Aadi Pooram Sirappugal in Tamil | ஆடிப்பூரம் சிறப்பு | Aadi Pooram Special in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆடிப்பூரம் சிறப்புகள் (Aadi Pooram Sirappugal in Tamil) பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஆடி மாதத்தில் வரக்கூடிய முக்கியமான வழிபாட்டு நாட்களில் ஒன்று ஆடிப்பூரம். இந்நாள் தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியமான பண்டிகையாகும். ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்படும்.
நம்மில் பலருக்கும் ஆடிப்பூரம் நாள் வருவது தெரியும். அன்றைய நாள் அம்மனை வழிப்படுவார்கள் என்பது தெரியும். ஆனால், அதனை தவிர்த்து ஆடிப்பூரம் நாளின் சிறப்புகள் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக Aadi Pooram Sirappugal in Tamil பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம்.
ஆடிப்பூரம் சிறப்புகள்:
- உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப் பூரம் நாள். ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் நிகழும் நாளன்று அம்பாள் அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. எனவ, ஆடிப்பூரம் அம்மனின் பிறப்பைக் கொண்டாடும் விழாவாக இருக்கிறது.
- ஆடிப்பூரம் வைணவ சமுதாயத்தில் உள்ள 12 ஆழ்வார் துறவிகளில் ஒருவரான ஆண்டாள் பிறந்த நட்சத்திரம் பூரம் என்பதால் இந்த நாள் ஆண்டாள் ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது.
- இந்நாளில் அம்மனுக்கு வளைகாப்பு திருவிழா நடத்தப்படும்.
- ஆடிப்பூரம் அன்று தமிழகத்தில் உள்ள பல அம்மன் கோவில்களில் பண்டிகை மிக விமர்சியாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், பூஜைகள், வளைக்காப்பு செய்து வழிபடுகின்றனர்.
- ஆடிப்பூரம் திருநாள் ஆனது, ஸ்ரீ வில்லிப்புத்தூரார் ஆண்டாள் திருக்கோவிலில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
- அம்மனின் அருளைப் பெற இந்த நாளில் பக்தர்கள் அனைவரும் ஒன்று கூடி தங்கள் வாழ்க்கையில் நலமும், நலனும் பெறுவதற்காக பிரார்த்தனை செய்கின்றனர்.
- இந்நாளில் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமும், நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் குழந்தை பாக்கியமும் கிட்டும். மேலும், கணவன் மனைவி ஒற்றுமையம் உண்டாகும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |