தீபாவளி 2024 எப்போது..? | 2024 Deepavali Date in Tamilnadu

Advertisement

2024 Deepavali Date in Tamilnadu

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த பண்டிகை நாளான தீபாவளி தற்போது தான் வந்து முடிந்தது. அந்த வகையில் இத்தகைய தீபாவளி திருநாள் முடிவடைந்த ஓரிரு நாட்களே ஆகிய நிலையில் இதே போல் மற்றொரு நாள் அடுத்த வருடம் எப்போது வரும் என்ற ஆர்வமும் அனைவருக்கும் தோன்றும். ஏனென்றால் தீபாவளி என்றால் சொந்த ஊருக்கு வந்து புதிய ஆடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்து இனிப்பு வகைகள் எல்லாம் ஒருவருக்கு ஒருவர் கொடுத்து வாழ்த்துக்களை பகிரும் ஒரு மகிழ்ச்சியான தருணமாக இருக்கிறது. இப்படிப்பட்ட தருணத்தினை யாரும் விட்டு விடக்கூடாது என்று தான் எண்ணுவார்கள். அந்த வகையில் புது காலண்டர் எப்போது வரும் என்றும், அதில் தீபாவளி எப்போது வரும் என்ற தேதியை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆகவே காலண்டர் எதுவும் இல்லாமல் இன்றைய பதிவில் தீபாவளி எப்போது வரும் என்பதை பார்க்கலாம் வாங்க..!

2024 தீபாவளி தேதி:

தற்போது உலகமெங்கிலும் தீபாவளி திருநாள் முடிவடைந்த நிலையில இதற்கு அடுத்த நிலையில் பொங்கல், ஆங்கில புத்தாண்டு என இதுபோன்ற பண்டிகை நாட்கள் அடுத்த அடுத்த நிலையில் வரவிருக்கும் நிலையில் அடுத்த வருடத்திற்கான தீபாவளி எப்போது வரும் என்ற தேதியை தான் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருப்போம்.

ஆகவே 2024-ஆம் ஆண்டிற்கான தீபாவளி ஆனது அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது. மேலும் வியாழக்கிழமை அனைவருக்கும் விடுமுறை தினமாகும் உள்ளது.

தீபாவளி என்றால் என்ன..?

நாம் அனைவரும் சொல்லும் தீபாவளி என்ற சொல்லுக்கு தீப ஒளி திருநாள் என்ற மற்றொரு பெயரும் இருக்கிறது. இது தமிழகம் மட்டும் இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கை என இத்தகைய நாடுகளிலும் வெகு சிறப்பாக கொண்டப்படுகிறது.

 2024 தீபாவளி தேதி

மேலும் தீபாவளி என்பது முந்தைய காலங்களில் 5 நாட்கள் மட்டுமே கொண்டாடப்படக்கூடிய ஒரு தினமாகவே இருந்தது. ஆனால் தற்போது எல்லாம் 1 நாட்களிலே முடிந்து விடுகிறது.

அதேபோல் நாம் அனைவரும் கொண்டாடப்படும் தீப ஒளி திருநாளாலானது தமிழ் மாதத்தின் படி பார்க்கையில் ஐப்பசி மாததித்தலும், ஆங்கில மாதத்தின் படி பார்க்கையில் அக்டோபர் மாதம் 15 முதல் நவம்பர் மாதம் 17-ற்குள் வருகிறது.

எனவே ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் காணப்படும் இருளை போக்கி, ஒளியைக் கொடுக்கும் ஒரு பண்டிகையே தீபாவளி ஆகும். இதுவே தீபாவளிக்கான தமிழ் அர்த்தமாகும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement