காது இல்லாத உயிரினங்கள் யாவை ? அவை எவ்வாறு ஒளியை உணருகிறது !

Advertisement

காது இல்லாத விலங்குகள்

பல விலங்குகளுக்கு காதுகள் இல்லை. சில விலங்குகளுக்கு வெளிப்புற காதுகள் இல்லாமல் உட்புற காதுகள் இருக்கின்றனர். அதை நம்மால் பார்க்க முடியாது. மனிதர்கள் மற்றும் பாலூட்டி இனங்களுக்கு காது உண்டு அதை நம்மால் பார்க்க முடியும்.

காது இல்ல உயிரினங்கள் சில கண்ணால் பார்த்த பின்னரே ஒலி அலைகளை கண்டறிந்து செயல்படுகிறது. ஒரு சில உயிரினங்களுக்கு ஒலி அலைகளை உணரும் பண்புகள் காணப்படுவதில்லை ஆனால் அவை செயல்படுகின்றனர். இதற்கான ஆராய்ச்சிகள் இன்றளவும் நடந்து கொண்டு தான் உள்ளது. இன்றைய பதிவில் காது இல்லாத உயிரினங்களை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

காது இல்லாத உயிரினங்கள் | Animals Without Ears Name in Tamil

காது இல்லாத விலங்குகளில் வெளிப்புற காதுகள் இல்லாத விலங்குகள் உட்புற காது இல்லாத விலங்குகள் என இரண்டு வகைகளை பற்றி பார்ப்போமா.

பாம்புகள்:

பாம்புகளுக்கு வெளிப்புறக் காதுகள் கிடையாது. அவை ஒலியை கண்டறிய நிலத்தின் அதிர்வு மற்றும் அதன் உடலில் ஏற்படும் அதிர்வுகள் மூலம் உணருகிறது.

பாம்புகள் அதன் இரை மற்றும் தனக்கு ஏற்படும் அச்ச்சுறுத்தல்களை ஆவின் மூலம் அறிகிறது. பாம்பின் உள் காதுகள் குறைந்த அளவில் ஏற்படும் அதிர்வுகளையும் அறியும் அதிக உணர்வு திறன் கொண்டது.

நீர் வாழ் உயிரினங்கள்:

தவளைகள், தேரைகள் மற்றும் சாலமண்டர்கள் உட்பட பெரும்பாலான நீர் வாழ் உயிரினங்கள் வெளிப்புற காதை கொண்டு இருக்க வில்லை.

இவையும் ஒலிகளை அறிய அதிர்வுகளை உணருகின்றன.

நீர் வாழ் உயிரினங்களின் தலை அல்லது உடலில் அமைந்துள்ள டிம்மானிக் சவ்வுகள் அதிர்வுகளை உணர உதவுகின்றது.

பூச்சி இனங்கள்:

பூச்சி இனங்களான எறும்புகள் மற்றும் கரப்பான் பூச்சிகள், முற்றிலும் வேறுபட்ட செவிப்புல அமைப்பைக் கொண்டுள்ளது.

அவை ஒலியை டிம்பனல் உறுப்புகள் மூலம் உணருகின்றது. இவை அந்த பூச்சி இனங்களில் கால் மற்றும் வயிற்று பகுதியில் உள்ளது.

பறவைகள்:

பறவைகள் காதுகள், பாலூட்டிகளின் காதுகளைப் போன்று உட்புற  காதுகளை கொண்டது.

பறவைகளில் வெளிப்புறத்தில் காணப்படும் துளை காது துளைகள் எனப்படுகிறது. இந்த காது துளை இறகுகளால் மூடப்பட்டிருக்கும்.

இவை ஒலிஅலைகளை உட்புற காதுக்கு செலுத்த உதவுகிறது.

பலீன் திமிங்கலங்கலம்:

பலீன் திமிங்கலங்கலம் போன்ற சில திமிங்கலங்களுக்கு வெளிப்புற காதுகள் இல்லை. அவை அவற்றின் எலும்புகள் மற்றும் மண்டை ஓட்டின் மூலம் ஒலி அலை உணருகிறது. அவை உட்புற காதுக்கு ஒலி அலைகளை அனுப்புகிறது.

பச்சோந்தி:

பச்சோந்திக்கு உட்புற மற்றும் வெளிப்புற காதுகள் கிடையாது. அவை எவ்வாறு ஒலிகளை உணருகின்றது என்பது இன்று வரை ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

வெளிப்புறக் காதுகள் இல்லாவிட்டாலும், விலங்குகள் அவை இருக்கும் சூழலுக்கு ஏற்ப தம்மை தகவமைத்து, ஒலியைக் கண்டறிவதற்கான மாற்று முறைகளை கொண்டுள்ளது.

அந்த உணர்வு திறன் அவை வாழ உதவுகிறது.

பறவைகள் மற்றும் விலங்குகளின் ஒலிகள் | Sounds Of Animals And Birds in Tamil Language

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement