‘ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்’ என்பதன் உண்மையான அர்த்தம் தெரியுமா..?

5 petral arasanum aandi

5 Petral Arasanum Aandi | ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்

நம் வீட்டில் அல்லது ஊரில் உள்ள வயதானவர்கள் ஏதாவது நாம் செய்யும் செயலுக்கு ஒரு பழமொழியை சொல்வார்கள். ஆனால் அந்த பழமொழிக்கான அர்த்தம் அவர்கள் ஒன்று நினைத்து சொல்வார்கள். ஆனால் அதற்கான உண்மையான அர்த்தம் வேற ஒன்று இருக்கும். உங்களுக்கு உதவிடும் வகையில் இன்றைய பதிவில் ஒரு பழமொழிக்கான அர்த்தத்தை பற்றி தான் கூறப்போகிறோம்.

 ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என்று சொல்வார்கள். இதற்கான அர்த்தம் நாம் நினைத்து கொண்டிருப்பது ஐந்து பெண்களை பெற்ற பெற்றோர்களை சொல்வார்கள். ஐந்து பெண்களுக்கும் திருமணம் மற்றும் சீர் செய்வதற்குள் அரசனாக இருந்தாலும் ஆண்டி ஆகிவிடுவான் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதற்கான அர்த்தம் இது இல்லை. உண்மையான அர்த்தத்தை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.!  

இதையும் படியுங்கள் ⇒ கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று சொல்ல காரணம் என்ன..?

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி பழமொழி விளக்கம்:

ஆடம்பரமாக வாழும் தாய்:

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்

குடும்பத்தில் உள்ள வரவு எவ்வளவோ அதற்கேற்றது போல் செலவு செய்ய வேண்டும். தலைவன் எவ்வளவு சம்பாதிக்கிறார்களோ அதற்கேற்றது போல் குடும்பம் நடத்துபவர்கள் தான் நல்ல தலைவியாக இருக்க முடியும். வரவை விட செலவு அதிகமாக செய்தால் அரசனாக இருந்தாலும் ஆண்டி ஆகி விடுவான். 

பொறுப்பில்லாமல் வாழும் தந்தை:

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்

குடும்ப பொறுப்புகளை ஏற்று நடக்க கூடியவர் தந்தை. அத்தகைய பொறுப்பை ஏற்காமல் இருந்தால் குடும்பம் நன்றாக இருக்காது. அதனால் தான் குடும்ப பொறுப்பை உணராமல் இருக்கின்ற தந்தை அரசனாக இருந்தாலும் ஆண்டி ஆகிவிடுவான். 

ஒழுக்கமற்ற மனைவி:

மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஒழுக்கம் என்பது முக்கியமான ஒன்றாகும். குடும்பத்திற்கு தூணாக இருக்கும் மனைவி ஒழுக்கமுற்று இருந்தால் அந்த குடும்பம் சிறப்பாக இருக்காது. 

ஏமாற்றுவதும், துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர்: 

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்

தொப்புள் கொடி உறவுகளுக்கு சேர வேண்டிய உரிமைகள், சொத்துக்கள் போன்றவற்றை கொடுக்காமல் இருந்தாலும் அரசனும் ஆண்டி ஆகிவிடுவான்.

சொல் பேச்சு கேட்காமல் பிடிவாதமுடைய பிள்ளைகள்:

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்

பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களின் பேச்சை கேட்காமல் தன் இஷ்டத்திற்கு ஆடும் குழந்தைகள் வீட்டில் இருந்தால் அரசனும் ஆண்டி ஆகிவிடுவான்.

 மேல் கூறப்பட்டுள்ள ஐந்து குணங்களை கொண்ட எந்த குடும்பமும் முன்னேற்றம் அடையாது. அதனால் தான் இப்படிப்பட்ட குடும்பத்தில் அரசனாக இருந்தாலும் ஆண்டி ஆகிவிடுவான் என்று சொல்கின்றனர். 

இதையும் படியுங்கள் ⇒ ‘ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’ இதற்கு அர்த்தம் தெரியுமா..?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil