பள்ளி ஆண்டுவிழா வரவேற்புரை! | Annual Day Speech in Tamil

Advertisement

School Annual Day Speech in Tamil | Annual Day Speech in Tamil 

ஒவ்வோரண்டும் பள்ளிகளில் ஆண்டுவிழா நடத்தப்படும், இதில் அந்த ஆண்டில் என்னனா அவர்கள் செய்திருக்கின்றார்கள் மற்றும் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்தும் சொல்லிவிட்டு, பல நிகழ்ச்சிகளுடன் மிக அழகாக அந்த நாளை கொண்டாடுவார்கள். இந்த ஆண்டுவிழாவில் மாணவர்கள் நடனமாடியும், பாட்டு பாடியும் அவர்களது திறைமைகளை வெளிப்படுத்துவார்கள். அந்த விழாவில் சிறப்பாக பங்குபெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். அப்படி துவங்கும் இந்த பள்ளி ஆண்டுவிழாவிற்கு நாங்கள் இங்கே சில ஆண்டுவிழா உரை கொடுத்துள்ளோம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

பள்ளி ஆண்டு விழாவுக்கான வரவேற்பு உரை:

முதலில் இது எத்தனையாவது வருடத்தின் பள்ளி ஆண்டுவிழா என்று ஆரம்பித்து தங்களது உரையை தொடங்கவேண்டும்.

எடுத்துக்காட்டாக எங்களது பள்ளியின் 18-வது ஆண்டு விழாவிற்கு வருகை தந்துள்ள அனைவரும் என்னுடைய வணக்கங்கள். எனது பள்ளியின் ஆண்டு விழாவில் பேசுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், முதல்வர், அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த பள்ளி ஆண்டுவிழாவை தலைமை தாங்கி நடத்த வந்திருக்கும் எமது சிறப்பு விருந்தினருக்கும் எனது வணக்கங்கள்.

எண்ணற்ற அறிஞர்கள், கவிஞர்கள், மேதைகள், மருத்துவர்கள், விளையாட்டு வீரர்கள், சாதனையாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு உலகத்தை அறிமுகப்படுத்தியதற்கு பள்ளியும் அதன் பயிற்றுவிப்பாளர்களும் பொறுப்பு என்பதை மறுக்க முடியாது. “ஆசிரிய பணியே அறப்பணி அதற்கே என்ன அர்ப்பணி” என்ற வார்த்தைக்கு இணங்க எம் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை நல்ல விதமாக ஒவ்வொரு துறையிலும் மெருகேற்றுகிறார்கள், எங்களது மாணவர்களும் அதற்கேற்றாற்போல் ஒவ்வொரு நாலும் தங்களை மேம்படுத்தி கொண்டு வருகின்றார்கள்.

ஆசிரியர் தின வரவேற்புரை | Teachers Day Welcome Speech in Tamil..!

Short Annual Day Speech in Tamil | Annual Day Speech:

பள்ளிக்கூடத்தில் படிப்பு அல்லாது சமூக நெறிகளை கற்றுக் கொடுத்தால், இயற்கை வளங்களை பாதுகாக்க சொல்லிக்கொடுத்தல், போன்ற வாழ்கை பாடங்களையும் அவர்கள் கற்பித்து வருகின்றார்கள். ஒரு பிள்ளை வீட்டில் அவர்களது பெற்றோர்களிடம் இருக்கும் நேரத்தை விட பள்ளியில் இருக்கும் நேரம் தான் அதிகம்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை அவர்கள் கற்றுகொண்டுவருகின்றார்கள். எங்கள் பள்ளி நகரத்திலேயே தலைசிறந்த பள்ளி என்று பெயரிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் குழந்தைகள் நடனம், விளையாட்டு, கலை மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட கல்விப் பகுதிகள் மற்றும் சாராத செயல்பாடுகள் இரண்டிலும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.

அவர்களை கௌரவிக்கும் விதமாக தான் ஆண்டுதோறும் பள்ளி ஆண்டுவிழாவானது நடைபெறுகின்றது.

ஒவ்வொரு பள்ளியிலும் விளையாட்டு மைதானங்கள் உள்ளன, இதனை உபயோகப்படுத்தி கல்வியைப் போலவே உடல் செயல்பாட்டிலும் முதன்மையாக இருக்கின்றார்கள். அதுமட்டுமின்றி எங்கள் பள்ளியில் மாணவர்களுக்கு யோகா கிளாஸ், பரதநாட்டியம் கிளாஸ், ஸ்விம்மிங் கிளாஸ், Kungfu கிளாஸ் போன்ற வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மாணவர்களும் ஆர்வத்துடன் எல்லா வகுப்புகளிலும் தவறாமல் கலந்துகொள்கின்றார்கள்.

எமது பாடசாலையில் பயிலும் மாணவர்கள் எதிர்கால சமுதாயத்தை சரியான பாதையில் வழிநடத்தும் தூண்களாக விளங்கும் சிந்தனைமிக்க நபர்களாக உருவாகுவார்கள் என நான் நம்புகிறேன்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement