அல்சைமர் என்றால் என்ன தெரியுமா..?

Advertisement

Alzheimer’s Disease in Tamil

இன்றைய பதிவு நாம் அனைவருக்குமே மிகவும் பயனுள்ளதாக அமையும். ஆம் நண்பர்களே பொதுவாக இன்றைய காலகட்டத்தில் உள்ள முறையற்ற வாழ்க்கைமுறை மற்றும் சுற்றுசூழல் மாசுபாடு ஆகியவற்றால் பலவகையான நோய்கள் ஏற்படுகின்றது. ஆனால் அவற்றையெல்லாம் பற்றிய சரியான புரிதல் நமக்கு இல்லை என்பது தான் உண்மை. அப்படி உள்ள பலவகையான நோய்களில் ஒன்று தான் இந்த அல்சைமர் நோய். நம்மில் பலரும் இந்த அல்சைமர் என்ற வார்த்தையை பயன்படுத்துவதை கேட்டிருப்போம். ஆனால் அது என்ன நோய் அது எப்படி நமக்கு வருகின்றது. அதனால் நமக்கு எந்த மாதிரியான பாதிப்புக்கள் ஏற்படும். மேலும் அதனின் அறிகுறிகள் என்ன அதனை தடுக்க வழிகள் என்ன என்பது எல்லாம் பற்றி நமக்கு தெளிவாக தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. எனவே தான் இன்றைய பதிவில் இந்த அல்சைமர் நோய் பற்றிய முழுவிவரங்களையும் பதிவிட்டுளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

அல்சைமர் என்றால் என்ன..?

Alzheimer's disease symptoms in tamil

அல்சைமர் என்பது நரம்பியல் சிதைவினால் மெதுவாக ஆரம்பித்து நாட்கள் செல்ல செல்ல மோசமான நிலையை அடையும் ஒரு நாட்பட்ட நோயாகும். இது பொதுவாக அறிவாற்றல் இழப்பின் அல்லது மறதிநோயின் மிகப் பொதுவான வடிவம் ஆகும்.

அதாவது 60 -70 % ஆன மறதிநோய் இந்த ஆல்சைமர் நோயினால் ஏற்படுவதே ஆகும். இந்நோய்யானது திசுக்கள் அழிவினால் உருவாகும். குணப்படுத்த முடியாத இந் நோயை 1906 ஆம் ஆண்டில், செருமானிய மனநோய் மருத்துவரான ஆலோயிசு ஆல்சைமர் (Alois Alzheimer) என்பவர் தான் முதன் முதலில் கண்டறிந்து அதனை பற்றி விரிவாக விளக்கினார்.

பார்கின்சன் நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

பொதுவாக 65 வயதுக்கு மேற்பட்டோரில் 6% மானவர்களில் இந்நோய் காணப்படுவதுடன், வயது அதிகரிக்கையில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.

மிகவும் அரிதாகவே இது 65 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஏற்படுகிறது. அதாவது 2006-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் உலகம் முழுவதும் 26.6 மில்லியன் நபர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல் 2015-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் உலகம் முழுவதும் 29.8 மில்லியன் நபர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இது 2050-ஆம் ஆண்டில் நான்கு மடங்காக அதிகரிக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.

அல்சைமர் நோய் அறிகுறிகள்:

  • சமீபத்திய நிகழ்வுகளை மறத்தல்
  • மொழிப் பயன்பாட்டில் பிரச்சினைகள் ஏற்படல்.
  • மனநிலை ஊசலாட்டம்
  • சுய பராமரிப்பு மேலாண்மை பிரச்சினைகள்
  • நடத்தை பிரச்சினைகள்

மேலே கூறியுள்ள அறிகுறிகளோடு நோயுற்றவரின் இயல் நிலையில் குறைபாடு ஏற்படும்போது, அவர்கள் தம் குடும்பம் மற்றும் சமூகத்திலிருந்து விலகுகின்றனர். மேலும் படிப்படியாக, உடல் செயல்பாடுகள் குறைந்து, இறுதியில் மரணத்தை அடைகின்றனர்.

ஆண்களை பாதிக்கும் ஹெர்னியா நோயை பற்றி உங்களுக்கு தெரியுமா

அல்சைமர் நோயை ஏற்பட காரணங்கள்:

இந்த அல்சைமர் நோயை ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் இன்னும் சரியாக அறியப்படவில்லை. ஆனால் இந்நோய் பொதுவாக (70%) மரபணுக்களினால் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் சில காரணங்கள் கூறப்படுகிறது. அதாவது தலையில் காயங்கள், மனச்சோர்வு அல்லது உயர் இரத்த அழுத்தம், மூளையில் உள்ள இரத்த உறைக்கட்டி மற்றும் சிக்கலான தொத்து நோய் ஆகியவையும் இந்நோய் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களாக கூறப்படுகிறது.

அல்சைமர் நோயை தடுக்கும் வழிகள்:

55 – 60 வயதைக் கடந்தவர்கள் ஓய்வு பெற்றாலும் வீட்டிலேயே முடங்கி விடக்கூடாது. தினமும், அன்றாட வேலைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்யப் பழகிக்கொள்ள வேண்டும்.

தினமும் செய்திதாள்கள் படிப்பது அவசியம். குறுக்கெழுத்துப் புதிர்கள் முதலான, போட்டிகளில் கலந்துகொள்ளுங்கள். சிக்கலான கணக்குப் புதிர்களை விடுவிக்க முயற்சிசெய்யுங்கள். எப்போதும், மூளைக்கு வேலை கொடுத்துக் கொண்டே இருங்கள்.

இவ்வற்றையெல்லாம் எல்லாம் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நீங்கள் உங்களை அல்சைமர் நோயிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம்.

கருணைக்கிழங்கினை சாப்பாட்டில் அதிக அளவு சேர்த்து கொள்வீர்களா அப்போ இதை கண்டிபாக தெரிஞ்சிகோங்க

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement