AM/PM Full Form in Tamil | AM PM என்பதன் பொருள்
நம்முடைய வாழ்க்கையில் அன்றாடம் பயனப்டுத்தும் வார்த்தைகளுக்கு அர்த்தங்களை தெரியாமல் தான் பயன்படுத்தி வருகிறோம். அதுவே ஒரு வார்த்தை ட்ரென்ட் ஆகி கொண்டிருக்கிறது என்றால் மட்டுமே அந்த வார்த்தைக்கான அர்த்தத்தைதேடுவோம். அதாவது சமூக வலைத்தளங்கள் அல்லது தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு வார்த்தை புதிதாக சொல்லி விட்டார்கள் என்றால் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்வதற்கு ஆவலாகஇருப்போம்.
அதுமட்டுமில்லாமல் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கான அர்த்தத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆகவே இன்றைய பதிவில் AM/PM என்பதன் தமிழ் விரிவாக்கம் என்ன என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.
AM full form in tamil – தமிழ் விரிவாக்கம்:
ஒரு நாளைக்கு 24 மணிகள், மணிக்கு 60 நிமிடங்கள், நிமிடத்திற்கு 60 வினாடிகள் என்ற கால அளவைப்போல், 12 மாதங்கள், 365/366 நாட்கள் கொண்ட ஜனவரி முதல் டிசம்பர் வரை கொண்டுள்ளது ஒரு ஆண்டிற்கான கால அளவு. இந்த 24 மணி நேரத்தில் 12 மணி நேரம் AM என்றும், மீதி 12 மணி நேரத்தை PM என்றும் பிரித்து வைத்துள்ளனர்.
AM என்பதன் ஆங்கில விரிவாக்கம் Ante meridiem எனப்படும். தமிழில் நேரத்திற்கு ஏற்ப முற்பகல், காலை, அதிகாலை என்று அழைப்பார்கள். இந்த முற்பகலுக்கான காலமானது. இரவு பன்னிரண்டு மணி மற்றும் நாளின் நடுவில் பன்னிரண்டு மணி ஆகிய இடைப்பட்ட நேரத்தை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

PM full form in tamil – தமிழ் விரிவாக்கம்:
PM என்பதற்கான ஆங்கில விரிவாக்கம் Post meridiem எனப்படும். இதனை தமிழில் பிற்பகல், மதியம், நண்பகல், உச்சிவேளை, பகல் என்று பகல் பன்னிரண்டு மணி முதல் இரவு பன்னிரண்டு மணி ஆகிய இடைப்பட்ட நேரத்தை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
| RIP Full Form in Tamil | RIP தமிழ் விரிவாக்கம் என்ன தெரியுமா? |
| MLA Full Form in Tamil – MLA தமிழ் விரிவாக்கம் என்ன தெரியுமா? |
| மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |













