30 வயதிற்குள் இருப்பவர்கள் இதை கட்டாயம் தெரிஞ்சுருக்கணும்

Advertisement

30 வயதிற்குள் இருப்பவர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை 

பொதுவாக நம் முன்னோர்களின் காலத்தில் வாழ்ந்தவர்கள் வேலைக்கு செல்வார்கள், சம்பளத்தை வாங்குவார்கள் பெற்றோர்களிடம் கொடுப்பார்கள். வேலை முடிந்ததும் வீட்டிற்க்கு வருவார்கள். ஆனால் இன்றைய காலத்தில்இருப்பவர்கள் வேலைக்கு செல்வதே வாழ்க்கையை என்ஜாய் பண்ணுவதற்கு தான் செல்கிறார்கள். அதனால் இந்த 30 வயதிற்குள் எது நல்லது, எது கெட்டது என்று தெரியாமல் மனம் போக்கில் செல்வார்கள். அதனால் தான் இந்த பதிவில் என்னென்ன விஷயங்கள் அறிந்திருக்க வேண்டும் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

30 வயதிற்குள் அறிந்திருக்க வேண்டியவை:

நிரந்தரம் vs தற்காலிகம்:

பொதுவாக 30 வயதிற்குள் இருப்பவர்கள் வாழ்க்கையில் எந்த லட்சியமும் இல்லாமல் மனம் போன் போக்கில் செல்வார்கள். வாழ்க்கையை நல்லா என்ஜாய் செய்ய வேண்டும் மட்டும் தான் உங்களின் எண்ணங்களாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் உங்க கூட இருப்பவர்களும் உங்களுக்காக தான் இருக்கிறார்கள் என்று கண் மூடி தனமாக நம்புவீர்கள். உங்களுடன் இருக்கும் எந்த உறவாக இருந்தாலும் சரி யார் நிரந்தரமானவர்கள், யார் தாற்காலிகமானவர்கள் என்று அறிந்திருக்க வேண்டும்.

ஆதாயத்துடன் பழக கூடாது:

இன்றைய காலத்தில் பணம் தான் என்று நினைத்து மற்றவர்களுடன் ஆதாயத்துடன் தான் பழகுகிறார்கள். இவர்களுடன் பழகினால் பணம் கிடைக்கும், பதவி கிடைக்கும் என்று அறிந்து கொண்டு பழகுகிறார்கள். இப்படி நீங்கள் ஆதாயத்திற்காக ஒருவருடன் பழகினால் உங்களுக்கென்று ஒருபிரச்சனை என்றால் அவர்களும் வர மாட்டார்கள். அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவர்களும் வர மாட்டார்கள். அதனால் ஆதாயத்திற்காக பழகாமல் உண்மையாக பழகுங்கள்.

ஆணுக்கும், பெண்ணுக்கும் எத்தனை வயது வித்தியாசத்தில் திருமணம் செய்தால் நல்லது என்று தெரியுமா.?

முயற்சி எடு வெற்றி கிட்டும்:

30 வயதிற்குள் இருப்பவர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை 

இந்த வயதில் உள்ளவர்கள் ஒரு செயல் செய்ய ஆரம்பிக்கிறார்கள் என்றால் அதில் உடனேயே வெற்றி கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆஃப்ப்டி தோல்வி கிடைத்தால் அடுத்த வேலையே செய்ய தொடங்குகிறார்கள். ஒன்று தெரிஞ்சுக்கோங்க உழைக்காமல் ஏதும் கிடைக்காது என்பது போல முயற்சி செய்யாமல் வெற்றி கிடைக்காது. “விடாமுயற்சி விஷபரூபா வெற்றி”

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைக்க கூடாது:

நமக்கு ஏதவாது செய்ய வேண்டும் என்று தோணும், ஆனால் இந்த செயலை செய்தால் நம்ம ஊர்ல உள்ளவுங்க என்ன சொல்லுவாங்க அடுத்தவுங்க என்ன நினைப்பாங்க என்று அந்த செயலை செய்ய மாட்டிங்க.

நீங்கள் மற்றவர்களுக்காக வாழவில்லை, உங்களுக்காக தான் வாழுகிறார்கள். அதனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் நினைக்காதீர்கள்.

தெரியாததை கற்று கொள்ள கூச்ச படாதே:

மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே எல்லா விஷயமும் தெரிந்திருக்காது. அப்படி உங்களுக்கு தெரியாத விஷயம் மற்றவர்களுக்கு தெரிந்தால் அதனை கேட்டு கற்ற கொள். எனக்கு எல்லா விஷயமும் தெரியும் என்று தெனாவெட்டாக இருக்காதே.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement