தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பழமொழிகள் Pdf

Advertisement

10 பழமொழிகள் தமிழ்

பள்ளி பருவத்தில் பழமொழியை படித்திருப்போம். அதற்கு பிறகு நாம் பேசும் போது பழமொழியை கூறியிருப்போம். நம் வீட்டில் முன்னோர்கள் இருந்தால் அவர்கள் ஏதாவது செய்தி சொல்வதாக இருந்தாலே பழமொழியை கூறி தான் சொல்வார்கள். அந்த பழமொழிகளை நாம் பெரிதாக எடுத்து கொள்ள மாட்டோம். உனக்கு வேற வேலையில்லை என்று சொல்லி விட்டு கடந்து விடுவோம். ஆனால் ஒவ்வொரு பழமொழிக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். அதானல் இந்த பதிவில் 10 பழமொழிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பழமொழிகள் pdf

தமிழ் பழமொழிகள்  பழமொழி ஆங்கிலத்தில் 
அடங்கத் தெரியாதவனுக்கு ஆளத் தெரியாது. No man can be a good ruler unless he has first been ruled
அதிகாரம் ஆளை அடையாளம் காட்டும். Authority shows the man
அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும். Good luck reaches further than long arms
செல்வத்துக்கு இறக்கை உண்டு. Riches have wings.
செல்லாக் காசு எப்போதும் திரும்பி வரும். Bad money always comes back.
செய்வதை திருந்தச் செய். Whatever you do, do it properly.
செய்யுள் அழகு மனதைக் கொள்ளை கொள்ளுதல். The charm of the poetry captivates the soul.
செய்ய வேண்டியதைச் சரியாகச் செய். Whatever is worth doing, is worth doing well.
செயல்கள் தேவை; சொற்களல்ல. Wanted deeds only, not words.
செயல்கள் கனிகள், சொற்கள் இலைகள். Deeds are fruits, while words are leaves.
செத்த பாம்பை அடிக்கும் வீரன். A brave man who killed a dead snake.
செட்டி சிங்காரிப்பதற்குள் பட்டணம் கொள்ளைபோகும். Before a trader finishes his make up the whole town will be robbed.
சூழ்நிலை மனிதனை உருவாக்குகிறது. A man is affected by his environment.
சூடுபட்ட குழந்தை நெருப்புக்கு அஞ்சும். A burnt child dreads the fire.

தன்னம்பிக்கை பழமொழிகள்

சுறுசுறுப்பு வெற்றி தரும் Industry is the mother of success. Busy people will succeed. Briskness will bring success.
சுழலும் உலகம் அனைத்தையும் சுழற்றுகிறது. The spinning world makes every thing rotate.
சுவர்களுக்கும் செவிகள் உண்டு, காது கேட்கும். Even walls have ears, and they will hear.
சுருங்கச் சொல்லி விளங்க வை. Brevity is the soul of it.
சுமப்பவனுக்குத் தெரியும் பாரம். The bearer knows the burden. The wearer knows where the shoe pinches.
சுதந்தரம் என்பது பொறுப்புணர்ச்சி, எனவே பலர் அதற்கு அஞ்சுவர். Liberty means responsiblity, so many fear for it.
சுதந்தரம் எனது பிறப்புரிமை. Freedom is my birth right.
சுதந்தரமோ, சொர்க்கமோ? Is it freedom or heaven?
சுடுகாட்டில் காக்கை உகக்கும் பிணம். A crow will like the dead body in a burial ground.
சுடுகாட்டில் அனைவரும் சமம். All are equal in a cremation ground.
சுங்கச் சாவடியில் பன்றி வாங்கு. Buy a swine in a pike
அதிகம் வளைத்தால் வில் உடையும் The bow will break if it is bent more
அதிகம் கேள், குறைவாகப் பேசு Hear more, but talk less
அதிக உமி சிறிதளவு உணவு Much bran little meal
அடித்துக் குழந்தையை வளர் Bring out the child strictly

 

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் Face is the index of the mind
அகம்பாவம் அழிவைத் தரும் Pride goes before a fall
அச்சத்திற்கு மருந்து இல்லை There is no medicine for fear
அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள் Face the danger boldly than live in fear
அஞ்ஞானி செல்வத்தையும், ஞானி நற்குணத்தையும் விரும்புகிறான். The fool seeks wealth and the wise perfection
அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடக்கும் Play will continue even if it rains incessantly.
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான் None will check better than a beat.
அடிக்கடி விருந்தாளி அழையா விருந்தாளி A guest who visits often is uncalled for
அடிக்கிற கைதான் அணைக்கும் The hand that beats alone will embrace
உடல் வலிமையானால், உள்ளமம் வலுப்பெரும்  A sound mind in a sound body
பாம்பென்றால் படையும் நடுங்கும் A snake could make an army panic
சொல்லை விட செயலுக்கு வலிமை உண்டு  Actions speak louder than words
நிறைகுடம் தழும்பாது A rolling stone gathers no moss 
தாழ்ந்தது நின்றால் வாழ்ந்து நிற்பாய் Better bend the neck than bruise the fore head
ஆபத்துக்கு பாவம் இல்லை  Anything is fair in love and war
வேண்டாத பெண்டாட்டி கைபட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம் Faults are thick when love is thin
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை Many a slip between the cup and the lip 
பணம் பாதளம் வரைக்கும் பாயும் Money makes many things
ஏழை சொல் அம்பலம் ஏறாது A poor man’s words are not heard 
அடியாத மாடு பணியாது Spare the rod and spoil the child.

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement