வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஆயிரம் பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம் என்று கூறுவதற்கான அர்த்தம் என்ன .?

Updated On: January 30, 2023 12:23 PM
Follow Us:
aayiram poi solli oru kalyanam pannalam
---Advertisement---
Advertisement

ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்

நம் முன்னோர்கள் பேரன் பேத்திகளிடம் பேசும் போதோ அல்லது திட்டும் போதோ அடிக்கடி பழமொழிகள் பயன்படுத்துவார்கள். அவர்கள் சொல்லும் பழமொழிகளுக்கு ஒரு அர்த்தமாக இருக்கும். முன்னோர்கள் வேறொரு அர்த்தமாக நினைத்து சொல்வார்கள். பழமொழிகளுக்கான உண்மையான அர்த்தத்தை தினந்தோறும் பதவிடுகிறோம். இன்றைய பதிவிலும் ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம்.

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம்:

aayiram poi solli oru kalyanam meaning in tamil

திருமணம் பேச்சு எடுக்கும் போது மாப்பிள்ளை வீட்டிலும் சரி, பெண் வீட்டிலும் சரி ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துவார்கள்.

இதற்கு நாம் புரிந்து கொண்ட அர்த்தம் என்ன ஒரு பொய் சொன்னாலும் பரவாயில்லை ஒரு கல்யாணம் நடக்கிறது அல்லவா இப்படி தான் நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதற்கான உண்மையான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம்.

‘ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்’ என்பதன் உண்மையான அர்த்தம் தெரியுமா..?

 சொந்தம் பந்தங்கள் கூட எவ்வளவு பிரச்சனை இருந்தாலும், வீட்டில் ஒரு நல்ல காரியம் அதவாது திருமணம் நடக்கிறது என்றால் அவர்கள் வீட்டிற்கு சென்று அழைப்போம். இதற்கு தான் அவர்கள் வீட்டிற்கு ஆயிரம் முறை போய் சொல்லி கல்யாணம் செய்ய வேண்டும் என்பதை தான் ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் என்று காலப்போக்கில் மாறியது . இதற்கு இன்னொரு அர்த்தமும் இருக்கிறது.

 

 திருமணம் என்றால் பெண் கேட்டு செல்ல வேண்டும், பிறகு பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்கு செல்வார்கள். பிறகு நிச்சயதார்த்தம், அதன் பிறகு திருமணத்திற்கான துணி, நகை, முகூர்த்த நேரம் போன்றவற்றிற்காக இரு வீட்டாரும் செல்வார்கள். இதற்காகவும் ஆயிரம் முறை போய் சொல்லி கல்யாணம் செய்ய வேண்டும் என்ற பழமொழியை ஆயிரம் முறை பொய் சொல்லி கல்யாணம் செய்ய வேண்டும் என்று மாறியது .

 

இந்த பதிவை படித்த பிறகாவது ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் செய்யலாம் என்று சொல்வதை நிறுத்துவீர்களா நண்பர்களே.! ஒரு பழமொழியை சொல்வதற்கு முன் அதற்கான உண்மையான அர்த்தத்தை தெரிந்து கொண்டு சொல்லுங்கள்.

ஏன் கோவிலில் கொடுக்கும் தீர்த்தம் செம்பு பாத்திரத்தில் மட்டும் தருகிறார்கள் காரணம் தெரியுமா.?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now