800 சதுரடியில் வீடு கட்ட தேவைப்படும் பொருட்கள் மற்றும் அதற்கான செலவுகள் எவ்வளவு தெரியுமா.?

Advertisement

800 சதுரடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்

பொதுவாக பெரும்பாலானவர்களுக்கு வீடு கட்ட வேண்டும் என்பது பெரிய ஆசையாக இருக்கிறது. எப்படியாவது சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற இலக்கை வைத்திருக்கிறார்கள். இதற்காக பணத்தையும் சேமித்து வைத்திருக்கின்றனர். சேமித்து வைத்த பணத்தில் வீட்டை கட்டினால் கட்டிக்கொண்டிருக்கும் போதே செலவுகள் அதிகமாக ஏற்படலாம். அதனால் நீங்கள் வீடு கட்டுவதற்கு முன்பே எவ்வளவு செலவாகும் என்று அறிந்து கொண்ட பிறகு வீட்டை கட்ட ஆரம்பிக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் 800 சதுரடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும் என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

செங்கல்:

800 சதுரடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்

800 சதுரடியில் வீடு கட்டுவதற்கு 18,000 செங்கல் தேவைப்படும். ஒரு செங்களின் விலையானது 11 ரூபாய் என்றால் 18,000 செங்களின் மொத்த விலை 1,98,000 ரூபாய் ஆகும்.

ஜல்லி:

800 சதுரடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்

வீடு கட்டுவதற்கு 2 விதமான ஜல்லிகள் தேவைப்படும். அதில் 800 சதுரடிக்கு எவ்வளவு ஜல்லி மற்றும் கல் தேவைப்படும் என்று பார்க்காலம். 20 mm Aggregate ஜல்லி 1 யூனிட் விலை 3000 ரூபாய் ஆகும். 800 சதுரடிக்கு 8 யூனிட் ஜல்லி தேவைப்படும். அதனுடைய விலை 24,000 ஆகும். 40 mm Aggregate ஜல்லியின் 1 யூனிட் விலை  2800 ரூபாய் ஆகும். 800 சதுரடிக்கு 2 யூனிட் ஜல்லி போதுமானது அப்படி என்றால் அதனுடைய விலை 5,600 ரூபாய் ஆகும்.

மணல்: 

800 சதுரடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்

வீடு கட்டுவதற்கு இரண்டு விதமான மணல் காணப்படும். அது M சாண்ட் மணல், P சாண்ட் மணல் ஆகும். M சாண்ட் மணல் யூனிட் விலை 38,000 ஆகும். அதேபோல் P சாண்ட் மணல் 1 யூனிட் 5000 ரூபாய் ஆகும். நமக்கு 800 சதுர அடியில் வீடு கட்டினால் M சாண்ட் மணல் 18 யூனிட் தேவைப்படும். அதேபோல் P சாண்ட் மணல் 4 யூனிட் தேவைப்படும். இந்த இரண்டு மணலின் விலையையும் சேர்த்து 4,76,000 ரூபாய் செலவு ஆகும்.

கம்பி:

800 சதுரடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்

மொத்தமாக 800 சதுரடிக்கு 4.3/4 டன் கம்பிகள் தேவைப்படும். அப்படி என்றால் எவ்வளவு செலவு ஆகும். ஒரு டன் விலையானது 75,000 ரூபாய் என்றால் 4.3/4 டன் எவ்வளவு என்றால் 3,18,750 ரூபாய் ஆகும்.

சிமெண்ட் மூட்டை:

800 சதுரடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்

800 சதுரடியில் வீடு கட்டுவதற்கு 450 சிமெண்ட் மூட்டைகள் தேவைப்படும். ஒரு மூட்டையின் விலை 500 ரூபாய் என்றால் 450 சிமெண்ட் மூட்டைக்கு எவ்வளவு 2,25,000 ரூபாய் செலவு ஆகும். இதை தவிர நிறைய மற்ற செலவுகள் இருக்கும். வீட்டில் டைல்ஸ், ஜன்னல் மாட்டுவது என்று நிறைய உள்ளது. மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துமே உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும் என்பதற்காக உள்ளது. ஆகவே 800 சதுரடியில் வீடு கட்டுவதற்கு 20 லட்சம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil

 

Advertisement