ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்று கூறுவதற்கான உண்மை அர்த்தம் உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Aavathum Pennale Azhivathum Pennale Meaning in Tamil

தினமும் நமது பொதுநலம். காம் பதிவின் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அது என்ன தகவல் என்றால் ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்று கூறுவதற்கான உண்மையான அர்த்தம் என்ன என்பதை பற்றி தான் தெரிந்துக் கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த பழமொழி கூறுவதற்கான உண்மையான அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற பழமொழிக்கான உண்மையான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா

பழமொழிக்கான உண்மை அர்த்தம்:

Aavathum Pennale Azhivathum Pennale Meaning in Tamil

பொதுவாக நாம் பல பழமொழிகளை கேட்டிருப்போம் சில சமயங்களில் கூறியும் இருப்போம். ஆனால் அதற்கான உண்மையான அர்த்தம் நமக்கு தெரிந்திருக்காது.

அதேபோல தான் ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்ற பழமொழியையும் கூறியிருப்போம். ஆனால், அழிவதும் பெண்ணாலே என்ற வார்த்தை பல இடங்களில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.

உண்மை விளக்கம் அறியாமல் சிலர் தவறான பொருள் கூறுகின்றனர்.  இதற்கான உண்மையான அர்த்தம் என்னவென்றால் ஆவதும் பெண்ணாலே என்றால் நல்லவை அனைத்தும் ஆவது பெண்ணாலே என்றும், அழிவதும் பெண்ணாலே என்றால் தீயவை அனைத்தும் அழிவதும் பெண்ணாலே என்றே அர்த்தமாகும். 

இதையும் படித்துப்பாருங்கள்=> ஆனைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும் பழமொழி விளக்கம் தெரியுமா

அதாவது ஒரு பெண் மனது வைத்தால் மட்டுமே நல்லவற்றை உருவாக்க முடியும். அதேபோல் ஒரு பெண் மனது வைத்தால் என்றால் தீயவை அனைத்தையும் அழித்து விட முடியும்.

இதனால் தான் ஒரு பெண் கல்வி கற்றால் என்றால் அதனை தனது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களின் மூலம் இந்த சமுதாயத்தை நன்கு மேம்பட செய்வார்கள்.

அதேபோல் ஒரு பெண் தனது குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கும் நல்ல செயல்களை இந்த சமுதாயத்தில் உள்ள அனைத்து தீய செயல்கள் அனைத்தும் அழிந்து விடும். இதனை குறிக்கும் வகையில் தான் ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்ற பழமொழியை நமது முன்னோர்கள் கூறி வைத்துள்ளார்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement