அரசனை நம்பி புருஷனை கைவிட்ட பழமொழியின் உண்மையான அர்த்தம் இதுதான்..!

Advertisement

Arasanai Nambi Purusanai | அரசனை நம்பி புருஷனை விட்ட கதை விளக்கம்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அரசனை நம்பி புருஷனை விட்ட பழமொழியின் உண்மையான அர்த்தத்தை விவரித்துள்ளோம்.  அக்காலத்தில் உள்ளவர்கள் வாழ்க்கை முறையை பழமொழி வடிவில் நமக்கு விட்டு சென்றுள்ளார்கள். ஆனால், அவர்கள் வகுத்து சென்றுள்ள பழமொழியையே காலப்போக்கில் நாம் தவறாக புரிந்து வருகிறோம். அப்படி நாம் தவறாக புரிந்துக்கொண்டிருக்கும் பழமொழியில் (அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை) இந்த பழமொழியும் ஒன்று.

இதனை நாம் அனைவருமே தவறாக தான் புரிந்து கொண்டிருக்கிறோம். அதாவது, அரசன் வசதியானவன் என்று நினைத்து கணவரை விட்டு விட்டு பெண்கள் அரசனை திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால், அரசன் நல்லவனாக இருக்க மாட்டான். இதனை நாம் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை என்று கூறுவார்கள். ஆனால், இது முற்றிலும் தவறு.

இக்கரைக்கு அக்கரை பச்சை பழமொழி விளக்கம்

அரசனை நம்பி புருஷனை விட்ட கதை:

இந்த பழமொழியை பலவற்றிற்கு எடுத்துக்காட்டாக கூறுவார்கள். உதாரணமாக ஒரு பொருள் நம்மிடம் இருக்கிறது என்றால் அதனை விட்டு விட்டு வேறொரு பொருளுக்கு ஆசைப்படுவோம். ஆனால், இறுதியில் இரண்டுமே கிடைக்காமல் போய்விடும். இதுபோன்ற இடங்களில், பெரியவர்கள் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை என்று கூறுவார்கள். இந்த பழமொழியின் உண்மையான அர்த்தமே வேறு. அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

பழமொழி:

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை

உண்மையான பொருள்:

 மரங்களின் அரசன் அரச மரம். அதிக அளவில் தூய பிராண வாயுவை வெளியிடுவதால் அரச மரத்தை சுற்றினாலோ, அதனருகில் தினம்தோறும் இருந்தாலோ பெண்கள் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். இதனால், திருமணம் ஆன பெண்கள், அரசமரத்தை சுற்றி வருவார்கள். அந்நேரத்தில் புருஷனை கவனிக்க மாட்டார்கள். இதனை தான் பெரியவர்கள் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை என்று கூறுவார்கள். இதேபோல், நமக்கு என்ன விதமான ஆசை, கனவு, லட்சியம் இருந்தாலும், அதற்கான முயற்சிகளை நாம் செய்ய வேண்டும். எந்த முயற்சியும் செய்யாமல், பிராத்தனை செய்தால் மட்டும் அதனால் எந்த பயனும் கிட்டாது. 

இதனை இன்னொரு விதமாகவும் கூறுவார்கள். பெண்கள் கற்பமுற பெரும்பாலும் தடையாக இருப்பது கர்ப்பப் பையின் வாய் சிறுத்து இருப்பது அல்லது மூடி இருப்பது தான். இதற்கு புருஷ மரத்தை அதிகாலையில் சுற்றி வந்தால் சரி ஆகிவிடும். ஆனால், நம்மில் பலருக்கும் புருஷ மரம் என்றால் என்ன என்பதே தெரியாது. புருஷ மரம் அரச மரத்தை விட அதிக பிராண வாயுவை வெளியிட கூடியது

புருஷ மரம் என்பது கிடைப்பது அரிது. எனவே, இதன் காரணமாக புருஷ மரம் கிடைக்காத நேரத்தில் அரச மரத்தை சுற்றி வருவார்கள். ஆனால் காலப்போக்கில் அனைவரும் புருஷ மரத்தை மறந்து அரச மரத்தையே சுற்ற தொடங்கினார்கள்.  இதையே அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதை என்றும்  சொல்லுவார்கள்

வசம்பை தூக்கி வாயில வைக்க என்ற பழமொழிக்கு அர்த்தம் தெரியுமா?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement