தீபாவளி பற்றிய 10 வரிகள்.!

Advertisement

தீபாவளி பற்றிய 10 வரிகள் | 10 Lines About Diwali in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தீபாவளி பற்றிய 10 வரிகள் பற்றி பின்வருமாறு தெரிந்துகொள்ளலாம் வாங்க. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்று. அதிலும், குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகஇருக்கும். இந்நாளில், புதிய ஆடை அணிவதாலும், பட்டாசு வெடிப்பதாலும் , பல்வேறு இனிப்பு பலகாரங்களை செய்வதாலும், தீபாவளி பண்டிகை அனைவருக்கும் பிடித்த பண்டிகையாக இருக்கிறது.

தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு பல்வேறு புராண கதைகள் காரணமாக இருக்கின்றன. தீபாவளி பண்டிகை ஆனது, இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளிலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தின் மிக முக்கிய பண்டிகையாக தீபாவளி பண்டிகை இருக்கிறது.

தீபாவளி பண்டிகை கட்டுரை

10 Points About Diwali in Tamil:

தீபாவளி பற்றிய 10 வரிகள்

  1. தீபாவளி, இந்தியாவின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். தீபாவளி அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் கொண்டாடப்படும் விழா ஆகும்.
  2. தீபாவளி பண்டிகையை தீபத் திருநாள், தீப ஒளித்திருநாள் என்றெல்லாம் அழைப்பார்கள்.
  3. கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் 17 ஆம் தேதியிற்கும் நவம்பர் 15 ஆம் தேதியிற்கும் இடைப்பட்ட நாட்களில் தீபாவளி பண்டிகை வருகிறது.
  4. வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
  5. தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு பல்வேறு புராண கதைகள் கூறப்படுகிறது.
  6. அரக்கனான நரகாசுரனை வதம் செய்யப்பட்ட நாள் தான் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
  7. இராமாயணத்தில் இராமன் இராவணனை போரில் வென்று, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு மனைவி சீதாவுடனும் தம்பி லட்சுமணனுடன்  அயோத்திக்கு திரும்பிய  நாளை மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றி திருவிழாக கொண்டாடினார்கள்.
  8. மக்கள் தீபாவளி தினத்தன்று, தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, விளக்குகள் ஏற்றி, கோலமிட்டு, புத்தாடை அணிந்து வழிபாடுவார்கள்.
  9. தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு கடவுளை வாங்குவார்கள். முக்கியமாக, புத்தாடை அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும், வீட்டில் இனிப்பு பலகாரங்கள் செய்து, ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு கொண்டாடுவார்கள்.
  10. இந்துக்கள் மட்டுமின்றி, சீக்கியர்களும் சமணர்களும் கூட தீபாவளி பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.!

தீபாவளி பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரசியமான தகவல்கள்..

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement