AC or Air Cooler Which is Best
நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு வீட்டில் Fan இருக்கிறது என்றால் அது அவர்களுக்கு மிகவும் பெரியதாக இருக்கும். ஏனென்றால் அப்போது எல்லாம் அனைத்து வீடுகளிலும் மினிவிசிறி இல்லை. ஓரிரு வீடுகளில் தான் இருந்தது. ஆனால் இப்போது AC மற்றும் Air கூலர் இல்லாத வீடுகளை நாம் அதிகமாக பார்த்து இருக்க முடியாது. என்ன தான் இவை இரண்டில் ஏதோ ஒன்றை நாம் பயன்படுத்தினாலும் கூட இதில் எது மிகவும் சிறந்த ஒன்றாக இருக்கும் என்பது ஒரு பெரிய சந்தேகமாக அனைவருக்கும் இருக்கிறது. அதனால் இன்று AC அல்லது Air Cooler இரண்டில் எது வீட்டிற்கு உகந்த ஒன்றாக இருக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
ஏசி என்றால் என்ன..?
AC என்று நாம் கூறுவதன் முழு விரிவாக்கம் Air Conditioner என்பது ஆகும். இத்தகைய AC ஆனது ஒரு அறையில் இருக்கும் வெப்பத்தினை உள்வாங்கி குளிர்ச்சியை அளிக்கும் ஒரு சாதனம் ஆகும்.
மேலும் இவ்வாறு குளிர்ந்த காற்றை வெளிப்படுத்துவதன் மூலம் அந்த அறை முழுவதும் குளிர்ச்சியாக மாறிவிடுகிறது. இதுவே AC-யின் செயல்பாடு ஆகும்.

- AC அதிக மின்னழுத்தத்தில் மட்டுமே வேலை செய்யும் திறன் உடையது. அதாவது குறைவான மின்சாரம் இருக்கும் போது இது அவ்வளவாக வேலை செய்யாது.
- அதேபோல் இதனை நாம் தினமும் பராமரிக்கோ அல்லது சுத்தம் செய்யவோ வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் இதனின் இதர பராமரிப்பு செலவு என்பது அதிகமாக உள்ளது.
- இதில் நாம் தண்ணீர் ஊற்ற அவசியம் இல்லை. நமக்கு குளிரூட்டியின் சேவை தேவைப்படுகிறதோ, அவ்வப்போது இதனை On செய்தால் போதும்.
- ஏசியின் உட்புறத்தை மட்டும் நாம் சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும். இதனின் விலை என்பது Air Cooler-ஐ விட அதிகம்.
- மேலும் AC அதிகப்படியான குளிர்ச்சியினை அளிக்கிறது. அதேபோல் இந்த குளிரூட்டியினை சுவற்றில் தான் நாம் மாற்றி வைக்க முடியும். அதற்கு என்று ஒரு தனி இடம் தேவை.
ஏர் கூலர் என்றால் என்ன..?
ஏர் கூலர் காற்று அல்லது அறையில் இருந்து வரும் வெப்பத்தினை சிதறடிக்க செய்து பின்பு இது குளிர்ந்தகாற்றினை அறை முழுவதும் செலுத்துகிறது. மேலும் இத்தகைய குளிர்ந்த காற்றினை மின்விசிறி மூலமாகவும், நாம் ஊற்றும் தண்ணீரை எடுத்துக்கொண்டும் தான் அளிக்கிறது.

- Air Cooler பெரும்பாலும் குறைந்த அளவு மின்னழுத்தத்தில் கூட செயல்படும் திறன் கொண்டது.
- இதற்கு தினசரி நீங்கள் சரியான அளவில் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஏனென்றால் தண்ணீர் ஊற்றினால் மட்டுமே இது செயல்படும் திறன் கொண்டது.
- Air Cooler-ன் உள் மற்றும் வெளிப்புறங்களை நாம் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு பராமரிப்பு என்பது மிகவும் அதிகமாக உள்ளது.
- அதேபோல் Air Cooler-ல் கொடுக்கப்பட்டுள்ள பட்டனை வைத்து நீங்கள் இதனை Operate செய்து கொள்ளலாம்.
- மேலும் இதனின் விலை மிகவும் குறைவு. அதேபோல் இதை உங்களுடைய வீட்டில் எங்கு உங்களுக்கு ஏற்றவாறு இருக்கிறதோ அதே இடத்தில் வைத்து கொள்ளலாம்.
- AC உடன் ஒப்பிடும் போது இது அந்த அளவிற்கு அதிகப்படியான காற்றை அளிப்பது இல்லை மேலும் இதனையுடைய எடையும் குறைவு.
AC or Air Cooler இரண்டில் எது சிறந்தது..?
எவ்வளவு ரூபாய் செலவானாலும் கூட பரவாயில்லை எனக்கு அறை அதிகமான குளிர்ச்சியுடன் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு AC சிறந்த ஒன்று. அதே விலை குறைவாகவும் கோடைக்காலத்திற்கு மட்டும் ஏற்றதாக இருந்தால் போதும் என்று நினைப்பவர்களுக்கு Air Cooler சிறந்த ஒன்று.
சீலிங் பேன் vs டேபிள் பேன் இரண்டில் எது சிறந்தது.
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |










