அம்மா பற்றிய பொன்மொழிகள்

Advertisement

அம்மா பற்றிய பொன்மொழிகள் 

பொதுவாக இந்த உலகில் பிறந்த ஆடு, மாடு, மனிதன் போன்ற எல்லா உயிரினங்களுக்கும் அம்மா என்றால் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் நாம் எவ்வளவு கோபம் பட்டாலும் நம் மீது அன்பை மட்டும் காட்டுவது அம்மா மட்டுமே. அம்மா பற்றி சொன்னால் சொல்லி கொண்டே போகலாம். அம்மாவை பற்றி கூற இந்த ஒரு பதிவு போதாது. இந்த பதிவில் அம்மா பற்றிய பொன்மொழிகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

தாய் பற்றிய பொன்மொழிகள்:

1.நான் எனது தாயின் பிரார்த்தனைகளை நினைவு கூறுகின்றேன் அவை எப்பொழுதும் என்னைப் பின்தொடர்கின்றன. அவை வாழ்நாள் முழுவதும் என்னை பாதுகாப்பு அரணாக பற்றிக்கொண்டுள்ளன”. – ஆப்ரஹாம் லிங்கன்.

2.ஒரு சிறந்த தாய்100 ஆசிரியர்களுக்கு சமமானவள்-ஹெர்பர்ட்

3.தாயின் இதயம் தான் குழந்தையின் முதல் பள்ளிக்கூடம்

4.கடவுள் எங்கும் நிறைந்திருக்க முடியாது என்பதால் தான் தாய்மார்களை படைத்துள்ளான்-ஜார்ஜ் எலியட்

5.அறிவின் தாயகமாய், அருள் நிறைந்த உள்ளமாய் இருப்பவள் பெண்-ஜெய காந்தன்

6.சமூகத்தின் எதிர்க்காலம் தாய்மார்களின் கைகளில் உள்ளது- டிபூ போர்ட்

7.இருப்பது ஒரு அன்னமாயினும் தனக்கென இல்லாமல்  பிள்ளைக்கு ஊட்டி மகிழ்பவளே தாய்-கண்ணதாசன்

8.வாழ்வில் சொந்தம் என்று சொல்லக்கூடிய சொத்து தாயும், அவளது பாசமே.-கோல்டன்

9. உங்களிடம் சொல்ல முடியாத அளவுக்கு உறுதியான செல்வம், தங்க நகைப் பெட்டகங்கள் மற்றும் தங்க கருவூலங்கள் என எல்லாம் இருக்கலாம், ஆனால் ஒருபோதும் நீங்கள் என்னை விட பணக்காரனாக முடியாது. அனைத்து செல்வங்களை விட உயர்ந்த, என்னை படிக்க வைத்த ஒரு தாய் என்னிடம் இருந்தாள்” – ஸ்டிரிக்லேண்ட் கில்லன்.

`10. எனது அம்மா ஒரு கடின உழைப்பாளி. அவர் தலைகீழாக நின்றேனும் ஒரு காரியத்தை செய்து முடிப்பார். மேலும் அவர் மகிழ்ச்சியாக இருக்க ஒரு வழியை கண்டறிந்துள்ளார். ‘மகிழ்ச்சி என்பது உங்கள் சொந்த பொறுப்பு’ என்று அவர் எப்பொழுதும் சொல்வார்” – கார்னர் ஜெனிஃபர்.

11. தாய்மார்கள் மட்டுமே வருங்காலத்தை சிந்திக்க முடியும் – ஏனென்றால் அவர்கள் தான் குழந்தைகளின் வடிவில் வருங்காலத்தைப் பெற்றெடுக்கிறார்கள்” – மேக்ஸிம் கோர்கி.

12. நான் கீழே விழும் போது எனக்கு உதவ ஓடி வருவார்.! ஒரு அழகான கதையை சொல்லி என் வலியை மறைக்க செய்வாள்.! காயங்களை குணமாக்க அவ்விடத்தில் முத்தங்களை பொழிவார். அவர் தான் அம்மா.!- ஆன் டெய்லர்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement