அனுபவம் இருந்தால் பட்டா பெற முடியுமா..?

Advertisement

அனுபவ பாத்தியம் என்றால் என்ன..?

ஹாய் மக்களே..! இந்த பதிவை படித்த பின் உங்களுக்கு தெரியாத விஷயத்தை பற்றி தெரிந்துகொண்ட ஒரு திருப்தி கிடைக்கும். ஏனென்றால் இப்போது வாடகைக்கு இருப்பவர்களை விட புறம்போக்கு நிலத்தில் இருப்பவர்கள் தான் அதிகம். இன்னும் சிலர் பட்டா இல்லாமல் நீண்ட வருடங்களாக ஒரே இடத்தில் வசிப்பார்கள். அந்த பட்டா இல்லாத இடத்திற்கு எப்படி பட்டா பெறுவது. அந்த இடத்திற்கு என்னால் சொந்தம் கொண்டாட முடியுமா..? அதற்கு ஒரு விஷயம் உள்ளது. அது என்ன என்பதை பற்றி தெளிவாக தெரிந்துகொள்வோம் வாங்க..!

அனுபவ பாத்தியம் என்றால் என்ன..?

அனுபவ பாத்தியம் என்பது ஒருவர் மற்றொருவருடைய நிலம், வீடு வாடகை அல்லது குத்தகை எடுத்திருந்து அதனை அனுபவித்து வந்தால் அது அனுபவ பாத்தியம் எனப்படும். 
உதாரணத்திற்கு: 
ஒருவர் வீட்டை வாடகைக்கு கடந்த 12 வருடங்களுக்கு மேலாக இருந்து வந்தால் அதற்கு நீங்கள் அனுபவ சான்று வழங்க கோரலாம். வாடைக்கு விடுபவர்கள் கண்டிப்பாக ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும். அதில் அனைத்து  குறிப்புகளையும் கூறி அதில் இருவருமே கையெழுத்து இடவேண்டும்.
அப்போது தான் பிரச்சனை எதுவும் வாராது. அவர்களால் அனுபவ பாத்தியம் கேட்க முடியாது. அப்படி அவர்கள் வழக்கு தொடர்ந்தாலும் அவர்களுக்கு சாதகமாக முடியாது. இதை தான் எதிரிடை அனுபவ பாத்தியம் என்று சொல்வார்கள்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்குவது எப்படி.?

எப்போது அனுபவ பாத்தியம் செல்லுபடியாகும்:

ஒருவர் வெளியூர் வசித்து வருகிறார். இன்னொருவர் 1 ஏக்கர் நிலத்தில் காலம் காலமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அந்த வெளியூரில் இருந்த வந்தவர் இந்த இடத்திற்கு நான் தான் சொந்தகாரர், நீங்கள் வேறு இடத்திற்கு செல்லுங்கள் என்றால் அது எப்படி செல்லுபடியாகும்.

வெறும் பட்டா பத்திரம் இருந்தால் நீங்கள் தான் சொந்தகாரரா.? நீங்கள் இந்த ஊர் இல்லை உங்களுக்கு எப்படி இந்த இடம் சொந்தம் ஆகும் என்று தான் கேட்பார்கள். இந்நிலையில் இடத்தில் வசிப்பவர்கள் இந்த இடத்திற்கு அனுபவ பாத்திய வழக்கு தொடர்ந்து இடத்தை சொந்தமாக மாற்றி கொள்ள முடியும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement