வளைகாப்பு எந்த மாதத்தில் செய்யலாம்
பெண்களுக்கு திருமணம் ஆகி தாய்மை அடையும் தருணம் முக்கியமானது. இந்த 10 மாதமும் பெண்களின் வாழ்வில் முக்கியமானதாக இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் 5 வது மாதம் மருந்து கொடுப்பார்கள். ஏழாவது மாதம் அல்லது ஒன்பாவது மாதம் வளைகாப்பு செய்வார்கள்.
ஏன் இந்த குறிப்பிட்ட மாதத்தில் மட்டும் வளைகாப்பு செய்ய காரணம் என்ன என்று யோசித்திருக்கிறீர்களா..? இல்லை பாரம்பரியமாக செய்வார்கள் அதனால் தான் செய்கிறோம் என்று சொன்னால் இந்த பதிவை முழுமையாக படித்து அந்த காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
ஏழாவது மாதம் வளைகாப்பு செய்ய காரணம்:
ஏழாவது மாதத்திற்கு பிறகு கணவன் மனைவி உடலுறவில் ஈடுபட்டால் மிகவும் பிரச்சனைகள் வர கூடும். இதனால் தான் முன்னோர்கள் ஏழாவது மாதத்தில் வளைகாப்பு செய்து தம்பதியினரை பிரித்து வைக்கின்றனர். ஏழு மாதத்திற்கு பிறகு கணவன் மனைவி உறவில் ஈடுபட்டால் கருவில் வளரும் குழந்தைக்கு மூளையின் வளர்ச்சியில் குறைபாடு ஏற்படும்.இதையும் படியுங்கள்⇒ திருமண மோதிரத்தை இடது கையில் அணிவதன் ரகசியம் தெரியுமா..?
தைரியமாக இருக்க:
கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்கள் தைரியமாக இருப்பதற்காக வளையல் அணியும் விழா நடத்தப்படுகிறது. பிள்ளை பெற்ற பெண்களை கர்ப்பிணி பெண்ணிற்கு காட்டுவதற்காக தான் இந்த விழாவிற்கு வர வைப்பார்கள். கருவில் வளரும் குழந்தைக்கு வளையல் சத்தம் தாலாட்டு போன்றும், பாதுகாப்பு உணர்வை கொடுப்பதாலும் இந்த ஏழாம் மாதத்தில் வளைகாப்பு விழா கொண்டாடப்படுகிறது.
ஊட்டச்சத்து:
கர்ப்பிணி பெண்களுக்கு ஏழாவது மாதத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. அதனால் வளைகாப்பில் 7 விதமான உணவுகளை கொடுத்து ஆசிர்வதித்து செல்வார்கள். இதனால் கர்ப்பிணி பெண்ணும், கருவில் வளரும் குழந்தையும் நன்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உடல் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.
சுகப்பிரசவம்:
கர்ப்பிணி பெண்ணுக்கு உடல் நலமும் மன நலமும் ஆரோக்கியமாக செயல்பட வேண்டும் என்பதற்காக தான் கர்ப்பிணி பெண்களுக்கு ஏழாம் மாதத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஆனால் இன்றைய காலத்தில் சுகப்பிரசவம் என்று சொன்னாலே பயந்து சிசேரியன் செய்து கொள்கிறார்கள். இதற்கு முக்கிய காரணமே உடலில் போதிய சத்துக்கள் இல்லாமல் இருப்பது, வேலைகள் அதிகமாக செய்யாமல் இருப்பது தான்.
இதையும் படியுங்கள்⇒ கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு அணிவதற்கான அறிவியல் காரணம் என்ன தெரியுமா.?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |