ஔவையார் பற்றி 10 வரிகள்.! | 10 Lines About Avvaiyar in Tamil

Advertisement

Few Lines About Avvaiyar in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஔவையார் பற்றிய 10 வரிகள் பற்றி கொடுத்துள்ளோம். ஔவையார் என்றாலே நம் நினைவிற்கு வருவது ஆத்திசூடி தான். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஔவையார் என்று கேட்டால் ஆத்திச்சூடியை இயற்றியவர் என்று கூறுவார்கள். ஆனால், இதனை தவிர்த்து வேறு சில தகவல்கள் எதுவும் ஔவையார் பற்றி நம்மில் தெரிந்திருக்காது. ஆகையால் அதனை தெரிந்துகொள்ளலாம் விதமாக இப்பதிவு அமையும்.

ஔவையார் என்பவர், எல்லோருக்கும் நன்கு அறிமுகமான பெண் புலவர் ஆவர். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று கூறியவர் ஔவையார். கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி அழகாக கூறியிருப்பார். மேலும், ஔவையார் பற்றி அறியாத சில தகவல்களை பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.

ஔவையார் பற்றிய சிறுவர் கட்டுரை

ஔவையார் பற்றி 10 வரிகள் | 10 Lines About Avvaiyar in Tamil:

ஔவையார் பற்றி 10 வரிகள்

  1. ஒளவையார், சங்ககால பெண் புகைவர்களுள் ஒருவர். இவர் மன்னர் அதியமானின் நண்பரும் ஆவர்.
  2. இவர் 12 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தார்கள் என்று கூறப்படுகிறது.
  3. இவர், பகவன் அதி தம்பதியருக்கு ஏழாவது குழந்தையாகப் பிறந்தவர். ஆனால், இவர் பெற்றோர்களிடம் வளராமல் பாணர்களிடம் வளர்ந்து ஊர் ஊராகச் சென்று பாடியவர் என கருதப்படுகிறது.
  4. ஒளவையார் அவர்கள் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
  5. ஆத்திசூடி – இது ஒளவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். அறம் செய்ய விரும்பு என தொடங்கி மொத்தம் 109 பாடல்கள் ஆத்திசூடியில் உள்ளன.
  6. கொன்றை வேந்தன் – கொன்றை வேந்தன் ஒளவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என தொடங்கி இதில் மொத்தம் 91 பாடல்கள் உள்ளது.
  7. மூதுரை – இது ஒளவையாரின் நீதி நூல் ஆகும். பழமையான அறக்கருத்துக்களை கொண்டிருப்பதால் இது மூதுரை (மூப்பு +உரை) என்று அழைக்கப்படுகிறது. இதற்கு வாக்குண்டாம் என்ற மற்றொரு பெயரும் உள்ளது. இந்நூலில் 30 வெண்பா பாடல்கள் அமைந்துள்ளது.
  8. திருக்குறள் பற்றிய ஒளவையின் மேற்கோள் – “அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” அதாவது, கடுகை இவ்வித சிறியது அணு, அதன் நடுவே துளைபோட்டு அத்துளையினுள் ஏழு கடல்களின் நீரையும் புகுத்திக் குறுகிய பின் எவ்வாறாயிருக்குமோ அது போலத்தான் திருக்குறள் என்கிறார் ஒளவையார்.
  9. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று கூறியவர் ஒளவையார். சங்கப்புலவர் பாடல்தொகை வரிசையில் இவர் 9-ஆம் இடம் பெற்றுள்ளார்.
  10. இவர் பாடிய 59 பாடல்கள் சங்கநூல்களில் இடம்பெற்றுள்ளன. அகநானூறு,குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு ஆகிய தொகுப்பு நூல்களில் அவை இடம்பெற்றுள்ளன.சங்ககால ஔவையார் நம் கற்பனையில் உள்ளவர் போல முதுமைக் கோலத்தவர் அல்லர். இளமை ததும்பும் விறலி.

ஔவையார் அருளிய விநாயகர் அகவல்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement