50 பழமொழிகள் தமிழ் With Meaning

Advertisement

50 பழமொழிகள் தமிழ் with Meaning

பழமொழிகள் என்றாலே ஞாபகத்திற்கு வருவது நம்முடைய முன்னோர்கள் தான். ஏனென்றால் பேத்திகளோ அல்லது பேரன்களோ ஏதாவது தவறு செய்யும் பொழுது அந்த தவறை சுட்டி காட்டுவதற்கு ஏதாவது ஒரு பழமொழியை கூறி தான் சுட்டிகாட்டுவார்கள்.90’S தலைமுறைக்கு  இதனாலே  நிறைய பழமொழிகள் மற்றும் அதன் அர்த்தங்கள் தெரிந்தது. ஆனால் 2K-களுக்கு இதெல்லாம் தெரியாது.

ஏனென்றால் பெரும்பாலும் தனிக்குடுத்தனம் செல்கிறார்கள். இதில் அப்பா, அம்மா குழந்தைகள் மட்டும் தான் இருப்பார்கள். இவர்களுக்கு பள்ளியில் பழமொழிகளை வீட்டு பாடமாக கொடுப்பார்கள். அப்பொழுது அவர்கள் பெற்றோர்களிடம் வந்து கேட்கும் பொழுது மொபைலில் தான் தேடுவார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் 50 பழமொழிகள் மற்றும் அதற்கான விளக்கத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..

50 Proverbs With Meaning in Tamil

பசித்தபின் புசி பசி எடுத்த பிறகு தான் உணவு உன்ன வேண்டும். இப்படி எடுத்து கொண்டால் தான் ஆரோக்கியமாக வாழ முடியும்.
தம்பியுடையான் படைக்கஞ்சான் தம்பியை உடைய ஒரு அண்ணன் எதற்கும் அஞ்சாமல் அனைத்தையும் தைரியமாக செய்யலாம். ஒருவேளை தனக்கு ஏதாவது தீங்கு நேர்ந்தாலும் தன் குடும்பத்தை காத்து நிற்க தன் தம்பி இருக்கிறான்
பழகப் பழக பாலும் புளிக்கும் எந்த வேலையாக இருந்தாலும் சரி அதையே செய்து கொண்டிருந்தால் திகட்டும்.
ஆண்டி மகன் ஆண்டியானால், நேரம் அறிந்து சங்கு ஊதுவான் தந்தையின் தொழிலை மகனுக்கு யாரும் கற்றுத்தரவேண்டிய அவசியம் இல்லை. அவன் தன் தந்தையுடன் இருக்கும்போது அவனை அறியாமலே அதை அவன் கற்றுக்கொண்டு அதில் அவன் சிறந்தவனாகவும் விளங்குவான்.
போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து எதிலும் போதும் என்ற திருப்தி அடைவதே மனதிற்கு இனிமை தரும்.
உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியாது உலை பொங்கி வராமல் இருக்க அடுப்பின் தீயை குறைத்து ஒரு தட்டை கொண்டு மூடி சமைத்துவிடலாம். ஆனால் எந்த ஒரு ரகசியமும் யாரிடமும் பாதுகாப்பாக இருக்கிறது. எப்படியாவது அது கசிந்துவிடும்.
ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது நேரமும் காலமும் யாருக்காகவும் காத்திருக்காது
ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே. என்ன தான் ஊரார் வீட்டில் நெய் விட்டு ருசியாக சமைத்திருந்தாலும் அது தன் மனைவியின் கை பக்குவத்திற்கு ஈடாகாது என்று கணவன் மார்கள் கூறும் பழமொழி இது.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் மனதில் இருக்கும் எண்ணங்களை முகத்தை பார்த்தே அறிந்துவிடலாம் என்பதை உணர்த்தும் பழமொழி இது
ஆனைக்கொரு காலம் பூனைக்கொரு காலம் ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு ஒரு காலம் வரும் என்பதே சரி. ஆ என்றால் பசு என்று பொருள். பசுவின் பாலில் இருந்து எடுக்கப்படும் நெய்யை ஒரு மனிதன் 40 வயது வரை சாப்பிடலாம். அதற்கு மேல் சாப்பிட்டால் அது உடலில் கொழுப்பை அதிகரிக்கும். 40 வயதிற்கு மேல் பூவில் இருந்து எடுக்கப்படும் நெய்யான தேனை பயன்படுத்துவதே நல்லது

10 பழமொழிகள் தமிழ் With Meaning:

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் மிளகு என்பது அதிகப்படியான மருத்துவ குணம் கொண்ட ஒன்று. பகைவர்கள் வீட்டில் உண்ணும்போது அந்த உணவில் விடம் கலக்கப்பட்டிருந்தாலும் 10 மிளகை கொண்டு அந்த விடத்தை முறிக்கலாம். அவ்வளவு வலிமை மிளகுக்கு உண்டு என்பதை உணர்த்தவே இந்த பழமொழி கூறப்பட்டுள்ளது
இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு, கொழுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு எவர் ஒருவர் எள்ளை உண்கிறாரோ அவருடைய உடம்பில் எடை கூடும். அதே போல எவர் ஒருவர் கொள்ளை உண்கிறாரோ அவருடைய எடை குறையும்.
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும் ஊரான் பிள்ளை என்பது இங்கு மனைவியை குறிக்கிறது. கர்ப்பகாலத்தில் ஒரு கணவன் தன் மனைவியை சிறப்பாக கவனித்து உணவளித்து வந்தால், அவள் வயிற்றில் வளரும் அவனுடைய குழந்தை தானாக சிறப்பாக வளரும்.
உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன் உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா? உடையார்பாளையம் என்பது சத்திரியர்கள் அதிகம் வசிக்கும் வீரம் நிறைந்த பகுதியாக இருந்தது. உள்ளூரில் வீரச்செயல் புரியாதவன் உடையார்பாளையம் சென்று அங்கு உள்ளவர்களிடம் தனது வீரத்தை நிரூபிப்பானா என்பதே இந்த பழமொழியின் விளக்கம்
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி ஓட்டை கப்பல் என்பது நமது உடல். ஒன்பது மாலுமி என்பது நமது உடலில் இருக்கும் நவதுவாரங்கள்.
வெந்து கெட்டது முருங்கை, வேகாமல் கெட்டது அகத்தி முருங்கைக் கீரையை நாம் எப்போதும் அதிகமாக வேகவைத்து உண்ணக்கூடாது. வேகவைக்கும் நேரம் அதிகம் ஆக ஆக அதன் சத்துக்கள் குறைந்துகொண்டே போகும். அதே போல அகத்தி கீரையை வேகவைக்காமல் உன்ன கூடாது. அகத்தி கீரை வெந்தால் தான் அது நம் உடலிற்கு உகந்த சத்துக்களை தரும்.
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா? நமக்கு ஒரு வேளையாவது பசிக்கு உணவளித்த வீட்டிற்கு என்றும் கெடுதல் செய்யவோ நினைக்கவோ கூடாது.
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. மகாபாரதத்தில் கர்ணன், பஞ்சபாண்டவர்களான தனது சகோதரர்கள் ஐவரோடு தன்னை இணைத்துக்கொண்டு அருவராக இருந்து போரிட்டாலும் சரி, அல்லது கௌரவர்கள் 100 பேருடன் சேர்த்து போரிட்டாலும் சரி, சாவு என்பது நிச்சயம் வரும்.
போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கு கற்றவனுக்கு போலீஸ் வேலை, வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை” என்பதே சரி. தப்பு செய்பவர்களை திருத்தி எப்படி நல்லவர்களாக வாழ வேண்டும் என்பதை கற்று தருபவர்களுக்கு போலீஸ் வேலையும், தனது வாக்கின் மூலம் மற்றவர்களின் அறிவை பெருக்கும் செயல்களை செய்பவர்களுக்கு வாத்தியார் வேலையும் சிறப்பாக இருக்கும்
மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டி ஒரே வீட்டில் வாழும் மாமியாரும் மருமகளும் ஒரே தவறை செய்தாலும், மாமியாரின் தவறு பெரிதாக பேசப்படாது. ஆனால் மருமகள் செய்த தவறை மாமியார் பெரிது படுத்துவார்

தமிழ் கிராமத்து பழமொழிகள் விளக்கம்:

ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோ ஆவாரைப் பூவில் அதிகப்படியான மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த பூவின் இதழ்களை வெயிலில் காயவைத்து அரைத்து பொடியாக்கி உண்டுவந்தால்  ஆரோக்கியம் அதிகாரிக்கும்.
ஆமை புகுந்த வீடு விளங்காது. கல்லாமை, இயலாமை, முயலாமை ஆகிய இந்த 3 ஆமைகளை தான் இங்கு குறிப்பிடுகின்றனர். இந்த 3 ஆமைகளும் ஒரு இல்லத்தில் புகுந்துவிட்டால் அந்த இல்லம் விளங்காது.
அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் அடிமேல் அடிவைத்தால் அம்மியும் தகரும்” என்பதே சரி. தகரும் என்றால் உடையும், உடைந்து சிதறும் என்று பொருள்
கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே கப்பலே கவிழ்ந்தாலும் கன்னக்கோலில் கை வைக்காதே” என்பதே சரி. கன்னக்கோல் என்பது ஒருவகை கருவி. அதை கொண்டு அக்காலத்தில் திருடர்கள் வீட்டில் துளையிட்டு திருடுவார்கள். அது போல கப்பல் கவிழ்ந்த அளவிற்கு நஷ்டம் வந்தாலும் திருட்டு செயலில் ஈடுபட கூடாது
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்தரியில் குடை பிடிப்பான் அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்” என்பதே சரி. ஏழை ஒருவன் பணக்காரன் ஆகும்போது அவரிடம் யாரேனும் பண உதவிகேட்டு நள்ளிரவில் வந்தாலும் அவர்களுக்கு அவன் உதவி செய்வான்
குரைக்கிற நாய் கடிக்காது  நம்மிடம் பாசமாய் குழையும் நாய் எப்போதும் நம்மை கடிக்காது
ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும்” என்பதே சரி. அகம் என்றால் மனம் என்று பொருள். எந்த ஒரு விடயத்தையும் மனதில் பதியவைக்கும் முன்பு அதை தெளிவாக ஆராய்ந்து அறிந்து பதியவைக்க வேண்டும்
கல்லை கண்டால் நாயை காணோம், நாயை கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம், நாயகனை கண்டால் கல்லைக் காணோம்” என்பதே சரி. நாயகன் என்பது இங்கு கடவுளை குறிக்கிறது. ஒரு கற்சிலையை கற்சிலையாக பார்த்தால் அதில் கடவுள் தெரியமாட்டார். அதே கற்சிலையை கடவுளாக பார்த்தால் அங்கு கல் தெரியாது
பழம் நழுவி பாலில் விழுந்தது போல பழம் நழுவி பாகில் விழுந்தது போல” என்பதே சரி. பாகு என்பது வெல்லப்பாகை குறிக்கிறது. பொதுவாக பழமே இனிபாக இருக்கும். அந்த பழம் வெல்லப்பாகில் விழுந்தால் அதன் சுவை இன்னும் அதிகரிக்கும்
ஆத்துல ஒரு கால்; சேத்துல ஒரு கால். அயத்தில் ஒரு கால்; செயத்தில் ஒரு கால்” என்பதே சரி. அயம் என்றால் குதிரை என்று பொருள். செயம் என்ற சொல்லுக்கு பூமி வெற்றி என்றொரு பொருள் இருந்தாலும் இதற்க்கு பூமி என்று மற்றொரு பொருள் உண்டு. குதிரை ஏற்றம் கற்றுக்கொள்ள நினைக்கும் ஒருவன் குதிரையின் மீது ஒரு காலையும் நிலத்தின் மீது ஒரு காலையும் வைத்து குதிரை ஏற்றம் கற்றுக்கொள்ள முடியாது

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement