10 கட்டளைகள்
நாம் பள்ளி பருவத்தில் படிக்கும் போது ஆத்திசூடி படித்திருப்போம், இதில் இருக்கும் வார்த்தையானது தாய், தந்தை, ஆசிரியர் போன்றவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கும். ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு கோட்பாடு இருக்கும், அதாவது இந்து மதத்தில் பகவத் கீதையை பின்பற்றுவார்கள், முஸ்லிம்கள் குறானை பின்பற்றுவார்கள், கிறிஸ்துவர்கள் பைபிளை பின்பற்றுவார்கள்.
இஸ்ரவேல் தேசத்தார் எகிப்திலிருந்து வெளியேறிய சில நாட்களில் தேவன் கொடுத்தப் பத்து பிரமாணங்களே இந்த பத்துக் கட்டளைகள் ஆகும். இந்த பத்து கட்டளைகளும் பழைய ஏற்பாட்டில் காணப்படும் 613 பிரமாணங்களின் யதார்த்தமான சுருக்கமே ஆகும். முதல் நான்கு கட்டளைகளும் தேவனோடு நமக்கு இருக்க வேண்டிய உறவு தொடர்பானது. கடைசியான ஆறு கட்டளைகளும் பிறறோடு நமக்கு இருக்க வேண்டிய உறவை பற்றியது.
10 கட்டளைகள்:
முதல் கட்டளை:
என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்
இரண்டாம் கட்டளை:
ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்
மூன்றாம் கட்டளை:
உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக
நான்காம் கட்டளை:
ஓய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக
ஐந்தாம் கட்டளை:
உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக
ஆறாம் கட்டளை:
கொலை செய்யாதிருப்பாயாக
ஏழாம் கட்டளை:
விபசாரம் செய்யாதிருப்பாயாக
எட்டாம் கட்டளை:
.களவு செய்யாதிருப்பாயாக
ஒன்பதாம் கட்டளை:
பிறனுக்கு விரோதமாக பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக
பத்தாம் கட்டளை:
பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |