நேர்மறையான எண்ணமிருந்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.

Advertisement

Positive Thinking: Stop Negative Thoughts to Reduce Stress

உங்கள் எண்ணம் நேர்மறையாக இருந்தால் வாழ்க்கையில் எப்போதும் வெற்றி தான்….

வாழ்க்கையில் வெற்றி பெற நேர்மறையாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ‘இதற்கு முன் நான் இந்த செயலை செய்ததே இல்லை’ என்று ஒரு விஷயத்தை யோசிப்பதை விட, ‘புதிதாக ஒரு  விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள இன்று ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது’ என்று நேர்மறையாக சிந்திக்க வேண்டும்.

அதேபோல் ‘இந்த செயலை செய்வது மிகவும் கடினம்’ என்று எண்ணாமல், நேர்மறையாக ‘நாம் வேறொரு கோணத்தில் ஏன் இதை எளிதில் செய்து பார்க்க கூடாது.’ என்று சிந்திக்க வேண்டும். இப்படி அனைத்து விதமான செயல்களையும் நாம் நேர்மறையாக சிந்திக்க கற்று கொள்ள வேண்டும்.

பாசிட்டிவ் பற்றி சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள் | Positive Vivekananda Quotes in Tamil

ஆனால் அப்படி நேர்மறையாக நினைப்பது எளிதல்ல, ஏனென்றால் நம்மை சுற்றி எப்போது ஒரு சில எதிர்மறையான செயல்கள் இருந்து கொண்டே இருக்கும். அவற்றில் இருந்து தனித்து நாம் நேர்மறையான எண்ணங்களை மட்டும் நினைப்பது என்பது முதலில் கடினம்.

ஆனால் தொடர்ந்து பயிற்சி செய்தால், கண்டிப்பாக நமது எண்ணம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நேர்மறையான எண்ணமாக மாறும்.

நாம் எண்ணம் நேர்மறையாக மாறுவதால் என்ன பயன் நமக்கு, என்று ஒரு சிலருக்கு தோன்றலாம். ஒரு பழமொழி கேள்விபட்டு இருப்போம் “எண்ணம் போல் வாழ்க்கை” ஆம் இந்த சொல்லை பெரியவர்கள் வாழ்த்தாக செல்லுவார்கள், அதற்க்கு அர்த்தம், உங்கள் எண்ணம் நேர்மறையாக இருந்தால் உங்கள் வாழ்க்கையில் எல்லாம் வெற்றி தான், என்பது தான்.

Positive Good Morning Quotes in Tamil – காலை வணக்கம் தத்துவங்கள்

வாழ்வில் சில தோல்விகள் வந்தாலும் அதனை வெற்றியின் ஒரு படி என்று நேர்மறையாக நினைத்து, அந்த தோல்வியில் நீங்கள் செய்த தவறுகளை கண்டுப்பிடித்து அடுத்த முறை அதனை சரிசெய்துக்கொண்டு அடுத்த முறை அதைவிட அதிக பலன் பெரும் அளவிற்கு உங்கள் வெற்றி அமையும்.

அதுவே எதிர்மறையாக சிந்தித்தால் ஒரு தோல்வி வந்தால் கூட அடுத்தமுறை நீங்கள் அந்த செயலை நினைத்துப்பார்க்க கூட தயங்குவீர்கள். ஆனால் அந்த தோல்விக்கு எதோ ஒரு சிறிய காரணம் தான் இருந்து இருக்கும். அதனை நீங்கள் பரிசீலனை செய்து இருக்க மாட்டீர்கள். அதனால் புதிய முயற்சியை எடுக்க பயப்படுவீர்கள். காரணம் அதுவும் தோல்வியில் முடியும் என்ற உங்கள் எதிர்மறையான எண்ணம்.

நீங்கள் உங்கள் எதிர்மறையான எண்ணத்தை போக்கி வாழ்க்கையில் வெற்றி பெற, நேர்மறையான எண்ணம் பெற கீழே கூறியுள்ள வழிமுறைகளை கடைப்பிடியுங்கள்.

எப்போதும் நேர்மறையான எண்ணம் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும்.

நேர்மறையான எண்ணங்கள் உருவாக என்ன செய்ய வேண்டும். 

1.தியானம் செய்யவும்:

how to improve good thoughts

மனதை அமைதிப்படுத்தி நேர்மறையான எண்ணங்களை உருவாக்க நாம் தியான முறையை பின்பற்றலாம். அதற்கு, அமைதியாக கண்களை மூடிக் கொண்டு கவலை தரும் விஷயங்களை பற்றி சிந்திக்காமல் ஒரு நிலையில் இருப்பதன் மூலம் மனது அமைதியாகி, உங்கள் மனம் நேர்மறையாக சிந்திக்க துவங்கும். ஆரம்பத்தில் இந்த பயிற்சி கடினமாக இருப்பதாக உணர்தல் கூட, தொடர்ந்து பயிற்சி செய்து வருவதன் மூலம் எளிதாக மனம் அமைதியாகி, நேர்மறையான எண்ணங்கள் உருவாகும். இதன் மூலம் நீங்கள் ஒரு மகிழ்ச்சியான சூழலை உணர முடியும்.

தன்னம்பிக்கை பொன்மொழிகள்..! Positive Quotes In Tamil..!

2.நேர்மறையான மேற்கோள்:

how to develop positive thoughts

நேர்மறையான கவிதைகள், மேற்கோள்களை உங்கள் வீட்டில்  உள்ள பிரிட்ஜ் கதவுகளில் அல்லது பணிபுரியும் இடங்களில் உள்ள கணிணி மற்றும் முகம் பார்க்கும் கண்ணாடியில் காகிதத்தில் எழுதி ஒட்டி வைக்கலாம். இதனால் ஒவ்வொரு முறையும் இவற்றை பார்க்கும் போது அவற்றை படித்து நல்ல எண்ணங்களை மனதில் விதைக்கலாம். உங்கள் கனவுகளை அடைய இது போன்ற நம்பிக்கை தரும் வரிகள் உதவும். உங்கள் நாளை புத்துணர்ச்சியாக துவங்கவும் இத்தகைய வரிகள் உதவும்.

3. உதவி செய்யலாம்:

உங்களுக்கு ஏற்பட்ட எதிர்மறை செயல்களை பற்றியே சிந்தித்து கொண்டிருக்காமல், அதிலிருந்து விடுபட யாரெனும் ஒருவருக்கு உங்களால் முடிந்த ஏதாவது ஒரு உதவி செய்யலாம். இவ்வாறு செய்யும் போது உங்களது தவறான எண்ணங்களிலிருந்து கவனத்தை வேறு நல்ல விஷயத்தில் திசை திருப்ப முடியும். மற்றவருக்கு செய்யும் உதவி நமக்கு மனத்திருப்தியை ஏற்படுத்தும். இவ்வாறு உங்களை எப்போதும் ஏதேனும் நல்ல செயல்களில் இணைத்து கொள்வதால், நேர்மறையான எண்ணங்கள் உருவாக ஒரு நல்ல வாய்ப்பு அமையும்.

தினசரி உறுதிமொழி | Daily Affirmation in Tamil

4. இசைகளை கேட்கலாம்:

how to think positive when depressed

மனதிற்கு இதமான இசைகள் கேட்பதன் முலம் மனதின் அமைதி பெறலாம். மனதில் அமைதி ஏற்பட்டால் நேர்மறையான எண்ணங்கள் தோன்றும். அதிகப்படியான மன அழுத்தத்தில் இருந்து விடுபட இசை ஒரு சிறந்த மருந்து ஆகும்.

5. நகைச்சுவை:

உங்கள் தினசரி நிகழ்வுகளில் ஒன்றாக நகைச்சுவையான விஷயத்தை பார்ப்பது அல்லது பிறரை சிரிக்க வைப்பது போன்ற செயல்களில் உங்களை சிறிது நேரமாவது ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். அப்படி நம்மால் முடிந்த அளவு சிரித்தால், மன அழுத்தத்தை குறைக்கலாம். மன அழுத்தம் குறைந்தால் போதும் நமக்கு எதிர்மறையான எண்ணங்கள் தோன்றாது.

நேர்மறையான எண்ணங்கள் தரக்கூடிய புத்தகங்களை படிக்கலாம். குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கலாம்.

எண்ணங்களை பற்றி நம் முன்னோர் கூறியவை:

எண்ணிய முடிதல் வேண்டும்  நல்லவே எண்ண வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த  நல்லறிவு வேண்டும்” 

என்ற மகாகவி பாரதி வரிகளுக்கு இணங்க நாம் வாழ முயற்சிக்க வேண்டும். 

“எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்  எண்ணியர் 
திண்ணியர் ஆகப் பெரின்”

நாம் இன்று எண்ணும் எண்ணங்களே நமது வாழ்வாக அமைகிறது .
நாம் இன்று வாழும் வாழ்க்கை நேற்றைய நமது எண்ணங்களின் தொகுப்பே, என்று வள்ளுவர் வாழ்க்கையில் நாம் எண்ணங்களின் முக்கியத்துவத்தை கூறியுள்ளார்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information In Tamil
Advertisement