அன்னையர் தின பாடல்
தாய் தன் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அன்பிற்கு அளவே கிடையாது. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தன் பிள்ளை மீது அதிக பாசமும், அன்பையும் வைத்திருக்கும். அன்னை தனது பிள்ளைகள் மீதும் தனது குடும்பத்தின் மீதும் அள்ளித் தரும் அளவிட முடியாத அன்பை, அவா்களின் ஒப்பற்ற பங்களிப்புகள் மற்றும் அவா்களின் தன்னலமற்றத் தியாகத்தை கொண்டாடுவதே அன்னையா் தினம் ஆகும். அம்மா என்ற சொல்லை உச்சாிக்கும் போது நம் அனைவருடைய உள்ளங்களும் உணா்ச்சி மிகுதியால் தத்தளிக்கின்றன. அன்னையின் அன்பு தனித்துவமானது, உண்மையானது மற்ற எவரோடும் அன்னையின் அன்பை ஒப்பிட முடியாது. இந்த ஆண்டு உலகம் முழுவதும் அன்னையர் தினம் மே மாதம் 12-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த பதிவில் அன்னையர் தினம் பாடல் வரிகளை அறிந்து கொள்வோம் வாங்க..
Annaiyar Dhinam Paadal Varigal
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காத உயிரில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயின்றி வேறொன்று எது
அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி
திருக்கோவில் தெய்வங்கள் நீதானமா அன்னைக்கு
அன்றாடம் அபிஷேகம் அலங்காரம் புரிகின்ற
சிறுத்தொண்டன் நான் தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அடுத்த பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாக பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாய் அம்மா அம்மா
அருள்வேண்டும் எனக்கென்று அது போதுமே
பசும்தங்கம் புது வெள்ளி ,மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி நீப்பட்ட பெரும்பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே
தாயிற்சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
தன்னலம் அற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |