ஆயுஷ்மான் பாரத் கார்டில்னால் நமக்கு கிடைக்கும் பயன்கள் என்ன தெரியுமா..?

Advertisement

ABHA Card Benefits 

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவினை உங்களுக்கு கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் இன்று நாம் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய மிகவும் முக்கியமான ஒரு கார்டின் விவரங்களை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். அதாவது நாம் அனைவரும் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை என இவற்றை எல்லாம் கேள்வி பட்டிருப்போம். அதேபோல் இந்த கார்டினால் நமக்கு என்ன பயன் என்ன என்பது பற்றியும், எதனால் இது கொடுக்கப்பட்டிருக்கு என்ற விவரங்கள் அனைத்தும் நமக்கு தெரிந்தவை தான். ஆனால் இதற்கு அடுத்த நிலையாக ABHA கார்டு என்று ஒன்று உள்ளது. இந்த கார்டினை பற்றி தான் அதிகமாக தெரிந்துகொண்டிருக்க மாட்டோம். எனவே இன்று ABHA கார்டு என்றால் என்ன..? இதனால் நமக்கு கிடைக்கும் பலன் என்ன என்பது பற்றியும் பார்க்கலாம் வாங்க…!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

ABHA கார்டு என்றால் என்ன..?

ABHA என்பதற்கு ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் என்பது தான் முழு விளக்கம் ஆகும். இத்தகைய கார்டு ஆனது இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு திட்டம் ஆகும். மேலும் இந்த கார்டில் ஒவ்வொருவருக்கும் 14 என்ற கணக்கின் படி அமைக்கப்பட்டு வழங்கப்பட்டு இருக்கிறது.

மேலும் இந்த 14 இலக்க எண் என்பது ஒரு தனிநபரின் தொலைபேசி எண் மற்றும் ஆதார் எண்ணை அடிப்படையாக வைத்து வழங்கப்படும் முறையாக உள்ளது. இதுவே ABHA கார்டு எனப்படும்.

ABHA கார்டின் பயனர்கள் காப்பீட்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் சுகாதார பதிவுகளை டிஜிட்டல் முறையில் பதிவுகளை பகிரவும், அணுகவும் உதவுகிறது.

ABHA Card Full Form:

  • Ayushman Bharat Health Account என்பதே இதன் ஆங்கில விரிவாக்கம் ஆகும்.

ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி

ஆயுஷ்மான் பாரத் கார்டின் நன்மைகள்:

இந்த ஆயுஷ்மான் பாரத் கார்டினை பயன்படுத்தி ஒரு நபர் மருத்துவ உதவியினை அணுக முடியும். அதாவது 14 இலக்க எண்ணை கொண்டிருக்கும் இந்த கார்டினை பயன்படுத்தி அரசு மருத்துவமனை மற்றும் மெடிக்கல் ஷாப்பில் இலவச மருத்துவ உதவி அல்லது தள்ளுபடி உதவியினை பெற முடியும்.

அதேபோல் இந்த கார்டினை பயன்படுத்தி குடும்பத்திற்கு ஒட்டு மொத்தமாக 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தனியார் மருத்துவ உதவியினையும் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்த கார்டினை உங்களுக்கு வேறு மாறாக தவறுதலாக பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக கருதப்படுகிறது.

ABHA கார்டு பெறும் முறை:

இந்த கார்டுக்கு உரிய இணையத்தளத்தை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாகவே உருவாக்கி கொள்ளலாம்.

மத்திய அரசின் சுகாதார அட்டை இலவசமாக விண்ணப்பித்து பெறுவது எப்படி 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => Today Useful Information in Tamil
Advertisement