வாழ்க்கையில் முன்னேற வழிகள் | Valkaiyil Munnera Valigal in Tamil

Valkaiyil Munnera Valigal in Tamil

வாழ்க்கையில் வெற்றி பெற | Valkaiyil Vetri Pera Valigal in Tamil

பணம் மட்டும் தான் வாழ்க்கையா? இந்த கேள்வியை உங்களிடம் நீங்களே கேட்டுக்கொண்டு வாழ்க்கையில் ஓடுங்கள். பதில் கிடைக்கும். நாளைக்கு தேவையான பணம் கைகளில் இருந்தால் மனதில் எந்த வித பதற்றம் இல்லாமல் நாளினை நிம்மதியாக கடந்து வரலாம். இதுவே கையில் பணம் இல்லையென்றால் டென்ஷன் அதிகரிக்கும், பயம், கை கால் நடுக்கம், செயலில் கவனம் இருக்காது இது போன்ற பல இன்னல்களை சந்திக்க நேரிடும். அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளை இன்றே கொஞ்சம் கஷ்டப்பட்டு முடித்துவிட்டோம் என்றால் மறுநாள் வேலை பார்ப்பதற்கு நம் உடல் ஆற்றலானது இரண்டு மடங்காக அதிகரிக்கும். நாளைக்கு தேவையான பணத்தை இன்றை கையில் வைத்துக்கொண்டால், அடுத்த நாள் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆற்றல் தானாகவே அதிகரித்துவிடும். நாம் வீட்டிலோ அல்லது வெளியிலோ யாரும் இல்லாமல் தனியாக அமர்ந்திருக்கும் போது வாழ்க்கையை பற்றி சற்று யோசித்து பார்க்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் 2 வருடத்திற்கு முன்பு நாம் எந்த நிலையில் இருந்தோம் இப்போது வளர்ச்சி அடைந்து இருக்கிறோமா என்றெல்லாம் உங்களுக்குள் நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள். இதற்கு பதில் வெளியில் உள்ளவர்களிடம் இல்லை. உங்களிடம் தான் இருக்கிறது. உங்கள் மனதில் ஓடுகிற எண்ணம் தான் உங்கள் வாழ்க்கையே வளர்ச்சி நிலைக்கு கொண்டுபோகும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு சில டிப்ஸ் உங்களுக்காக..!

தன்னம்பிக்கை கட்டுரை

வாழ்க்கையில் முன்னேற என்ன வழி:

 valkaiyil vetri pera tamil tips

 

 1. மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கு தெரியாத விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள். அடுத்தவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும். உங்களுடைய வேலைகளில் அலட்சியம் இல்லாமல் எப்போதும் ஆர்வமாக இருங்கள். எந்த ஒரு செயலிலும் நீங்கள் ஆழ்ந்து ஆர்வமாக செய்யும் போதுதான், உங்களுக்கான வெற்றி மிக விரைவில் கைக்கூடி வரும். 
 2. மனிதர் என்றாலே அனைவருக்கும் வாழ்க்கையில் குறிக்கோள் என்பது இருக்கும். நான் டாக்டராக ஆக வேண்டும், கலெக்டர், காவல் துறை அதிகாரி ஆக வேண்டும் என்று பலருக்கும் பல குறிக்கோள் இருக்கும். அந்த குறிக்கோளை எந்த சூழலுக்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள். இன்று வெற்றி அடைந்த நபர்கள்  எல்லாம், ஒரு காலத்தில் தங்கள் குறிக்கோளை விட்டுக் கொடுக்காமல் கஷ்டப்பட்டு உழைத்தவர்கள் தான்.
 3. மற்றவர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் எப்போதும் கவனம் தேவை. நீங்கள் யோசிக்காமல் பேசும் சில வார்த்தைகள், உங்கள் எதிர்காலத்தையே பாழாக்காலம்.
 4. நேரத்தினை வீணடிக்காமல் கடைப்பிடிக்கவும். வெளியில் எந்த இடத்திற்கு சென்றாலும் சரியான நேரத்திற்கு செல்லுங்கள்.
 5. எப்போதும் செய்யும் வேலைகளில் Hard Work செய்வதை தவிர்த்து, ஸ்மார்ட் வொர்க் செய்வதை பின்பற்றுங்கள். 
 6. உங்களை பிடிக்காத, உங்களை கவிழ்க்கும் வேலைகளை செய்யும் நபர்களை சமாளிக்கும் தந்திரங்களை கற்றுக் கொண்டு அதனை செயல்படுத்துங்கள்.
 7. உங்களுக்கென்று தனித்துவமான குறிக்கோளை வைத்துக்கொள்ளுங்கள். அதே நேரத்தில் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு, அதை நோக்கி முன்னேறுங்கள்.
 8. வெளியில் எங்கு சென்றாலும் மற்றவர்களிடம் Interaction-ஐ வளர்த்துக் கொள்ளுங்கள். இந்த தொடர்புகள் நீங்கள் கஷ்டத்தில் இருக்கும் போது, உங்களுக்கு கண்டிப்பாக கைக்கொடுக்கும்.
 9. இன்றைய உலகமானது போட்டியில் தான் போய் கொண்டிருக்கிறது. முக்கியமாக வேலை, தொழில் போன்றவற்றில் போட்டி அதிகமாகிவிட்டது. ஆனால் சில குறிப்பிட்ட பழக்கவழக்கங்கள் இல்லாத காரணத்தினால் சில இளைஞர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாமல் தவிக்கின்றனர். அப்படிப்பட்ட இளைஞர் நீங்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கு தான்..!
 10. உங்கள் நடை, உடை, பாவனைகளை மாற்றிக் கொள்ளுங்கள். மற்றவர்கள் உங்களை பார்க்கும் போது ஜென்டில் மேன் என்ற எண்ணம் அவர்களுக்கு வர வேண்டும். 
 11. உங்களுக்குள் இருக்கும் நம்பிக்கை உங்கள் பேச்சுத்திறனில் தெரிய வேண்டும். இந்த குணம்தான் உங்கள் வெற்றிக்கான முதல் படியாக அமையும்.
தன்னம்பிக்கை கதைகள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil