பழமொழிகள் 25 | 25 Proverbs in English and Tamil..!

Advertisement

பழமொழிகள் 25 | 25 Proverbs in English and Tamil..!

பழமொழி என்ற சொல்லுக்கான அர்த்தமாக சிலர் தவறாக நினைத்து கொண்டிருக்கிறார்கள். அதாவது பழமொழி என்பது பல வகையான மொழிகளை அறிந்து கொண்டு அவற்றை பேசும் முறையாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இது தான் கிடையாது. பழமொழி என்பது பழங்கால நடைமுறை மற்றும் சிந்தனை, அனுபவம் என இவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்து நம் முன்னோர்கள் கோர்வையுடன் கூடிய அர்த்தமுள்ள வாக்கியங்களை கூறுகிறார்கள். இதுவே பழமொழி எனப்படும். அந்த வகையில் பார்த்தால் பழமொழி என்பது தற்போது உள்ள காலகட்டத்தில் பெரும்பாலான மக்களிடம் போய் சேருவது இல்லை. அதேபோல் மற்ற சிலருக்கு தமிழில் பழமொழி தெரிந்து இருந்தாலும் கூட அவற்றை எப்படி ஆங்கிலத்தில் சரியாக கூறுவது என்று தெரிவது இல்லை. அதனால் இன்று 25 பழமொழிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த பதிவின் முலமாக தெரிந்துகொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

பழமொழிகள் 25:

தமிழில் பழமொழி ஆங்கிலத்தில் பழமொழி
ஊரோடு ஒத்து வாழ் Do in Rome as Romans do.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் The face is the index of the mind
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது Great engines turn on small pivots
அடியாத மாடு படியாது Restive horses must be roughly dealt with
அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் Little strokes fell great oaks
கண்டால் காமாட்சி நாயக்கர் காணாவிட்டால் வடுகப்பயல் Too much courtesy, too much craft
அரசனுக்கு ஒரு சொல், அடிமைக்கு தலைச் சுமை What is sport to the boy is death to the frog
அப்பன் அருமை, அப்பன் செத்தால்தான் தெரியும் Blessings are not valued till they are gone
அலைகடலுக்கு அணை போட முடியுமா? Against God’s wrath no castle is proof
அழுத பிள்ளை பால் குடிக்கும் Ask and it shall be given

 

நட்பு பற்றிய பழமொழி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 

25 Proverbs in English and:

Proverb Tamil Proverb English
ஆசானுக்கும் அடைவு தப்பும் Good swimmers are sometimes drowned
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே A man without money is a bow without an arrow
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம் A bad workman quarrels with his tool
ஆட்டைக் காட்டி வேங்கையைப் பிடிக்க வேண்டும் Venture a small fish to catch a big one
இரண்டு படகில் காலை வைப்பவன் கரை சேருவதில்லை If you run after two hares you will catch neither
தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும் Man proposes, god disposes
நிழலின் அருமை வெயிலில் தெரியும் The worth of shade is only known when the sun is beating down hot
ஏற்றம் உண்டு என்றால் இறக்கமும் உண்டு Every tide has its ebb
குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டு படவேண்டும் A kick from the wise is better than a kiss from a fool.
சாது மிரண்டால் காடு கொள்ளாது The anger of a good man is the hardest to bear

 

பொது அறிவு வினா விடைகள்

10 பழமொழிகள் தமிழ்:

தமிழில் பழமொழிகள்  ஆங்கிலத்தில் பழமொழிகள் 
பழமையே சிறந்தது Old is gold
உழைப்பில்லையேல் ஊதியமில்லை No rains, no grains
அடியாத மாடு பணியாது Spare the rod and spoil the child
மனம் இருந்தால் மார்க்கமுண்டு Where there is a will, there is a way.
விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு A constant guest is never welcome
அவனின்றி ஒரு அணுவும் அசையாது Not even a leaf moves without god’s will
எறும்பு ஊரக் கல்லும் தேயும். Constant dripping wears away a stone
ஜென்ம புத்தி செருப்பால் அடித்தாலும் போகாது A Leopard Never Changes Its Spots
உள்ளதை உள்ளவாறு சொல் Call a spade a spade
புதிய துடைப்பம் நன்றாக பெருக்கும் New brooms sweep well

 

50 பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தெரிந்துகொள்வோம்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement