வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அறிவியல் சார்ந்த பழமொழிகள்

Updated On: April 24, 2025 12:33 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

அறிவியல் சார்ந்த பழமொழிகள்

நம்முடைய வீட்டில் பெரியவர்கள் இருந்தால், நாம் ஏதேனும் தவறு செய்யும் போது அதனை சுட்டி காட்டுவதற்கு பழமொழியை கூறி தான் சொல்வார்கள். நாம் அதனை கண்டு கொள்ளாமல் கடந்து விடுவோம். ஆனால் அவர்கள் கூறும் பழமொழியில் அர்த்தங்கள் அடங்கியிருக்கும். அது போல நம்முடைய பள்ளி பருவத்தில் பழமொழிகள் மற்றும் அதற்கான அர்த்தத்தை அறிந்திருப்போம். அதன் பிறகு பழமொழிகளை படித்திருக்க மாட்டோம். அதுமட்டுமில்லாமல் பழமொழிகளை கூறும் போது அதற்கான அர்த்தம் ஒன்றாக இருக்கும், அதுவே அதனை கூர்ந்து கவனித்தால் வேறொரு அர்த்தம் உடையதாக இருக்கும். உங்களுக்கு உதவும் வகையில் நம்முடைய பதிவில் தினந்தோறும் பழமொழிகள் பற்றிய பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் அறிவியல் சார்ந்த பழமொழிகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

பழமொழி மற்றும் அதற்கான அர்த்தம்:

அடுக்களை குற்றம் சோறு குழைந்தது

ஆம்படையான் குற்றம் பெண்ணாய் பிறந்தது

இந்த பழமொழிக்கு இரண்டு அர்த்தங்கள் இருக்கிறது. அதனை பற்றி கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

சோறு குழைந்து போனதற்கு அடுப்பு தான் காரணம், சோற்றை சரியான பதத்தில் பார்த்து இறக்காமல் சமைப்பவரின் குற்றமாக இருக்கிறது என்பது மறைமுகமான அர்த்தமாக இருக்கிறது.

மற்றொரு அர்த்தத்தை அறிந்து கொள்வோம். இதில் ஆம்படையான் என்பது கணவனை குறிக்கும். இவை செய்த பாவத்தின் காரணமாக தான் பெண் பிள்ளை பிறந்தது என்பது இன்னொரு அர்த்தமாக இருக்கிறது.

இதனின் அறிவியல் ரீதியாக அர்த்தமாக பார்க்கும் போது xy என்பது ஆண்களுக்கு உரிய குரோமோசோம்கள் ஆக இருக்கிறது. ஓங்களின் உடலில் xx என்ற குரோமோசோம்கள் தான் காணப்படும். இந்த நிலையில் இருந்தால் தான் தாய்மை அடைய முடியும். மாறாக xy என்ற குரோமோசோம்கள் இருந்தால் அவரால் தாய்மை அடைய முடியாது.

ஆணிடம் உள்ள XY என்ற இரண்டு குரோமோசோம்களில், பெண்ணிடம் எது போய் இணைகிறதோ, அதைப் பொறுத்தே ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்பது தீர்மானமாகிறது.

ஆணிடமுள்ள Y குரோமோசோம், பெண்ணிடம் போய் இணைந்தால், பெண்ணிடமுள்ளு X உடன் சேர்ந்து (XY) ஆண் குழந்தை உருவாகிறது. அப்படி இல்லாமல் ஆணிடமுள்ள X குரோமோசோம், பெண்ணிடம் நிரந்தமாய் உள்ள X உடன் சேர்ந்து (XX) பெண் குழந்தை பிறக்கிறது.

இந்த அறிவியல் உண்மை புரியாமல், பெண் குழந்தை பிறப்பதற்கு, தாயே காரணம் என்று இந்த சமூகம் பெண்கள் மீது குற்றம் சுமத்தி வந்திருக்கிறது. குழந்தை பிறப்பு தொடர்பாக திருமூலர், ‘ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் பெண் ஆகும்’ என்கிறார். அதாவது ஆணிடமுள்ள Y குரோமோசோம் சென்றால், ஆண் குழந்தை பிறக்கும். பெண்ணுக்குரிய X சென்றால், பெண் குழந்தை உருவாகும் என்பதே இதன்அறிவியல் ரீதியாக அர்த்தமாக இருக்கிறது.

அன்றாட வாழ்வில் அறிவியல் பழமொழிகள்:

  • ஒரு கூழாங்கல் ஆற்றுப்படுகையில் விரைவாக ஓடும் ஆழமற்ற நீரில் உள்ளன
  • அதிக வெப்பம் எதையும் உருக்கும்
  • ஒற்றை விரலால் ஓசை செய்ய முடியா
  • நீரின்றி அமையாது உலகு
  • திறந்த வாயில்தான் தூசியும் புகும்
  • நெருப்பு இல்லாமல் புகை வராது
  • பயிர் நன்றாக வளர, மழை அவசியம்
  • பூச்சி பட்ட பழம் தான் வேகமாக பழுக்கு
  • ஒளி இல்லா இடம் இருட்டாகும்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information In Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now