10 Lines About Kambar In Tamil..! | கம்பர் பற்றிய 10 வரிகள்..!
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் கம்பர் பற்றிய 10 வரிகள் பற்றி பதிவிட்டுள்ளோம். கம்பர் என்றாலே நம் நினைவிற்கு வருவது கம்பராமாயணம் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கம்பராமாயணத்தை படித்திருப்போம். கம்பரை பற்றியும் நாம் எல்லோரும் அறிந்திருப்போம். கம்பரை பற்றி தெரியாத ஒரு சில விஷயங்களை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கம்பர் தமிழ் கவிஞர் மற்றும் நூலாசிரியர் ஆவார். இவர் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வால்மீகி இராமாயணத்தைத் தழுவி, தமிழில் இராமாவதாரம் என்ற நூலை எழுதினார். இந்த தமிழ் கவிஞரை பற்றி மேலும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
கம்பராமாயணம் பற்றிய குறிப்பு | Kamba Ramayanam in Tamil
கம்பர் பற்றிய 10 வரிகள்:
- கம்பர் கவிச்சக்கரவர்த்தி என்றும் அழைக்ப்படுகிறார். இவர் சோழநாடு தேரெழுந்தூரில்(நாகை மாவட்டம்) பிறந்தார்.
- கம்பர் வாழ்ந்த காலம் 1180 முதல் 1250 வரை.
- கம்பரை ஆதரித்த வள்ளல் சடையப்ப வள்ளல் ஆவார்.
- கம்பர் சோழ மன்னரின் அவைக்களப் புலவராகவும் விளங்கினார்.
- கவிப்பேரரசர், கவிச்சக்கரவர்த்தி, கல்வியில் பெரியவர் கம்பர், செய்நன்றி மறவாச் செம்மல், தமிழ் வேந்தன் ஆகியவை கம்பரின் சிறப்பு பெயர்கள் ஆகும்.
- கம்பராமாயணம், சிலையெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, மும்மணிக்கோவை ஆகியவை கம்பரின் படைப்புகள் ஆகும்.
- கம்பன் பழமொழி – கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்.
- 10,000 கவிதைகளை முத்தாக அள்ளித்தந்தவன் கம்பன் என்று கண்ணதாசன் கம்பரை பாராட்டியுள்ளார்.
- வீசும் தென்றல் காற்றுமுண்டு கையில் கம்பன் கவியும் உண்டு என்று கவிமணி கம்பரை பாராட்டியுள்ளார்.
- கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று பாரதி கம்பரை பாராட்டியுள்ளார்.
கம்பராமாயணம்:
கம்பர் இயற்றிய நூல்களில் தலைசிறந்த நூல் கம்பராமாயணம் ஆகும். வால்மீகி எழுதிய இராமாயணத்தில் 24,000 ஈரடிகள் இருந்தன, ஆனால் கம்பர் அதை எளிமையாக்கி 11,000 சந்தங்களில் தேவைக்கு ஏற்ப இடங்களை மாற்றி அமைத்து அதனை முறைப்படுத்தி வெளியிட்டார்.
இந்த கம்ப ராமாயணத்தினை படித்த புலவர்கள் கூட கம்பரை தங்களது மனதார வாழ்த்தி இருக்கிறார்கள். கம்ப ராமாயணத்தில் ராமர் முடிசூடும் வரை மட்டும் கம்பர் எழுதினார். அதன் பிறகு ஒட்டக்கூத்தரால் எழுதப்பட்டது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.
கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர்
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |












