வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

விவசாயம் பற்றிய 10 வரிகள் | 10 Lines About Agriculture In Tamil

Updated On: November 20, 2025 12:34 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

விவசாயம் பற்றிய 10 வரிகள்

இன்றைய பதிவில் விவசாயம் பற்றிய 10 வரிகள் பற்றி பார்க்க போகிறோம். விவசாயம் இல்லாமல் நாட்டில் எதுவும் இல்லை. ஒவ்வொரு நாட்டின் முதுகெலும்பு விவசாயம். அப்படி நம் உயிரை காக்கும் விவசாய தொழில் செய்யும் விவசாயிகள் பற்றி நாம் அனைவருமே அறிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு விவசாயியும் போற்றப்படக்கூடியவர்கள்.உலகில் எத்தனை தொழில்கள் இருந்தாலும், நமக்கு உணவளிக்கும் தொழில் விவசாயம். விவசாயியாக இருப்பது மிகவும் கடினம். தினமும், வெயிலில் உழைத்து இவ்வுலகில் உள்ளவர்களுக்கு உணவு அளிக்கும் உன்னத மனிதர்கள் விவசாயிகள்.நாம் சாப்பிடும் உணவிற்கு அடிப்படையாக இருப்பது வேளாண்மை தான்.

பல்வேறு கால சூழ்நிலையினால் விவசாயமானது பாதிப்படைந்து வருவதால் எதிர்காலங்களில் விவசாயத்தின் முக்கியத்துவம் மிகவும் பயன்படும்.ஒவ்வொரு மண்ணின் மைந்தனுக்கு தேசப்பற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு விவசாயத்தின் மீதான பண்பும் இருக்க வேண்டும். விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாப்பதற்கும், பொருளாதார நிலைப்புத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைப்பதற்கும், உணவின் தரம், மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அயராது உழைக்கிறார்கள். ஒவ்வொரு விவசாயியையும் மதிப்பது நம் ஒவ்வொருவருடைய கடமை. இன்றைய பதிவில் விவசாயம் பற்றிய 10 வரிகள் பற்றி பார்க்கலாம் வாங்க…

விவசாயம் பற்றிய 10 வரிகள்:

இலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள்! - Vivasayam | விவசாயம்

  •  விவசாயம் என்பது உணவு மற்றும் தீவனத்திற்காக பயிர்களை பயிரிடுவதை உள்ளடக்கியது. 
  • உணவுக்கான முக்கிய ஆதாரமாக விவசாயம் இந்திய பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.
  • பால்பண்ண துறை, கோழிப்பண்ணை , மீன் பிடித்தல் போன்றவை விவசாயத்தின்  துணை துறையான கால்நடை வளர்ப்பின் கீழ் வருகின்றன
  • அறிவியல் வளர்ச்சி மற்றும் மேம்படுத்தப்பட்ட விவசாய நுட்பங்கள் இந்தியா பசுமை புரட்சியை அடையவும், உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையவும் உதவியது. 
  • உலகிலையே கோதுமை மற்றும் நெல் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • இந்தியா உலகின் மிகப்பெரிய மசாலா பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடாகவும் உள்ளது. முதன்மையான இஞ்சி , ஏலக்காய், கறிவேப்பிலை, புளி, பெருஞ்சீரகம் போன்ற பொருள்களை ஏற்றுமதி செய்கிறது.
  • இந்தியாவில் கோதுமை மற்றும் கரும்பு உற்பத்தியில் உத்திரப்பிரதேசம்  முதலிடத்தில் உள்ளது.
  • காலநிலை மாற்றம் மற்றும் மாசுபாடு விவசாய விளைப்பொருள்களின் தரம் மற்றும் விளைச்சலை மோசமாக பாதித்துள்ளன.
  • பருவநிலை மாற்றம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5% சரிவுக்கு வழிவகுக்கும். இந்தியா காரிஃப் மற்றும் ரபி பெயர்களை உற்பத்தி செய்கிறது. 
  • விவசாயம் உணவு உற்பத்தியில் முதன்மையான ஆதாரம் ஆகும். அதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் அது உணவு விநியோகத்தையும் நமது இயல்பான வாழ்கை முறையையும் மோசமாக பாதிக்கும். 

விவசாயம் கவிதை | Vivasayam Quotes in Tamil

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil






 

Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now