வாக்குரிமை முக்கியத்துவம் என்ன தெரியுமா..?

Advertisement

Vakkurimai Mukkiyathuvam in Tamil

பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் வாக்குரிமை என்றால் என்ன என்பதை பற்றிய பயனுள்ள தகவலை தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாக வாக்குரிமை என்றால் என்ன என்று நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் வாக்குரிமையின் முக்கியத்வம் என்ன என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் இப்பதிவின் வாயிலாக வாக்குரிமை என்றால் என்ன..? மற்றும் வாக்குரிமையின் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

வாக்காளர், ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க

வாக்குரிமை என்றால் என்ன..? 

பொதுவாக வாக்குரிமை என்றால் என்ன என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். அதாவது, வாக்குரிமை என்பது பொது மற்றும் அரசியல் தேர்வுகளில் வாக்களிக்கும் உரிமை ஆகும். சில மொழிகளில் வாக்களிப்பது என்பது இயங்கு வாக்குரிமை என்றும் (Active Suffrage) தேர்தலில் நிற்பது உயிர்ப்பற்ற வாக்குரிமை (Passive Suffrage) என்றும் குறிப்பிடப்படுகின்றன. இந்த இரண்டு முறைகளும் இணைந்து முழுமையான வாக்குரிமை என்று சொல்லப்படுகிறது.

பொதுவாக வாக்குரிமை வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதை ஒட்டியே வரையறுக்கப்படுகிறது. வாக்குரிமை தகுதி பெற்ற குடிமகன்களுக்கு அவர்களது வாக்களிக்கும் வயது நிறைந்தவுடன் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படுகிறது.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சி மன்றம், ஊராட்சி மன்றம் ஆகியவற்றிற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு தான்  தேர்தல்கள் நடைபெறுகின்றன. அப்படி நடத்தப்படும் தேர்தல்களில் நாட்டின் குடிமக்கள் தங்கள் வாக்குகளை வழங்கிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இவ்வாறு வாக்களிப்பதற்கு குடிமக்களுக்கு உள்ள உரிமையை வாக்குரிமை என்று கூறுகின்றோம். மேலும், நாட்டின் வளர்ச்சிக்கும் அரசாங்கத்தின் சிறத்தன்மைக்கும் வாக்குரிமை இன்றியமையாததாக இருக்கிறது.

தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்

வாக்குரிமை முக்கியத்துவம்: 

பொதுவாக நம் நாட்டை ஆள்வதற்குரிய எல்லா அரசியல் அதிகாரங்களும் நாட்டின் குடிமக்களுக்கே உண்டு என்பது நம் குடியரசின் தத்துவமாக இருக்கிறது.

அதுபோல குடிமக்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை வாக்குரிமை மூலம் செலுத்துகின்றனர்.

இந்த உரிமையைப் பயன்படுத்தி குடிமக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துத் தங்கள் சார்பில் அரசை நடத்திவர அவர்களுக்கு அதிகாரம் அளிக்கின்றனர். எனவே, மக்களாட்சி நடைபெறும் நாட்டில் வாக்குரிமை மிக இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.

அதுபோல நம் இந்தியாவில் வாக்களிப்பதற்கு 18 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும்.

வாக்குரிமை இல்லாதவர்கள்: 

  • அயல்நாட்டுத் தூதரகங்களில் பணிபுரியும் அயல்நாட்டவர்களுக்கும், வேறு காரியங்களுக்காகத் தற்காலிகமாக நம் நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கும் வாக்குரிமை கிடையாது.
  • சிலர் ஒரு நாட்டின் குடிமக்களாக விரும்பி வந்து தங்கி இருப்பார்கள். அவர்கள் சில ஆண்டுகள் குடியிருந்த பிறகே அந்த நாட்டின் நிலையான குடிமக்களாக முடியும் என்று ஒவ்வொரு நாட்டிலும் சட்டம் உண்டு.
  • அதற்காக இந்தக் காலக்கெடு முடியும் வரையிலும் அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படாது.
  • அதுபோல கடுமையான குற்றங்களுக்காக சிறையில் தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கும் வாக்களிக்கும் உரிமை கிடையாது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement