வினா எத்தனை வகைப்படும்? Vina Vagaigal in Tamil

Vina Vagaigal in Tamil

வினா வகைகள் எத்தனை?

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் இலக்கணம் சம்பந்தமான வினா வகைகள் எத்தனை வகைப்படும் என்பதை பற்றித்தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். ஒன்றை பற்றி தெரிந்துக்கொள்ள ஒருவரை ஒருவர் வினாவுகின்றனர். அவ்வாறு வினாவும் வினா ஆறு வகைப்படும். அவை, அறிவினா, அறியாவினா, ஐயவினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா ஆகும். ஒவ்வொரு வினாவையும் பற்றி விரிவாக எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம் வாங்க.

தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?

வினா என்றால் என்ன:

வினா என்பது ஒரு கேள்வியை குறிப்பது தான். அந்த வினாவானது மொத்தம் ஆறு வகைப்படும்.

1. அறிவினா
2. அறியா வினா
3. ஐயவினா
4. கொளல் வினா
5. கொடை வினா
6. ஏவல் வினா

வினா வகைகள் உதாரணங்களுடன் விளக்குக:

1. அறிவினா:

நம்முடைய அறிவோடு பிறர் அறிவை ஒப்பிட்டுப் பார்ப்பதற்க்கும், மற்றவர் அறிவை  அளந்தறியவும், அறியாதவர்க்கு உண்மைப் பொருளை உணர்த்தவும், நமக்கு தெரிந்த  ஒரு பொருள் பற்றிப் அடுத்தவர்களிடம் கூறுவது அறிவினா ஆகும்.

எ.கா: ‘இப்பாடற் பொருள் யாது?’ என ஆசிரியர் மாணவனிடம் கேட்டல், அவன் அறிவை அளந்தறியவும், உண்மைப் பொருளை அவனுக்கு உணர்த்தவுமாதலின் இவ்வினா அறிவினாவாகி விட்டது.

2. அறியா வினா:

‘இப்பாடற்பொருள் யாது?’ என மாணவன் ஆசிரியரிடம் வினாவுதல்.

எ.கா: மாணவன் தனக்கு தெரியாத விஷயத்தை தெரிந்துக்கொள்ள வினாவுவதால் அறியா வினாவாகும்.

3. ஐயவினா:

‘தொலைவில் இருப்பது எருதோ? பசுவோ?’

எ.கா: இதுவோ, அதுவோ என்று ஐயுற்றுத் தன் பயத்தை போக்கிக் கொள்ள வினாவுவதால் ஐய வினாவாகும்.

இலக்கணம் என்றால் என்ன?

4. கொளல் வினா:

ஒரு பொருளை வாங்கிக்கொள்ளும் பொருட்டுப் மற்றவரிடம் வினாவும் வினா கொளல் வினாவாகும்.

எ.கா: ‘பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் புத்தகக் கடைக்குச் சென்று தமிழ் புத்தகம் உள்ளதோ?’ என்று கேட்பது கொளல் வினாவாகும்.

5. கொடை வினா: 

இல்லாத ஏழை எளியவற்கு ஒரு பொருளைக் கொடுத்து வழங்குவது கொடை வினாவாகும்.

எ.கா: ‘புலவரிடம் பொருள் இல்லையோ?’ என்று மன்னன் புலவரிடம் கேட்டல் கொடை வினாவாகும்.

6. ஏவல் வினா:

ஒரு செயலைச் செய்யுமாறு ஏவதற்பொருட்டு வினாவப்படும் வினா ஏவல் வினாவாகும்.

எ.கா: ‘ஆசிரியர் மாணவனிடம் இந்த பாடலை மனப்பாடம் செய்து விட்டாயா?’ என்று கேட்பது ஏவல் வினா ஆகும். மாணவன் மனப்பாடம் செய்யவில்லை என்று கூறினால், அவன் மனப்பாடம் செய்யும்படி ஏவவும், மனப்பாடம் செய்து விட்டேன் என்று கூறினால் ‘பார்க்காமல் எழுதிக்காட்டு’ என்று ஏவவும் வினாவினாராதலின் இது ஏவல் வினாவாயிற்று.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil