சிம் கார்டு
இந்த நவீன காலத்தை பொறுத்தவரை பிறந்த 7 மாத குழந்தையை தவிர மற்ற அனைவரும் மொபைலில் மூழ்கி போகிருக்கும் காலமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக பார்த்தோம் என்றால் ஆண்ட்ராய்டு மொபைல் உபயோகப்படுத்தாக நபர்கள் இல்லை என்றால் தான் சொல்ல வேண்டும். இத்தகைய மொபைலையை வாங்கினால் மட்டும் போதாது அந்த மொபைலை உபயோகப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு சிம் கார்டு என்ற ஒன்று கட்டாயமாக தேவைப்படுகிறது. இந்த சிம் கார்டினை நம்முடைய மொபைலில் செலுத்தினால் தான் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தகவலினை பகிர்ந்து கொள்ள முடியும். இவ்வாறு நாம் பயன்படுத்தும் சிம் கார்டில் ரீச்சார்ஜ் செய்யவில்லை என்றால் அது எத்தனை நாட்களுக்கு பின் Deactivate செய்யப்படும் தெரியுமா..? ஒரு வேளை இதற்கான பதில் உங்களுக்கு தெரியவில்லை என்றால் இந்த பயனுள்ள பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள் நண்பர்களே…!
இதையும் படியுங்கள்⇒ SIM கார்டு எப்படி Work ஆகிறது..? SIM கார்டில் இந்த சிப் எதுக்கு இருக்குனு தெரியுமா..
After How Many Days SIM Gets Deactivated Without Recharge:
சிம் கார்டில் வோடபோன், ஏர்டெல், ஜியோ மற்றும் BSNL என்ற நிறைய வகைகள் உள்ளது. ஒவ்வொருவரும் அவர் அவருடைய மொபைலின் வசதிற்கு ஏற்ற மாதிரியான SIM கார்டினை பயன்படுத்து வருகிறார்கள்.
அதுமட்டும் இல்லாமல் சிலர் ஒரு மொபைலில் 2 வகையான சிம் கார்டினை போட்டும் உபயோகப்படுத்தி வருகிறார்கள்.
இப்படி நாம் பயன்படுத்தும் சிம் கார்டில் சில நேரத்தில் ஒன்றுக்கு மட்டும் ரீச்சார்ஜ் செய்து விட்டு மற்றொன்று அப்படியே விட்டு விடுவோம். இதே முறை தொடரும் போது நம்முடைய சிம் கார்டிற்கு வரும் அழைப்புகள் அனைத்தும் துண்டிப்படும். மேலும் சில நாட்களுக்கு பிறகு சிம் கார்டு ஆனது செயலிழக்கப்படும்.
ஒரு சிம் கார்டு ரீச்சார்ஜ் செய்யாமல் இருந்தால் எத்தனை நாட்கள் கழித்து Deactivate செய்யப்படும் தெரியுமா..?
சிம் கார்டு ரீச்சார்ஜ் எந்த விதமான பயன்பாடும் இல்லாமல் 90 நாட்கள் வரை அப்படியே இருந்தால் Telecom Regulatory Authority of India என்ற விதியின் படி உங்களுடைய Pre Paid கணக்கில் இருந்து 20 ரூபாய் தொகை பிடிக்கப்பட்டு மீண்டும் 30 நாட்களுக்கு சிம் கார்டு Activate செய்யப்படும். ஒரு வேளை உங்களுடைய Pre Paid கணக்கில் பணம் இல்லாத பட்சத்தில் உங்களுக்கு 15 நாட்கள் ரீச்சார்ஜ் செய்வதற்கு கால அவகாசம் அளிக்கப்படும்.மேலும் நீங்கள் இந்த அவகாசக் காலம் முடிந்த பிறகும் உங்களுடைய SIM கார்டிற்கு ரீச்சார்ஜ் செய்ய தவறினால் உங்களுடைய மொபைல் எண்ணினை மறு சுழற்சி செய்து மற்றொரு நபருக்கு விற்பனை செய்யப்படும்.
ஆகவே 90 நாட்கள் கழித்து உங்களுடைய SIM கார்டு ஆனது Deactivate செய்யப்படும்.
இதையும் படியுங்கள்⇒ டெலெக்ராம் பயன்படுத்த இனி சிம் கார்டு தேவையில்லை.. புதிய Update
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |