விவசாயி பற்றி சில வரிகள் | Vivasayi Patri Sila Varigal in Tamil
விவசாயம் இல்லாமல் நாட்டில் எதுவும் இல்லை. ஒவ்வொரு நாட்டின் முதுகெலும்பு விவசாயம். அப்படி நம் உயிரை காக்கும் விவசாய தொழில் செய்யும் விவசாயிகள் பற்றி நாம் அனைவருமே அறிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு விவசாயியும் போற்றப்படக்கூடியவர்கள். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் விவசாயி பற்றி சில வரிகள் தொகுத்து கொடுத்துள்ளோம்.
உலகில் எத்தனை தொழில்கள் இருந்தாலும், நமக்கு உணவளிக்கும் தொழில் விவசாயம். விவசாயியாக இருப்பது மிகவும் கடினம். தினமும், வெயிலில் உழைத்து இவ்வுலகில் உள்ளவர்களுக்கு உணவு அளிக்கும் உன்னத மனிதர்கள் விவசாயிகள்.
விவசாயி பற்றிய தகவல்:
- விவசாயி உழவர் என்று அழைக்கப்படுகிறார்கள்.
- விவசாயி என்பவர் நிலத்தை உழுது உணவு பொருட்களான நெல் உட்பட பல்வேறு தானியங்களை உற்பத்தி செய்பவர்கள் ஆவர்.
- விவசாயிகளை விவசாயி என்று கூறுவதை விட உழவர் என்ற பெயர், மிகவும் உயர்ந்தவர் என்ற பெரும் பட்டத்தை பெற்று தருகிறது.
- விவசாயிகள் நம் நாட்டின் முதுகெலும்பு.
- சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. என்பது திருக்குறள். - உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.என்பதே இதன் பொருள் ஆகும்.
- விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாப்பதற்கும், பொருளாதார நிலைப்புத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைப்பதற்கும், உணவின் தரம், மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அயராது உழைக்கிறார்கள்.
- மழை வெயில் என பாராமல் தினமும் உழைக்கக்கூடியவர்கள். மற்ற தொழில் செய்பவர்களுக்கு கூட வாரத்தில் ஒரு நாள் ஓய்வு இருக்கும். ஆனால், விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஓய்வு என்பதே கிடையாது. காலை சூரிய உதயத்திற்கு முன்பாகவே வயலிற்கு சென்று சூரியன் மறையும் வரை உழைப்பார்கள்.
- பருவ நிலையை பொறுத்தே இவர்களின் வேளாண்மை உள்ளது. தற்போது உள்ள காலகட்டத்தில் காலத்திற்கு ஏற்ற பருவநிலை இல்லாததால் வேளாண்மை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.
- நிலத்தில் விளையும் உணவு பொருட்களை பொறுத்தே விவசாயிகளின் நிதிநிலைமை இருக்கும். பெரும்பாலான நேரங்களில் நிலத்தில் பயிரை விளைவிக்க செலவு செய்ததை விட, அதில் கிடைக்கும் லாபம் குறைவாக தான் இருக்கும். அதாவது, வரவை விட செலவு அதிகமாக இருக்கும்.
- இருந்தாலும், விவசாயம் இல்லையென்றால் இவ்வுகளில் உயிர்கள் வாழ முடியாது. உயிர் வாழ்வதற்கு அடிப்படையானது உணவு. அப்படிப்பட்ட உணவு பொருட்களை தயார் செய்து கொடுக்கும் விவசாயிகள் என்றும் உயர்ந்த மனிதர்கள்.
- ஒவ்வொரு விவசாயியையும் மதிப்பது நம் ஒவ்வொருவருடைய கடமை.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |