Almonds in Tamil
வணக்கம் பிரிஎண்ட்ஸ்..! தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றிர்கள் அதேபோல் இன்றைய பதிவிலும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொள்ள இருக்கின்றோம். பொதுவாக இந்த உலகில் நாம் மிக மிக ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் அதற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படுவது உணவு தான். இப்படி நமது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக உள்ள உணவு பொருட்களை பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதே உண்மை. அதாவது நாம் உண்ணும் உணவுபொருட்களின் பிறப்பிடம், வேறுபெயர்கள், தோற்றம், வகைகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்கள் ஆகியவை அனைத்து நமக்கு தெரிந்திருக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் பாதாம் பருப்பின் (Almonds) பிறப்பிடம், வேறுபெயர்கள், தோற்றம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்கள் ஆகியவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Almond Information in Tamil:
பாதாம் என்பது ப்ரூனஸ் இனத்தை சேர்ந்த ஒரு மரம் ஆகும். இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். மேலும் இது அமிக்டலஸ் என்ற துணை இனத்தில் உள்ள பீச் உடன் வகைப்படுத்தப்படுகிறது.
இதில் உள்ள பாதாம் பருப்பினை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பாதாம் பழம் ஒரு ட்ரூப் ஆகும். அதாவது இது ஒரு வெளிப்புற மேலோடு மற்றும் விதையுடன் கூடிய கடினமான ஓடு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இவ்விரண்டு ஆடுகளையும் நீக்கிவிட்டு தான் இந்த பாதாம் பருப்பினை நாம் சாப்பிட முடியும். பாதாம் 4–12.2 மீட்டர் (13–40 அடி) உயரம் வரை வளரும் ஒரு இலையுதிர் மரம் ஆகும்.
இதன் தண்டுகள் 30 சென்டிமீட்டர் (12 அங்குலம்) வரை விட்டம் கொண்டவை, இதன் கிளைகள் இளம் நிலையில் உள்ள பொழுது பச்சை நிறத்தில் இருக்கும், சூரிய ஒளியில் வெளிப்படும் பொழுது ஊதா நிறமாக மாறி, இரண்டாவது ஆண்டில் சாம்பல் நிறமாக மாறும்.
இதன் இலைகள் 8-13 செமீ (3-5 அங்குலம்) நீளமும் உள்ளது. இவற்றின் மலர்கள் வெள்ளை முதல் வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில ஐந்து இதழ்களை கொண்டும் 3-5 செமீ (1-2 அங்குலம்) விட்டம் கொண்டவையாக இருக்கும்.
சூடான, வறண்ட கோடை, மிதமான குளிர்காலதில் மற்றும் மத்திய தரைக்கடல் காலநிலையில் பாதாம் சிறப்பாக வளரும். இவற்றின் வளர்ச்சிக்கான உகந்த வெப்பநிலை 15 முதல் 30 °C (59 மற்றும் 86 °F) ஆகும்.
Peppermint பற்றி உங்களுக்கு தெரியுமா
வகைகள்:
- இனிப்பு பாதாம்
- கசப்பு பாதாம்
- Nonpareil
- Tuono
- மரியானா
பிறப்பிடம்:
இந்த பாதாம் ஈரான் மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளை பூர்வீகமாகக் கொண்டது. ஆனால் தற்பொழுது உலக நாடுகள் அனைத்திலும் பயிரிடப்படுகிறது.
வேறுபெயர்கள்:
இது தமிழ் மொழியில் பாதாம் அல்லது வாதுமை என்றும், ஆங்கில மொழியில் அல்மோன்ட் (Almonds) என்றும், ப்ரூனஸ் அமிக்டலஸ் (Prunus amygdalus) என்ற அறிவியல் பெயராலும் அழைக்கப்படுகிறது.
ராகியை அதிக அளவு உணவில் சேர்த்து கொள்வீர்களா அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க
ஊட்டச்சத்துக்கள்:
பாதாம் நார்ச்சத்து, புரதங்கள், வைட்டமின் ஈ, மெக்னீசியம், மாங்கனீஸ், தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாக உள்ளது.
பயன்கள்:
பாதாம் நமது செரிமானத்தை மேம்படுத்துகிறது.
நமது உடலுக்கு கூடுதல் ஊட்டச்சத்துக்களை அளிக்கின்றது.
எடை இழப்பிற்கு மிக மிக உதவுகின்றது.
உடலில் அதிகப்படியாக உள்ள பைடிக் அமிலத்தை நீக்க பயன்படுகிறது.
புளிச்ச கீரையை சாப்பிட்டால் மட்டும் போதாது அதனை பற்றியும் தெரிஞ்சுக்கணும்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => | Today Useful Information in Tamil |