அம்பேத்கர் பாடல் வரிகள்
இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய அண்ணல், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாள் இறுதி வரை போராடிய அம்பேத்கரின் பிறந்த நாளானது ஏப்ரல் 14-ம் தேதி வருகிறது. இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர். ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். இவரை பற்றி பாடல் வரிகளை இந்த பதிவில் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
அம்பேத்கர் பாடல் தமிழ்:
‘கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய் என்றே
கருத்தை நெஞ்சில் விதைத்த வீரர் – போர்க்
களத்தில் நின்று விளைத்த சூரர்
அற்பச் சாதியை அழித்திட வந்தே
அறிவை ஊட்டிய அரிய தீரர் – எம்
அகத்தில் வாழ்கின் றசிங் காரர்
டாக்டர் அம்பேத்கரின் சிந்தனைகள்
மாற்ற ஊற்று மதியில் நெருப்பு
மநுவைக் கொல்ல வந்த மழுவாம் – அவர்
மண்ணைப் பிளந்து தந்த கொழுவாம்
ஆற்றல் வேகம் அருளும் மேகம்
அனலின் சொற்கள் பிடித்து எழுவோம் – அவர்
அடியில் விழுந்து வணங்கித் தொழுவோம்
ஏற்றி வைத்து எம்மைக் காத்த
ஏந்தல் நாங்கள் பெற்ற சீராம் – ஏழை
எங்கள் அண்ணல் அவர்தான் யாராம்
போற்றிப் பாடித் துதிக்க வந்த
பாபா சாகேப் அம்பேத் காராம் – அது
போரா டென்று தூண்டும் பேராம்”
| இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |














