50 விடுகதைகள் பதிலுடன்

Advertisement

50 விடுகதைகள்

தமிழ் விடுகதைகள் என்பது படிக்க படிக்க ஆர்வமாக இருக்கும். விடுகதை என்பது நமது அறிவு திறனை வளர்க்க கூடிய ஒன்றாக இருக்கிறது. அதனால் குழந்தைகளிடம் பெரியவர்கள் விடுகதை போட்டு அதற்கான பதில் என்னவென்று கேட்பார்கள்.

இன்றைய காலத்தில் மொபைலை உலகமாக இருக்கிறது, இதனால் மொபைலில் விடுகதை கேள்விகளை எடுத்து வைத்து அதற்கான பதிலை சொல்ல சொல்லுவார்கள். அதனால் இந்த பதிவில் விடுகதைகள் கேள்வி மற்றும் பதிலுடன் அறிந்து கொள்வோம்.

தமிழ் விடுகதைகள் 50:

1. தட்டுத்தட்டாய் மல்லாந்திருக்கும் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒட்டாது.

விடை: தாமரை இலை

2. எங்கப்பன் ஊர் சுற்றி, எங்கள் அம்மா குந்தாணி.

விட : பூசணிக்காய்

3. அந்தரத்திலே தொங்குது செம்பும் தண்ணீரும்

விடை: இளநீர்

4. நீல நிற மேடையிலே கோடி மலர் காயுது

விடை: விண்மீன்கள்

5. யாரும் அடிக்காமலே டமாரம் ஓசை

விடை:  இடிமுழக்கம்

6. கரடுமுரடு மனிதனிடம் கனிவான இனிப்பு.

விடை:  பலாப்பழம்

7. ஆளில்லாத வீட்டு வாசலில் எதிர் கொள்வான் வகையுள்ள காவல்காரன்

விடை:  பூட்டு

8. அண்ணன் தம்பி பன்னிருவர் – ஒருவன் மட்டும் குறைப் பிரசவத்தில் பிறந்தான்

விடை:  12- மாதங்கள்- பிப்ரவரி

9. அந்தரத்தில் ஆடும் வீடு ஆபத்தில்லாத அழகு வீடு.’

விடை:  தூக்கணாங்குருவி கூடு

10 வாசலைத் தாண்டி வர மாட்டான் – ஆனால் வம்புச் சண்டைக்கு காரணமாக இருப்பான்.

50 Vidukathaigal:

விடை:  நாக்கு

11. மரக்கிளை சுமந்தபடி காட்டுக்குள் பயணம் செய்வான்

விடை:  மான்

12. நின்றவன் நின்றபடி, மாலைகளைச் சுமந்தபடி.

தமிழ் நகைச்சுவை விடுகதைகள்

விடை:  சிலை

13. தீவட்டி சுமந்தவனுக்கு விடிய விடிய தூக்க மில்லை

விடை:  மெழுகுவர்த்தி

14. இடதும் வலதுமாய் நகரும், பாதுகாப்புக்கு மட்டும் மூடிக்கொள்ளும்.

விடை:  கண்கள்

15. உதைப்பட்டவன் உறுமிக் கொண்டு ஓடினான்.

விடை: ஸ்கூட்டர்

16 பூமியிலே பொன் மரப்பாச்சி புதைத்து வைத்திருக்கிறது.

விடை: மஞ்சள்

17. ஊருக்கு உழைக்கும் உத்தமன் உரக்க ஊதி குரல் எழுப்புவான்

விடை:  சங்கு

18. மூக்குத்தி போலப் பூப்பூக்கும் அப்பாடா என்று காய்காய்க்கும்.

விடை:  நெருஞ்சி முள்

19. ஊளை மூக்கன் சந்தைக்குப் போகிறான்.

விடை:  நுங்கு

20. கரையும், உப்பு அல்ல, தண்ணீரில் குளிப்பான், மனிதனுமல்லன்.

விடை: சோப்பு

விடுகதைகள் கேள்வி பதிலுடன்:

21. வெட்கங் கெட்ட புளியமரம் வெட்ட வெட்ட வளருது.

விடை:  தலைமுடி

22. உடைந்த வெள்ளிக்கு, ஒக்கிட ஆசாரி இல்லை.

விடை:  அரிசி

23. மாமன் வீட்டுத் தோட்டத்திலே மஞ்சள் குருவி ஊசலாடுது.

விடை:  எழுமிச்சை பழம்

24. மூடாத தொட்டியில் எடுக்க எடுக்க நீர்.

விடை: கிணறு

25. ஏழை படுக்கும் பாயை எடுத்துச் சுருட்ட ஆளில்லை.

விடை:  பூமி

26. எட்டாத கொம்பில் மிட்டாய்ப் பொட்டலம்.

விடை:  தேன்கூடு

27. கணுக்கால் நீரில் கரடி நீச்சல் போடுது.

விடை:  தவளை

28. மூன்று கொம்புமாடு ஒரு கொம்பால் முட்டுது.

விடை:  நெருஞ்சிமுள்

29. நான் போகாத பொந்துக்குள்ளே என் தம்பி சங்கரன் புகுந்து விட்டான்.

விடை:  ஊசி நூல்

30. உறைக்குள் இருக்கும் உயிரைப் பறிக்கும்.

விடை:  கத்தி

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement