76 Republic Day Speech in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 76 ஆவது குடியரசு தினம் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். இந்தியாவில் 76 ஆவது குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவிற்கான அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு அமலுக்கு வந்து குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட நாள் தான் குடியரசு தினம். 1950 ஆம் ஆண்டு, ஜனவரி 26 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இந்த நாளை நாம் ஒவ்வொரு வருடமும் நினைவுகூரும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடி வருகிறோம். இந்நாளில், நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பொது துறை என பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு பல்வேறு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெறும். அன்றைய தினம் பள்ளி கல்லூரிகளில் பேச்சு போட்டிகள், கட்டுரை போட்டிகள் போன்றவை நடைபெறும். எனவே, பேச்சுப்போட்டில் பேசக்கூடிய குடியரசு தினம் பற்றிய விவரங்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
76 ஆவது குடியரசு தின பேச்சு போட்டி கட்டுரை:
அனைவருக்கும் வணக்கம். இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினத்தை கொண்டாட நாம் அனைவரும் இந்து கூடி இருக்கிறோம். இந்தியாவிற்காக உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த தினத்தை தான் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.
1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதனை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியா ஜனநாயக நாடு என்பதில் இருந்து, ஜனநாயக குடியரசு நாடு என்ற பெருமையை பெற்ற தினம் இன்று. இந்திய அரசியலமைப்பு சட்டம் நமக்கான நீதி, சமத்துவம், உரிமை ஆகியவற்றை வழங்குகிறது. நமக்கான உரிமைகளை ஒழுங்குபடுத்தி அதற்கான அங்கீகாரத்தை அளிக்கிறது.
அகிம்சை என்பது ஒரு ஆயுதம் என்பதை உலகிற்கு உணர்த்திய காந்தி முதல், நம் தமிழ் மண்ணில் போராடிய வ.வு.சி, கொடிக்காத்த குமரன், வாஞ்சிநாதன், சுப்பிரமணிய சிவா, சுப்பிரமாணிய பாரதியார் என நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைவரையும் நினைத்து போற்ற வேண்டிய நாள்.
நம் இந்திய நாட்டிற்கு, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று சுதந்திரம் கிடைத்தது. இந்தியா ஜனநாயக நாடாக அறிவிக்கப்பட்டது. அதாவது, மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஆட்சி முறை கொண்ட நாடு என்ற பெருமையை பெற்றது.
இந்தியாவில், குடிமக்களின் உரிமைகளை மீட்டெடுக்க அரசியலமைப்பு தேவையாக இருந்தது. இந்நிலையில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசு சட்டம் 1935, அதை மாற்றியமைத்து சுதந்திரம், நீதி, சமத்துவம் உள்ளிட்ட உயரிய தேவைகளைகளுடன் உள்ள அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க, அரசியலமைப்பு சபை டாக்டர் எஸ். ராஜேந்திர பிரசாத் தலையில் உருவாக்கப்பட்டது.
அப்போது அரசியலமைப்பு வரைவு குழுவின் தலைவராக டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தேர்வு நியமிக்கப்பட்டார்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக இருந்தே, இந்தியாவிற்கான அரசியலமைப்பு சட்ட்டதை உருவாக்க குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. அதாவது, இந்தியாவிற்கான அரசியலமைப்பை உருவாகும் திட்டம் 1946 ஆண்டு டிசம்பர் 09 ஆம் தேதியிலிருந்தே தொடங்கியது.
சுமார் 60 நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களை ஆராய்ந்து, குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகளை சுதந்திரமாகவும், சமத்துவ நோக்கத்துடனும் வழங்கும் நோக்கத்துடன் சுமார் 3 ஆண்டுகள் எடுத்துக்கொண்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி முழுமையடைந்தது.
2 ஆண்டு, 11 மாதம் 18 நாட்களாக இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 1950 ஆம் ஆண்டு, ஜனவரி 26 ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது.
மதம், இனம், மொழி வேறுப்பாடு இன்றி அனைவருக்கும் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய பொக்கிஷம் அரசியலமைப்பு சட்டம். இதனை நாம் அனைவரும் உணர்ந்து, நம் நாட்டின் வளர்ச்சிக்கும், அரசியலமைப்பு கொடுத்த அங்கீகாரத்தை உறுதி செய்ய உழைத்திட வேண்டும்.
அரசியலமைப்பு சட்டம் நமக்கு கொடுத்த உரிமைகளை நிலை நாட்ட நம்மை நாம் பக்குவப்படுத்தி கொள்ளும் நாளாக இருக்க வேண்டும், என்று மாணவர்களாகிய நாம் அனைவருமே உறுதிமொழி எடுக்க வேண்டும்.
இந்திய நாடு, ஒற்றுமையான நாடு, சமத்துவம் தெரிந்த நாடு, சமூக நீதியை போற்றும் நாடு, கல்வியில் உயர்ந்த நாடு, எந்தவொரு வேறுபாடுமின்றி, மகிழ்ச்சியுடன் வளர்ச்சி பாதையில் செல்லும் நாடு என்ற பெருமையை ஏற்படுத்த வேண்டும்.
குடியரசு தினத்தின் பெருமையை பற்றி பேச வாய்ப்பளித்ததற்கு நன்றி.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |