வகுப்பறையில் முதல், நடு, கடைசி வரிசைகளில் எங்கு அமர விரும்புவீர்கள்.. அப்போ உங்கள் குணத்தை அறிந்துகொள்ளுங்கள்..!

Advertisement

வகுப்பறையில் முதல், நடு, கடைசி வரிசைகளில் எங்கு அமர விரும்புவீர்கள்? | 1st vs Last Bench Personality Test in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. நமது வகையில் கண்டிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி காலங்களை கடந்து வந்திருப்போம். இல்லாவிட்டால் கடந்து வந்துகொண்டிருக்கலாம். யாராக இருந்தாலும் சரி அனைவரும்முமே இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம். அதாவது வகுப்பறை என்றவுடன் அனைவருக்கும் நினைவிற்கு வருவது என்ன என்றால் நாம் அமர்ந்திருக்கும் இடம் தான். சிலர் முதல் வரிசையில் அமர விரும்புவோம், சிலர் நடு வரிசையில் அமர விரும்பொவோம், சிலர் கடைசி வரிசையில் அமர விரும்புவோம். இதில் நான் கடைசி வரிசையில் அமர தான் விரும்புவேன். நீங்கள் எந்த வரிசையில் அமர விரும்புவீர்கள் நண்பர்களே.. அப்படி என்றால் உங்களை பற்றி சில ஆளுமையான விஷயங்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம் வாங்க..

முதல் வரிசை பெஞ்ச்:

நீங்கள் முதல் வரிசை Bench-யில் நீங்கள் விரும்புவீர்கள் என்றால் உங்கள் ஆளுமையை பற்றி அறிந்துகொள்ளுங்கள். அதாவது நீங்கள் உங்கள் வகுப்பறையில் உயரம் குறைவான நபராக இருப்பீர்கள். ஆசிரியர்கள் கற்றுக்கொடுப்பதை நன்கு கற்றுக்கொள்ளும் திறன் உங்களிடம் இருக்கும். நீங்கள் மற்றவர்களிடம் அனாவசியமாக பேசமாட்டிர்கள். நீங்கள் அனைவரிடமும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். இருப்பினும் சில விஷயங்களில் நீங்கள் சுயநலமாக இருப்பீர்களாம்.

நடுவரிசை பெஞ்ச்:

நடு வரிசை பெஞ்சில் அமர விரும்பும் நபர் நீங்கள் என்றால் உங்கள் ஆளுமையை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் அனைத்து விஷயங்களிலும் நடுத்தரமாக இருப்பீர்களாம். நீங்கள் அனைவருக்கும் ஆதரவு அளிக்கும் தன்மை உங்களுக்கு இருக்கும். இதன் காரணமாக உங்களை பற்றி அனவைரும் எளிதாக புரிந்துகொள்ள முடியாது. உங்களுக்கு பிடித்த உறவுகளிடம் மட்டும் அதிக அன்பாகவும், உதவும் குணமும் உங்களுக்கு  இருக்கும். ஆக இவர்களை எளிதில் நல்லவர்கள் என்று நம்பிவிட முடியாதாம்.

கடைசி பெஞ்ச்:

நீங்கள் கடைசி பெஞ்ச் வரிசையில் அமர விரும்புவீர்கள் என்றால் உங்கள் குணம் எப்படி இருக்கும் தெரியுமா? வாங்க தெரிந்துகொள்வோம். உங்கள் வகுப்பறையில் நீங்கள் கொஞ்சம் உயரமான நபராக இருக்கலாம். நீங்கள் அனைத்து விஷயங்களையும் அறிந்துகொள்ள விரும்ப மாட்டிர்கள், உங்களுக்கு எது தேவையோ அதன் விஷயத்தை மட்டும் தெரிந்து கொண்டு, உங்கள் வாழ்க்கையை மிக சகஜமாக கடந்துசெல்லக்கூடிய நபர் என்று சொல்லலாம். மற்றவர்களுக்கு உதவும் குணமும் உங்களிடம் இருக்கும். அதேபோல் மற்றவர்களை மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்வீர்களாம்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement