைகளை ஜூஸ் செய்து குடித்தால் இரத்தத்தை சுத்தம் செய்யும் ஆற்றல் அதற்கு உள்ளது.
மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள் வன்னி மரத்தின் காயை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் குறிப்பாக அதிகமான இரத்த போக்கு ஏற்பட்டால் அதற்கு அப்படியே தீர்வு கிடைக்கும்.
தேவதாரு மரம் பற்றி தெரிந்து கொள்வோமா..?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |