நீங்கள் அதிகம் யோசிப்பவரா ? அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சிக்குங்க…

Advertisement

Over Thinker 

இன்றைய காலத்து இளைஞர்களிடம் பெரும் பிரச்சனையாக இருப்பது அளவுக்கு அதிகமாக யோசிப்பது. இதனால் நிகழ் நிகழ்காலத்தை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். அதிகமாக யோசிப்பதால் நண்பர்கள் நம்மை வித்தியாசமாக பார்ப்பது கூட தெரியாமல் தனக்கான ஒரு உலகத்தில் அந்த நேரங்களில் இருப்பவரா நீங்கள் ? அப்படி அதிகமாக யோசிப்பதால் உங்களுக்கு ஏதேனும் நன்மைகள் உண்டா? இப்படி யோசித்து கொண்டே இருந்தால் நீ சிக்கிரம் பைத்தியம் ஆகி விடுவாய் என்று சொல்பவரும் உண்டு. அப்படி அதிகம் யோசிக்கும் நபர நீங்கள் அப்படி அதிமாக யோசிப்பதால் உங்களுக்கு நிகழும் மாற்றங்களை நீங்கள் உணராமல் இருந்து இருக்கலாம். அப்படி நமக்குள் ஏற்படும் மாற்றத்தையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

அதிகப்படியான யோசனை:

அதிகப்படியான சிந்தனை என்பது ஒரு குறிப்பிட்ட செயல் அல்லது நிகழ்வை பற்றி  அதிகமாக சிந்திப்பது, நீண்ட காலத்திற்கு அதாவது இறந்த காலம் எதிர்காலம் என்று அதிகமாக யோசிப்பது. இவ்வாறு யோசிக்கும் போது மற்ற செயல்களில் கவனம் செலுத்த முடியாது. அந்த குறிப்பிட்ட செயல் உங்களை முழுவத்துவதுமாக ஆட்கொண்டுவிடும்.

நீங்கள் அதிகமாகச் சிந்திக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள்:

1.ஒரு குறிப்பிட்ட சிந்தனை மட்டும் காணப்படும். வேறு எதையும் சிந்திக்க முடியாத நிலை  உருவாகும்.
2. சிந்தித்துக்கொண்டு இருப்பதால் உடல் சோர்வடையும் அனால் ஓய்வெடுக்க முடியாமல் தவிர்ப்பது.
3. கவலை மற்றும் நிம்மதியின்மை அதிகரிக்கும்.
4. எதிர்மறை எண்ணங்கள் அதிகம்
5. இறந்த காலத்தில் நடைபெற்ற எல்லா மோசமான சூழ்நிலைகளையும் யோசிக்க தூண்டும்.

அதிக யோசனை ஒரு சிறந்த முடிவை எடுக்க உதவும் என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் அதிகப்படியான சிந்தனை ஒரு தெளிவான முடிவை எடுக்க உதவாது.

அதிக சிந்தனை உங்கள் தூக்கத்தை கெடுக்கும். அது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்காகும்.

நீங்கள் அதிகம் யோசிக்கும் போது ஒரு செயலை தவறாக கற்பனை செய்யத்தூண்டும்.

அதிகப்படியான சிந்தனையின் வகைகள்:

over thinker

சிந்தனைகள் பல விதங்களில் உள்ளது. இதில் அதிகப்படியான சிந்தனைகள் 3 வகையாக பிரிக்கப்படுகிறது.

  1. தேவையில்லாதது ( All-or-nothing thinking )
  2. பேரழிவு தரும் (Disastrous)
  3. மிகைப்படுத்தல் (Exaggeration)

அதிகப்படியான சிந்தனையின் விளைவுகள்:

அதிகமாக யோசிப்பது மன நோய் கிடையாது. ஆனால் எதிர்காலத்தினை பற்றிய கவலைகள் அதிகரிக்கும்.

இறந்த காலத்தில் நடைபெற்றதை இப்போது யோசித்து நம்மை நாமே தவறாக உணரவைக்கும். இவை நமது மன அழுத்தத்தை அதிகரிக்க செய்யும்.

அதிகம் யோசிப்பதால் உறவுகள் இடையை விரிசலை உருவாக்கும்.

அதிகமாக சிந்திப்பதை நிறுத்துவது எப்படி?

  1. நீங்கள் அதிகம் சிந்திப்பதை நிறுத்த நினைத்தால், நீங்கள் அந்த நேரங்களில் உங்களை ஏதேனும் ஒரு வேளையில் ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். அதாவது ஒரு திரைப்படம் பார்க்கும் போது உங்கள் கவனம் சிதறாது திரைப்படத்தில் தான் இருக்கும் என்றால் அதை செய்யுங்கள். புத்தகங்கள் படியுங்கள். இப்படி உங்களை எப்போதும் பிஸியாக வைத்துக்கொள்ளவுங்கள்.
  2. அதிமாக சிந்திக்கும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு நமக்கு முக்கியமான ஒன்றா என்பதை அதனை யோசிப்பதால் நமக்கு நன்மை ஏற்படுமா என்பதை கருத்தில் கொள்ளுங்கள். அந்த குறிப்பிட்ட செயலுக்கான நேரம் அதிகம் இருக்கும் போது அதனை யோசிக்காதீர்கள்.
  3.  யோசித்தால் பசி அதிகரிக்கம். அதனால் நீங்கள் ஓய்வான நேரங்களில் நன்றாக சாப்பிட்டுவிட்டு தூங்குங்கள்.
  4. அதிகம் யோசிப்பதை நிறுத்த சுய கட்டுப்பாடு முக்கியம். அதிகம் யோசிக்கும் நேரங்களில் அந்த செயல் எனக்கு தேவையில்லை என்று அடுத்த செயலுக்கு தூங்குங்கள். இப்படி செய்வது தொடக்கத்தில் செய்யும் போது கடினமாக இருக்கும். அதை பயிற்சி செய்தல் வெற்றி பெறலாம்.
  5. உங்களால் கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் மன நல ஆலோசகரின் பரிந்துரையை பெறுவது சிறந்தது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement