78 Independence Day 2024 Theme
சுதந்தர தின விழாவினை பற்றி தான் அதிகமாக கேள்வி பட்டிருப்போம். அதேபோல் ஒவ்வொருவரும் சிறு வயதில் இருக்கும் போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்வோம். காலங்கள் மாற மாற நாம் அனைவரும் இத்தகைய விழாக்களில் கலந்து கொள்வதை குறைத்து கொண்டே வருகிறோம். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு சுதந்திர தின விழாவினை பற்றியும், அது எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்றும் இன்றைய பதிவின் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
76 சுதந்திர தினம் பற்றிய குறிப்பு:
சுமார் 200 நூற்றாண்டுகளுக்கு முன்பாக மகாத்மா காந்தி, பகத்சிங், ஜவர்ஹலால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், திருப்பூர் குமரன் மற்றும் இதர தலைவர்கள் அனைவரும் பெரிய போராட்டங்களை செய்த பிறகு தான் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் என்பது பெறப்பட்டது.
அந்த வகையில் பார்த்தால் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி நள்ளிரவு அன்று இந்தியாவானது சுதந்திரம் அடைந்தது. 1948-ஆம் ஆண்டு முதல் இன்றைய நாள் வரை ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி அன்று சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று இந்திய பிரதமர் செங்கோட்டையில் தேசிய கொடியினை ஏற்றி ஜன கண மன பாடல் வரிகள் பாடப்படுகிறது. மேலும் இந்திய ஆயுதப்படைகள் மற்றும் துணை ராணுவப் படைகளின் அணிவகுப்பு நடைபெறுகிறது.
இத்தகைய நிகழ்வுகளுக்கு பின்பு கடந்த ஆண்டு நடந்த நிகழ்வுகளையும், அதில் நடந்த முக்கிய சம்பவங்களையும் எடுத்துக்கூறும் வகையில் “நாட்டிற்கு உரை” இந்திய பிரதமரால் பேசப்படுகிறது.
அதுபோல் இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, நாட்டுப்பண், கொடிபாட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது. மேலும் ஒரு சில பள்ளிகளில் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகிறது.
மேலும் அரசு நிறுவனங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.
இத்தகைய சுதந்திர தின விழாவிற்கு முக்கிய சிறப்பு என்றால் அது மூவர்ணக் கொடி தான். மூவர்ணக் கொடி ஆரஞ்சு, வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் இருக்கிறது. மேலும் அதன் நடுவே ஊதா நிறத்தில் ஒரு சக்கரமும் இருக்கிறது.
சுதந்திர தினம் பேச்சு போட்டி கட்டுரை |
சுதந்திர தின கவிதைகள் தமிழ் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |