அனுப்புநர் என்றால் என்ன தெரியுமா..? | Anupunar in Tamil

Advertisement

Anupunar in Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் Anupunar in Tamil அதாவது அனுப்புநர் என்றால் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நாம் அனைவருமே இந்த Anupunar in Tamil அனுப்புநர் என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருப்போம். காரணம் நாம் படிக்கும் காலத்தில் ஏதாவது கடிதங்கள் எழுத சொன்னால் அனுப்புநர் என்று தான் தொடங்குவோம்.

அந்த நினைவுகளை நம்மால் மறக்க முடியுமா..? நமக்கு ஏதாவது லீவ் வேண்டும் என்றால் முன்பெல்லாம் விடுமுறை விண்ணப்பம் எழுத சொல்வார்கள். அப்படி எழுதும் போது நாம் தொடங்கும் முதல் வார்த்தை அனுப்புநர் தான். ஆகவே இந்த பதிவின் வாயிலாக அனுப்புநர் என்றால் என்ன மற்றும் அனுப்புனர் அனுப்புநர் எது சரி என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க.

முறையான கடிதம் எழுதுவது எப்படி

அனுப்புநர் என்றால் என்ன..? 

கடிதங்களில் நாம் எழுதும் முதல் வார்த்தை அனுப்புநர் தான். எனவே அனுப்புநர் என்றால் ஒரு பொருளையோ கடிதத்தையோ அனுப்பும் நபர் என்று அர்த்தமாகும்.

இப்போது எடுத்துக்காட்டிற்கு நாம் ஒரு கடிதம் எழுதுகிறோம். அதாவது என் தந்தைக்கு நாம் ஒரு கடிதம் எழுதுகிறேன். அப்படி நான் எழுதிய கடிதத்தை என் தந்தை படிக்கும் போது, அந்த கடிதம் யார் அனுப்பியது என்பதை என் தந்தை தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா..?

அதற்காக தான் அனுப்புநர் விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. அனுப்புநர் விளக்கங்களில் கடிதம் எழுதும் நபரின் பெயர், முகவரி, இடம் போன்ற விவரங்களை கொடுக்க வேண்டும். நாமும் இப்படி தான் கடிதங்கள் எழுத வேண்டும்.

அதுபோல அனுப்புநர் என்பதற்கு அனுப்புபவர் என்றும் கூறலாம். அதாவது கடிதம் எழுதி அனுப்புபவர்.

நண்பனுக்கு கடிதம் எழுதுக

அனுப்புனர் அனுப்புநர் எது சரி..? 

சரி இதில் அனைவருக்கும் ஒரு குழப்பம் இருக்கிறது. அதாவது அனுப்புனர் அல்லது அனுப்புநர் இதில் எது சரியான வார்த்தை என்று..? அதை நாம் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

அனுப்புனர் அல்லது அனுப்புநர் என்பதில் அனுப்புநர் என்பது தான் சரியான வார்த்தையாகும்.

அதாவது வந்தனர், சென்றனர் என்ற பன்மை விகுதிக்கு மட்டுமே “னர்” என்ற வார்த்தை பயன்படும்.

அனுப்பு என்பது ஓர் செயலாகும். அதாவது ஒரு செயலை செய்பவரை குறிக்கும் போது “நர்”  விகுதி சேர்ப்பதே இலக்கண விதிப்படி சரியானதாகும். அனுப்பு என்ற சொல்லுடன் “நர்” விகுதி சேருகின்ற போது அனுப்புநர் என்றே எழுதவேண்டும்.

ஏனென்றால், வினைச் சொல்லை பெயர்ச் சொல்லாக மாற்றும் போது “ந” போட்டு எழுதுவதே மரபாகும். ஆகவே அனுப்புநர் என்ற வார்த்தை தான் சரியான வார்த்தையாகும்.

எடுத்துக்காட்டாக: பெறுநர், இயக்குநர், விடுநர் என்று சொல்லலாம்.

மன்னிப்பு கடிதம் எழுதும் முறை

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement