வாய்மை எனப்படுவது திருக்குறள்

Vaaimai Enapaduvathu Thirukkural

வாய்மை எனப்படுவது திருக்குறள் விளக்கம்..! 

தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் வருகின்றன. அந்த வகையில் இந்த பதிவில் வாய்மை எனப்படுவது என்ற திருக்குறள் விளக்கத்தை இங்கு நாம் படித்தறியலாம் வாங்க.

Vaaimai Enapaduvathu Thirukkural:

குறள் எண் – 291
பால் – அறத்துப்பால்
இயல் – துறவறவியல்
அதிகாரம் – வாய்மை

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்
தீமை யிலாத சொலல்

கலைஞர் மு.கருணாநிதி உரை:

பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வது தான் வாய்மை எனப்படும்.

மு.வரதராசனார் உரை:

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:

உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.

மணக்குடவர் உரை:

பொய் சொல்லாத மெய்யென்று சொல்லப்படுவது யாதென்று வினவின், பிறர்க்கு யாதொன்றானும் தீமை பயவாத சொற்களைச் சொல்லுதல், வாய்மை யாது என்றார்க்கு இது கூறப்பட்டது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

வாய்மை என்று சொல்லப்படுவது யாது என்றால், அது மற்ற உயிர்களுக்குத் தீங்கினைச் சிறிதும் உண்டாக்காத சொற்களைச் சொல்லுதலாகும்.

நீரின்றி அமையாது உலகு திருக்குறள் பொருள்
அன்பும் அறனும் திருக்குறள்
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் திருக்குறள் பொருள்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com