2 Minute Speech on Independence Day
இந்திய நாட்டிற்கு சுதந்திரம் என்பது பல விதமான போராட்டங்கள், உண்ணா விரதங்கள் என இவற்றிற்கு எல்லாம் பிறகு தான் ஆங்கிலேயரிடம் இருந்து பெறப்பட்டது. இன்று நாம் கொண்டாடும் இந்த சுதந்திரத்தில் எண்ணற்றவர்களின் உயிர்கள் மறைந்து இருக்கிறது என்பது மிகப்பெரிய ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் இப்பேர்பட்ட தலைவர்களின் போராட்டம் இல்லை என்றால் இந்திய இவ்வளவு விரைவில் சுதந்திரம் என்பதை பெற்றிருக்க முடியாது. மேலும் சுதந்திர தினத்தினை பற்றிய பேச்சினை மிகவும் சுருக்கமாக பார்க்கலாம் வாங்க..!
2 நிமிடம் சுதந்திர தினம் பேச்சு போட்டி 2024:
முதலில் இந்திய நாட்டிற்குள் ஆங்கிலேயர்கள் வணிக விற்பனைக்காக நுழைந்தனர். அதற்கு அடுத்த நிலையாக இந்தியாவை அடிமைப்படுத்த ஆரம்பித்தனர். நாடு என்னவோ இந்தியாவாக இருந்தாலும் கூற ஆதிக்கம் என்பது முற்றிலும் ஆங்கிலேயருடையதாக இருந்து வந்தது.
இவற்றை எல்லாம் பார்த்த மஹாத்மா காந்தி அவர்கள் இந்திய நாட்டிற்கு விடுதலை பெற்று தந்தே ஆக வேண்டும் என்ற முடிவு செய்தார். ஆனால் மஹாத்மா காந்தி அவர்கள் எளிமையான வாழ்க்கையினை வாழும் ஒரு நபராக தான் இருந்தார்.
ஆனால் மஹாத்மா காந்திக்கு முன்பாகவே மருது பாண்டியர்கள், பூமித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் ஜான்சி ராணி என இவர்கள் அனைவரும் தமிழகத்தில் முதல் முதலில் ஆங்கிலேயரை எதிர்க்க தொடங்கினார்கள்.
ஆங்கிலேயர்கள் ஆரம்பக் காலக்கட்டத்திலேயே நாட்டிற்குள் நுழைந்தாலும் கூட 1800-ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் இந்தியாவில் ஆங்கிலேயரை எதிர்த்து போராட துவக்கம் செய்தனர்.
இவர்களின் தொடர்ச்சியாக ஜவஹர்லால் நேரு, திருப்பூர் குமரன், பகத்சிங் என இவர்களும் பின் தொடர ஆரம்பித்து விட்டார்கள். இத்தனை நபர்கள் போராட்டம் செய்தும் கூட இறப்புகள் என்பது அதிகமாக தான் இருந்தது.
அதிலும் குறிப்பாக வெள்ளையனே வெளியேறு, உப்பு சத்தியாகிரகம் ஆகியவை காந்தியடிகள் செய்த மிகவும் பிரத்தியச்சமான போராட்டங்கள் ஆகும். மேலும் இந்திய நாட்டில் உள்ளவர்களின் ஒற்றுமை ஆனது அதிகரித்த காரணத்தினால் போராட்டம் இன்னும் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதேபோல் இத்தகைய போராட்டங்களில் துப்பாக்கிசூடும் நடந்தது.
மேலும் இரண்டாம் உலகப்போரின் போது இந்தியா இன்னும் மோசமான நிலைக்கு பின்தள்ளப்பட்டது. அதேபோல் அனைத்து விதமான செலவங்களும் பறிக்கப்பட்டது. ஆனாலும் கூட இந்தியா தொடர் போராட்டத்தை நடத்திக் கொண்டே இருந்தது.
இத்தனை விதமான போராட்டங்களுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் பிரிக்கப்பட்டு சுதந்திரம் வழங்கப்பட்டது. அதன் பிறகு 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சுதந்திரம் அடைந்தது.
ஆகவே ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு, தமிழ்த்தாய்வாழ்த்து, கொடி பாட்டு மற்றும் நாட்டுப்பண் ஆகிய பாடல்கள் பாட்டுப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு தேசிய கொடி மற்றும் இனிப்புகள் வழங்கி இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பிக்கப்படுகிறது.
சுதந்திர தினம் பேச்சு போட்டி கட்டுரை |
சுதந்திர தின கவிதைகள் தமிழ் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |