Animal Vidukathai in Tamil With Answer
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம். விடுகதை வினா விடைகளை பற்றி தேடிக்கொண்டு இருக்கிறீர்களா? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான் ஆம் இங்கு விலங்குகள் பற்றிய சில வகையான வினா விடைகளை பதிவு செய்துள்ளோம் அதனை படித்து மகிழுங்கள்..
விலங்கு விடுகதை வினா விடை:
1 சிறகடித்து பரப்பவனை சமாதானத்துக்கு உதாரணம் சொல்வர்? அவன் யார்?
விடை: புறா
2 அவன் கழற்றிய சட்டையை அடுத்தவர் போட முடியாது அது என்ன?
விடை: பாம்பு
3 சின்ன மீசைக்காரன் மியாவ் ஓசைக்காரன் அவன் யார்?
விடை: பூனை
4 இருட்டில் கண் சிமிட்டும் ஆனால் நட்சத்திரம் அல்ல அது என்ன?
விடை: மின்மினி பூச்சி
5 சங்கீத பாட்டுக்காரன் மழையில் கச்சேரியை செய்வான் அவன் யார்?
விடை: தவளை
6 எட்டு கால் ஊன்றி ஒருகால் பட வட்ட குடை பிடித்து வருவான் அவன் யார்?
விடை: நண்டு
7 சட்டையை கழட்டியவன் புது சட்டை தான் போடுவான் அவன் யார்?
விடை: பாம்பு
8 கேடயமுள்ள வீரனுக்கு வாள் இல்லை அவன் யார்?
விடை: ஆமை
9 ஒற்றைக்கால் வெள்ளைச்சாமி நீரோடையில் மீன் பிடிக்கிறான் அவன் யார்?
விடை: கொக்கு
10 குடியிருக்க கோட்டை கட்டும் அந்த கோட்டையை உடைத்து வெளியே வரும் அது என்ன?
விடை: பட்டாம் பூச்சி
11 வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு பிடிக்காது எது என்ன?
விடை: நாய்
12 குளம்படி ஓசைக்காரன் சவாரிக்கு கெட்டிக்காரன் அவன் யார்?
விடை: குதிரை
13 போகுமிடம் எல்லாம் தம்பி கோடு கிளிப்பான் அவன் யார்?
விடை: நத்தை
15 கருப்பு நிறமுடையவன் கபடம் அதிகம் கொண்டவன். கூவி அழைத்தால் வந்திடுவான் கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் அவன் யார்?
விடை: காகம்
16 மண்ணைச் சாப்பிட்டு மண்ணிலேயே வாழ்ந்து மண்ணோடு மண்ணாவன் அவன் யார்?
விடை: மண்புழு
17 மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல அவன் யார்?
விடை: அணில்
18 நாலுகால் வீரன் அவன் நன்றிக்கு உதாரணம் அவன். அவன் யார்?
விடை: நாய்
19 இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
விடை: தேள்
20 சுமக்க தெரிந்த எனக்கு துவைக்க தெரியாதே நான் யார்?
விடை: கழுதை
இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
தமிழில் விடுகதைகள் கேள்வி பதில்..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |